கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதியுடன் புதிய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் முடிவுக்கு வந்தது. இந்த வேலைத்திட்டத்திற்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருந்த இணையதளத்தில் 25 வாக்குறுதிகளில் 10 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 100 நாள் வேலைத்திட்டம் குறித்து மக்கள் மத்தியில் சாதகமான விமர்சனங்களும், காரசாரமான விமர்சனங்களும் வந்த வண்ணமுள்ளன.

ஆகவே, இது குறித்து கொழும்பில் வாழும் மக்களிடம் கருத்து கேட்க ‘மாற்றம்’ முடிவு செய்தது. 100 நாள் வேலைத்திட்டம் பலன் வாய்ந்ததா? புதிய அரசு எவ்வாறு செயற்படுகிறது போன்ற கேள்விகளை கேட்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

மக்களுடன் பேசியதில், பெரிதளவில் 100 நாட்கள் வேலைத்திட்டம் குறித்தும், 100 நாட்கள் பூர்த்தியடைந்தது குறித்தும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. பொருட்கள் விலை ஓரளவு குறைந்திருக்கிறது. ஆனால், தங்களால் அவற்றை அனுபவிக்க முடியாமல் இருப்பதாக அவர்கள் கூறுகினார்கள். அரச ஊழியர்கள் மட்டுமா மனிதர்கள்? எங்களது சம்பளத்தை யார் அதிகரிப்பது போன்ற கேள்விகளையும் எழுப்பினர்.

சிலர் புதிய அரசை ஆதரிப்பவர்களாக இருந்தனர். ஒரு சிலர் இன்னும் தாங்கள் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் செய்ததை மறக்கவில்லை என்றும் கூறினர்.

அதேவேளை, நூறு நாட்களுக்குள் செய்யவிருப்பதாகத் தெரிவித்திருந்த சீர்த்திருத்தங்கள், முக்கியமாக 19ஆவது சீர்த்திருத்தம், கொண்டுவரவிருப்பதாக கூறப்பட்ட தகவல் அறியும் சட்டம் மூலம் குறித்து மக்களிடம் கேட்டால் அது குறித்து அவர்கள் எதையும் அறிந்திருக்கவில்லை.

அத்தியாவசிய பொருட்கள் விலை குறைக்கப்பட வேண்டும், சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது பொதுவான கோரிக்கையாக இருந்தது.

புதிய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து பெரும்பாலானவர்கள் அதிருப்தி கொண்டிருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது.

100 நாள் வேலைத்திட்டம் குறித்து மக்களின் புகைப்படங்களுடன் அவர்கள் கூறிய கருத்துகளை Microsoft’s new Sway platform ஊடாக புகைப்படக் கட்டுரையாக பதிவு செய்துள்ளோம். இது Microsoft நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட புதிய சமூக ஊடக தளமாகும். இது கணினி, மடிக்கணினி, ஸ்மார்ட் போன் போன்றவற்றுக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.

Sway platform இல் மக்களின் கருத்துக்களைப் பார்க்க கீழே/ படங்களை கிளிக் செய்யவும்.

மைத்ரியின் 100 நாள் வேலைத்திட்டம்: மக்கள் என்ன சொல்கிறார்கள்?

Screen Shot 2015-05-07 at 1.29.33 PM

Screen Shot 2015-05-07 at 12.57.46 PM

Screen Shot 2015-05-07 at 12.56.29 PM

Screen Shot 2015-05-07 at 12.58.10 PM