பட மூலம், Colombogazette

ஜனாதிபதி சிறிசேன அவர்களுக்கு எழுதப்படும் இந்தத் திறந்த கடிதம் எம் தன்னார்வத்தொண்டரொருவரால் எம்முடன் பகிரப்பட்டது. இக்கடித்தை பெறும் நபர் போன்ற மேலும் பலர் எம் சமூகத்தில் இருப்பதால் இதை எழுதுபவர் தன்னுடைய பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

ஜனாதிபதி சிறிசேன அவர்களுக்கு இலங்கை பிரஜையான ஒரு இளம் வண்ணத்துப்பூச்சியிடமிருந்து.

நான் வேலை முடிந்து வீடு சென்றுகொண்டிருந்த வேளையில் என் நண்பர் ஒருவர் சிறிசேன அவர்கள் கடைசியாக கூறிய வார்த்தைகளை எனக்கு அனுப்பினார்.

அதன் தலைப்பை பார்த்த பின் நான் அக் காணொளியை மீண்டும் மீண்டும் பார்த்தேன். அத்தலைப்பு நான் கேட்கவிருந்த விடயத்திற்கு என்னை முழுமையாக தயார்ப்படுத்தியிருக்கவில்லை. நான் அதில் கூறப்பட்ட விடயத்தைக்குறித்து பேசப்போவதில்லை. ஏனெனில் நாம் அனைவரும் இந்நேரம் அதை பார்த்தும் கேட்டும் இருப்போம்.

இந்த அறிக்கை ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் ஒன்றல்ல என்பதை நான் முதலில் தெளிவு படுத்த விரும்புகிறேன். நான் எவ்விதத்திலும் அவரின் ஆதரவாளரல்ல. அவ்விதமே நான் மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவாளருமல்ல, உங்கள் ஆதரவாளருமல்ல. ஜனாதிபதி அவர்களே, அதிகபட்ச விலைக்கு வாங்க மற்றும் விற்கக்கூடிய நிலையில் இருக்கும் இந்நாட்டு அரசியல் அமைப்பு என்னை விரக்தியடையச்செய்துள்ளது.

ஜனாதிபதி அவர்களே, நீங்கள் ரணில் விக்கிரமசிங்கவை அவரின் கொள்கை தீர்மானங்கள் அல்லது அவரின் பதவிக்காலத்தில் அவர் செய்யத்தவறிய விடயங்களைக் கொண்டு தாக்கியிருக்கலாம். ஆனால், நீங்கள் இந்நாட்டின் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான கலாசாரத்தின் காவலர், இதற்கும் கீழ் தரமிறங்க முடியாதென நாம் நினைத்த நேரத்தில் தரம் இறங்கி ரணில் அவர்களை ‘சமணலயா’ (வண்ணத்துப்பூச்சி | சம பால் நாட்டமுள்ளவர்களை இழிவு படுத்த பாவிக்குமொரு சொல்) என்ற சொல்லால் அழைத்தீர்கள். நீங்கள் ரணிலையும் அவரது குழாமையும் வண்ணத்துப்பூச்சிக் கூட்டம் என்று கூறினீர்கள். ஏனெனில் ஒருவரை இழிவுபடுத்த எத்தனிக்கும் போது மனிதத்தன்மை, மரியாதை போன்றவற்றை என்னாது இயலுமான எல்லாவற்றையும் பாவிக்க வேண்டுமென்பதாலா?

எமது கலாசாரம் சகிப்புத்தன்மையுடைய ஒன்றாக காணப்பட வேண்டும். சகிப்புத்தன்மையற்ற மற்றவர்களை இழிவுபடுத்தும் ஒன்றாக அது அமையக்கூடாது.

ஜனாதிபதி அவர்களே, வார்த்தைகளுக்கு பிரதிவிளைவுகள் உண்டு, இந்நாட்டின் மக்கள் உங்களுக்கு வாக்களித்தது நாட்டில் வாழும் எல்லா பிரஜைகளினதும் உரிமைகளைப் பாதுகாக்கவாகும். ஒரு குறிப்பிட்ட குழுவினரைப் பாதுகாக்கவல்ல. எல்லா பிரஜைகளும் என்பதை நான் வலியுறுத்திக் கூறுகிறேன். நான் உங்களுக்கு வாக்களிக்கவில்லை. ஏனெனில், ஜனாதிபதி தேர்தல் நடந்த வேளையில் நான் வாக்களிக்கும் வயதை எட்டியிருக்கவில்லை. எனினும், எனக்கு ஞாபகமிருப்பது சரியெனில் நீங்கள் மக்களின் ஆணையால் தெரிவு செய்யப்பட்டது அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கவாகும். ஆனாலும், நீங்கள் உங்கள் முன்னாள் அரசியல் நண்பர்கள் மீது இருந்த பகையினால் ஒரு குறிப்பிட்ட குழுவினைச் சேர்ந்த நபர்களை இழிவுபடுத்தத் துணிந்தீர்கள். நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரஜையையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதி இந்தளவு தரம் தாழ்ந்து செயற்பட்டது கவலைக்குரியதொரு விடயமாகும்.

