“1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கலவரம் இடம்பெற்ற கொழும்பு இன்று முற்றிலும் மாறுபட்டு காணப்படுகின்றது. 35 வருடங்களுக்கு முன்னர் இங்கு இடம்பெற்ற கறுப்பு ஜூலையை நினைவுகூர்வதற்கான நினைவுச் சின்னமோ, நினைவிடமோ இல்லை. யார் யார் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற பெயர் விவரம், சொத்து இழப்புகள் குறித்து எந்த பதிவுகளும் இல்லை. சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் பதிவுகள் காணப்பட்டாலும் அவை பக்கச்சார்பானவையாகவே காணப்படுகின்றன. வரலாற்று உணர்வோடு எவையும் எழுதப்படுவதில்லை.”

ஜூலை கலவரம் இடம்பெற்று 35 வருடங்களாவதை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு துறைசார்ந்தவர்களை நேர்க்காணல் கண்டுவருகிறது. 83ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தை ஆவணப்படுத்துவது, அதனை எவ்வாறு அடுத்த தலைமுறையினருக்கு அறியச் செய்வது, நினைவுச் சின்னங்கள் அமைப்பதன் அவசியம் குறித்து மனித உரிமை உரிமை செயற்பாட்டாளரான சி. கிரிஷாந்த் பேசுகிறார்.


ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரை, #BlackJuly: 3 நாட்கள் கோயிலில் சிறைப்பட்டிருந்த ஜெகதீஸ்வர சர்மா