இன்று சர்வதேச தகவல் அறியும் தினமாகும்.
அரசு நிர்வாகம் என்றாலே எல்லாமே ரகசியம்தான் என்றிருந்த நிலையை அடியோடு மாற்றியமைத்தது 2016இல் தேசிய அரசாங்கம் நிறைவேற்றிய தகவல் அறியும் உரிமைச் சட்டம். இதன் மூலம் இலங்கை தகவல் அறியும் உரிமையை சட்டமாக்கிய உலக நாடுகளுள் 108ஆவதாக இணைந்துகொண்டது. மைத்திரிபால – ரணில் அரசு ஏற்றுக்கொண்டு முழுமையாக அமுல்படுத்திய சீர்திருத்தம் இதுவாகும். அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பொதுமக்கள் கேட்டுப் பெறுவதற்காக இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இலங்கையைப் பொறுத்த வரையில் தகவல் அறியும் சட்டத்தை ஊடகவியலாளர்களே பரவராகப் பயன்படுத்தி வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. இதனை மறுக்கும் தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் முன்னாள் சட்ட ஆய்வாளரும் மனித உரிமைகள் சட்டத்தரணியுமான மதுரி புருஜோத்தமன், ஊடகவியலாளர்களை விட பொதுமக்கள்தான் ஆர்.டி.ஐ. ஐப் பயன்படுத்துவதாகக் கூறுகிறார். அதுவும் கொழும்பு போன்ற நகர்புற மக்களை விட வெளிப்பிராந்தியங்களைச் சேர்ந்தவர்கள் ஆர்.டி.ஐ. விடயத்தில் அதிக அக்கறை காட்டுவதாகவும் மதுரி புருஜோத்தமன் கூறுகிறார்.
இலங்கையில் தகவல் அறியும் சட்டத்தின் பயன்பாடு குறித்து மதுரி புருஜோத்தமன் வழங்கும் விளக்கத்தை கீழ்காணும் வீடியோ பதிவில் பார்க்கலாம்.