பட மூலம், Sunday Observer

பொதுச் சேவையில் ஈடுபடும் அதிகாரிகளையும், கல்வியியலாளர்களையும் குறிவைத்து சில தனிநபர்களினால் முன்வைக்கப்படும் வன்மத்தன்மை மிக்க கருத்துக்களை இட்டு இலங்கையின் கல்விச் சமூகத்தினைச் சேர்ந்த நாம் மிகவும் அச்சமடைகின்றோம்.

இன்றைக்குச் சில மாதங்களுக்கு முன்னர் முன்னாள் இராணுவப் பிரமுகர்களின் தலைமையிலான ஒரு குழுவினர் புதிய அரசியலமைப்புக்குச் சார்பாகச் செயற்படும் தனிநபர்கள் யாவரும் இலங்கையின் இறையாண்மைக்கும், ஆட்புல‌ ஒருமைப்பாட்டுக்கும் எதிராகச் செயற்படும் துரோகிகள் எனக் கருதப்படல் வேண்டும் என ஊடகங்களின் முன்னிலையிலே கருத்துக்களை வெளியிட்டனர். அவ்வாறான நபர்கள் தமது துரோகத்தனமான நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்தினால் பொறுப்புக்கூறுவதற்கு  உட்படுத்தப்படல் வேண்டும் எனவும், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படல் வேண்டும் எனவும், அத்துடன் எதிர்காலத்திலே புதிய அரசாங்கம் பதவிக்கு வந்ததன் பின்னர் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

ஊடகங்களின் வாயிலாக, குறிப்பாகக் கடந்த சில மாதங்களாகப் பரப்பப்படும் இவ்வாறான கூற்றுக்களுக்கு எதிராக எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இவ்வாறான அறிக்கைகளின் வீடியோப் பதிவுகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன.

இவ்வாறான அபாயகரமான, வெறுக்கத்தக்க கருத்து வெளியிடற் போக்கின் மிகவும் சமீபத்திய வடிவமாக இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரும், சிரேஷ்ட கல்வியியலாளருமாகிய கலாநிதி தீபிகா உடுகமவுக்கு எதிராக மவ்பிம என்ற பத்திரிகையில் கடந்த ஜூன் மாதம் 29ஆம் திகதி செய்தி அறிக்கை வடிவிலே பிரசுரிக்கப்பட்ட கருத்துக்களை நாம் நோக்குகிறோம். கலாநிதி உடுகம சில அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு பேச்சாளர் போல செயற்படுவதாகவும், இலங்கையின் இராணுவத்தினரைப் பாதிக்கும் வகையிலே செயற்படுவதாகவும் அவருக்கு எதிரான பிரசாரத்தினை அந்த அறிக்கை கொண்டிருந்தது. இலங்கையின் இராணுவத்தினைச் சேர்ந்தோர் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையிலே சேருவதனை கலாநிதி உடுகம தடுத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டும் அவரினை நோக்கி முன்வைக்கப்பட்டிருந்தது. முன்னர் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிலே வெளியாகி இருந்த இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு எதிரான தனது பதிலினை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது என்பதனை நாம் இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.

மேற்குறிப்பிடப்பட்ட கருத்துக்கள் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் உயிருக்கும் சுதந்திரத்துக்கும் எதிராக வெளியிடப்பட்ட கருத்துக்கள் மாத்திரமன்றி, இவ்வாறான வன்மத்தனமான கருத்துக்களை முன்வைப்பவர்களின் அரசியற் கருத்துக்களுடன் உடன்படாத பொது அலுவலர்கள், கல்வியியலாளர்கள் மற்றும் இந்த நாட்டின் பிரஜைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களாகவும் அமைகின்றன. வெறுப்பினை விதைப்பனவாகவும், மானபங்கப்படுத்தும் நோக்கிலும் பரப்பப்படும் இவ்வாறான கருத்துக்கள் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுப்பனவாகவும், தனிநபர்களின் பாதுகாப்புக்குப் பங்கமாகவும் அமைகின்றன. இந்த வகையில் இவ்வாறான கருத்துக்களினை வெளியிடுவோர் சட்டத்தின் பார்வையில் தண்டனைக்குட்படுத்தப்படக் கூடியவர்கள். மாற்றுக் கருத்துக்களை உடையவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் இவ்வாறான குற்றவியல் தன்மை மிக்கதும், பாசிசத் தன்மை மிக்கதுமான கருத்துக்கள் எமது சமூகத்தின் சில தரப்புக்களின் மத்தியில் பிரபல்யம் பெற்று வரும் துரதிர்ஷ்டவசமான போக்கினை நாம் கவலையுடன் சுட்டிக்காட்ட வேண்டி இருக்கிறது.

