படம் | Srilankabrief

நாடற்று வீடற்று கூடற்று
மிஞ்சமாய் மிஞ்சிய
சொச்ச உயிர்
பத்திரமாய் வச்சிருந்தோம்

யார் கண் பட்டதைய்யா?

பாம்புகளாய் பருந்துகளாய்
சுற்றி வளைத்த துப்பாக்கிகளும்
திட்டமிட்ட நாடகங்களும்
அரங்கேற்றம் காண வாரீர்
வடக்கு பக்கம்

யுத்தக் குற்றமா? மனித உரிமையா?
நீதி கேட்டு வாதாட்டம்
அங்கே…

கைதென்றும் கடத்தலென்றும்
சிறையென்றும் சீர்திருத்தமென்றும்
மீண்டும் ஏறும் வேதாளம்
இங்கே…

வீடு வீடாக விவரம் திரட்டி
பதிவெடு குடும்ப படமெடு
காக்கை குருவி தவிர
மீதி உயிர்க்கெல்லாம்
விசாரணை யிடு

மனித உரிமையே
ஆர்வலரே
சிறைக்கூடங்களில்
மனித உரிமை
உணர்வில்லாத
மண் கட்டியாய்

வல்லரசுகளும்
செனற் குழுக்களும்
கணக்குப்போடுங்கள்
சனல் 4 காட்சிகள்
எத்தனை வீதம்

மலாலா நீயும் சிறுமிதானே
ஐ.நா. வரை உன் குரல்
உனக்கான நீதிக்கு
உலகே ஏவம் கேட்டதன்றோ

இப்படிக்கு விபூசிகா…

ரிஷி