ஆம், நான் இளைஞனொருவன். ஆனாலும், நான் அதிகமான துன்புறுத்தல்களுக்கும், கேலிக் கிண்டல்களுக்கும் முகம்கொடுத்திருக்கிறேன். இந்த சமூகம் பொதுவாக என்னை இழிவு படுத்தியதால் என்னை நானே வெறுத்தேன். பல இரவுகள் அழுதிருக்கிறேன். என்னை நானே காயப்படுத்தி இருக்கிறேன். இன்று நான் வயது வந்த ஒரு நபராயிருக்கிறேன், நான் ஒரு பலமுள்ள வண்ணத்துப்பூச்சி எனக்கூறுவதில் பெருமையடைகிறேன். ஆனாலும் நீங்கள் கூறியவற்றை கேட்ட அதற்கு கைத்தட்டி சிரித்து ரணில் அவர்களினதும் அவரின் நெருங்கிய குழுவினரினதும் பாலியல் நாட்டமென நீங்கள் கருதிய விடயத்தின் மூலம் சந்தோஷப்பட்ட உங்கள் ஆதரவாளர்களை கவனித்த இளையோர் அநேகர் இருக்கிறார்கள், என்னையும் விட இளமையானவர்கள் இதனை கவனித்திருப்பார்கள்.

ஒருவரின் பாலியல் நாட்டத்தை வைத்து ஒருவரை இழிவு படுத்துவது கண்டிக்கத்தக்கதொரு செயலாகும். அனைவருக்கும் பாதுகாப்பானதொரு தேசமாக நாம் இலங்கையை மாற்ற வேண்டும். அதன் மூலமாகவே நாம் ஒன்றாக பலப்பட முடியும்.

எனினும், இன்று நீங்கள் கூறிய வார்த்தைகள் இலங்கை இவ்வாறானோரை ஏற்க தயாராக இல்லை எனும் செய்தியை இளம் தலைமுறையினருக்கு வழங்கியிருக்கும். அவர்களின் ஜனாதிபதி அவர்களை தாழ்த்தி இருக்கிறார் மற்றும் அவர்களின் பாலியல் நாட்டம் பதவிகளையும் அதிகாரங்களையும் வகிப்பதில் தாக்கம் செலுத்தும் என அவர்கள் கருதியிருப்பார்கள். நாம் ஆலன் த்யுரிங், டிம் குக், எலன் டீ ஜெனெரஸ், லியோ வரடகர், ஆர்தர் சி கிளார்க் மற்றும் எல்லா வண்ணத்துப்பூச்சிகளையும் நீங்கள் கூறிய வண்ணம் வண்ணத்துப்பூச்சி வாழ்க்கை வாழ்பவர்களையும் நினைவில் கொள்வோம். இளைஞர்களுக்கு முன்னோடிகளாய் வெவ்வேறு பாலியல் நாட்டங்கள் மற்றும் தெரிவுகளை கொண்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடும் முன்மாதிரியானோரைக் காண நாம் உலக நாடுகளை நோக்க வேண்டி இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறான இளைஞர்கள் தம் சுயத்தை ஏற்று சுதந்திரமாய் பறக்கும் நாள் அருகினில் இல்லை என்பது தெரிகிறது. நிச்சயமாக அவர்களை இழிவுபடுத்தும் ஒரு ஜனாதிபதி இருக்கும் போது இது சாத்தியமானதல்ல.

நாம் எம் பிள்ளைகளுக்கு அவர்கள் யாராய் இருந்தாலும் அவர்கள் நேசிக்கப்படுவார்கள் என கூறும் நாள் இந்நாட்டில் எப்போது வரும் என்பதை அந்த இறைவனே அறிவார். இதற்கு முன்னாள் இருந்த அரசாங்கமும் வேறுபட்ட பாலியல் நாட்டங்கள் மற்றும் விருப்பங்கள் உடைய நபர்களுக்கு எந்த ஒரு நன்மையையும் செய்யவில்லை. அவர்கள் இவ்வாறான மக்களின் சமூக நிலையை மேம்படுத்த எந்தவொரு ஊக்கமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்ற போதிலும் அவர்கள் இவாறான மக்களை முழு நாட்டின் முன்னும் ஒரு கேலிப்பொருளாய் காண்பிக்கவில்லை.

ஜனாதிபதி அவர்களே நன்றி. நீங்கள் கூறிய கருத்துக்கள் என்னை மேலும் பலமடையச் செய்துள்ளன.

வேறுபட்ட பாலியல் நாட்டம் தெரிவுகள் கொண்டோருக்கு நான் கூறுவது இதுவே, நீங்கள் உங்கள் குறித்து கருதும் விதத்தை இந்தச் சம்பவம் பாதிக்க இடமளிக்காதீர்கள். நீங்கள் ஏனைய மனிதனைப் போல உங்கள் எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் கனவுகளை அடையலாம். மற்றவர்களின் வார்த்தைகள் உங்கள் முன்னேற்றத்தை தடுக்க இடமளிக்க வேண்டாம். எந்நேரத்திலும் முன்னோக்கிச்செல்லுங்கள். அதன் மூலமே நாம் பலமுள்ளவர்களாவோம்.

Hashtag Generation