இவ்வாறான கருத்துக்களின் தீவிரத்தன்மையினையும், அபாயகரத்தன்மையினையும் கருத்திலே எடுத்து இவ்வாறாக அரச அலுவலர்களதும், கல்வியியலாளர்களதும், நாட்டின் பிரசைகளதும் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், வெறுப்பினை விதைக்கும் தனிநபர்களுக்கும், குழுக்களுக்கும் எதிராக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நாம் அரசாங்கத்தினைக் கோருகிறோம். நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் அரசியல் அமைப்பு சபையினர் போன்றவர்கள் தமது பார்வையின் கீழ் நியமிக்கப்பட்ட பொதுச் சேவை அலுவலர்களைப் பாதுகாக்கும் வகையில் இடையீடுகளை மேற்கொண்டு செயற்படுவது மிகவும் முக்கியமானது என நாம் இங்கு வலியுறுத்துகிறோம். நாட்டில் உள்ள ஊடக நிறுவனங்கள் பொறுப்புணர்வுடனும், நெறிமுறை தவறாது செயற்பட வேண்டும் எனவும், தனிநபர்களின் உயிருக்கு ஆபத்தினைத் தோற்றுவிக்கும் வகையிலான வெறுப்புக் கருத்துக்களினை எதிர்காலத்திலே பிரசுரிப்பதனைத் தவிர்க்குமாறும் நாம் கேட்கிறோம்.

கல்வியியாலளர்களின் சமூகம் என்ற வகையில் ஒன்றுபட்டு இவ்வாறான வெறுப்புணர்வினைத் தோற்றுவிக்கும் அறிக்கைகளையும், கூற்றுக்களையும் நாம் கண்டிக்கிறோம். நாம் வேறுபட்ட அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், வன்முறை, அச்சுறுத்தல் மற்றும் உணர்வுகளைத் தூண்டிப் பிரபல்யம் பெற முயற்சிக்கும் அரசியல் போன்றவற்றினைத் தவிர்த்து, ஒருவருடன் ஒருவர் தமது வேறுபட்ட கருத்துக்களைப் பகிரக் கூடிய நிலைமை ஜனநாயகத்தினை மதிக்கும் சமூகம் ஒன்றின் அடிப்படைப் பண்பாக இருக்க வேண்டும் என்பதனை நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம்.

 1. Prof Sarath B.S Abayakoon, University of Peradeniya
 2. Emeritus Professor Jayadeva Uyangoda, University of Colombo
 3. Prof O.G Dayaratne-Banda, University of Peradeniya
 4. Prof Sumathy Sivamohan, University of Peradeniya
 5. Dr Ramya Kumar, University of Jaffna
 6. Dr Sudesh Mantileke, University of Peradeniya
 7. Prof Gamini Keerawella, University of Peradeniya
 8. Dr Samanmala Dorabawila, University of Peradeniya
 9. Dr Harshana Rambukwella, Open University of Sri Lanka
 10. Prof A. Navaratne-Bandara, University of Peradeniya (Retd.)
 11. Chetana Karunatilaka, University of Peradeniya
 12. Dr R Ramesh, University of Peradeniya
 13. Prof Upul Abeyratne, University of Peradeniya
 14. Dr Kalana Senaratne, University of Peradeniya
 15. Prof Carmen Wickramagamage, University of Peradeniya
 16. Emeritus Professor Kamala Liyanage, University of Peradeniya
 17. Dr Ranga Kalugampitiya, University of Peradeniya
 18. Emeritus Prof Savitri Goonesekere, University of Colombo
 19. Dr Shyamani Hettiarachchi, University of Kelaniya
 20. Dr Dinesha Samararatne, University of Colombo
 21. Prof Theodore Fernando, Open University of Sri Lanka
 22. Dr Athula Samarakoon, Open University of Sri Lanka
 23. Dr G. Bandarage, Open University of Sri Lanka
 24. Dileepa Witharana, Open University of Sri Lanka
 25. Dr Shavindra Dias, University of Peradeniya
 26. Dr Harini Amarasuriya, Open University of Sri Lanka
 27. Dr Anil Jayantha Fernando, University of Sri Jayawardenapura
 28. Prof K.K.I.U Aruna Kumara, University of Ruhuna
 29. Prof Prabhath Jayasinghe, University of Colombo
 30. Mahendran Thiruvarangan, University of Peradeniya
 31. S. Jeyasankar, Eastern University
 32. G.A Karunatilaka, University of Kelaniya
 33. Dr Kaushalya Perera, University of Colombo
 34. Prof Dileni Gunawardene, University of Peradeniya
 35. Dr Mahim Mendis, Open University of Sri Lanka
 36. Dr Nirmal Ranjith Dewasiri, University of Colombo
 37. Dr Ruvan Weerasinghe, University of Colombo
 38. Dr Ranil Abayasekera, University of Peradeniya
 39. Dr Kumari Jayawardene, University of Colombo (Retd.)
 40. Dr Ramila Usuf, University of Peradeniya
 41. Dr Nalini Hennayake, University of Peradeniya
 42. Prof Priyan Dias, University of Moratuwa
 43. Emeritus Professor P. Wickramagamage, University of Peradeniya
 44. Dr Kanchuka Dharmasiri, University of Peradeniya
 45. Dr A. Rameez, Southeastern University
 46. Dr S.N. Morais, Open University of Sri Lanka
 47. Prof Camena Gunaratne, Open University of Sri Lanka
 48. Prof Charmalie Abayasekera, University of Peradeniya
 49. Dr Chandana Aluthge, University of Colombo
 50. Prof Rohan Fernando, Open University of Sri Lanka
 51. Dr Farzana Haniffa, University of Colombo
 52. Prof Premakumara de Silva, University of Colombo
 53. Dr Pavithra Kailasapathy, University of Colombo
 54. Madhubashini Dissanayake Ratnayake, University of Sri Jayawardenapura