படம் | TAMILGUARDIAN
இன்று இலங்கையில் ஏற்பட்டுள்ள ஜனாதிபதி தேர்தல் நிலைமை நிறைவேற்று அதிகாரத்தினை மூன்றாவது தடவைக்கு எடுத்து சர்வாதிகார ஆட்சியினை ஏற்படுத்துவது ஆகும் அல்லது நிறைவேற்று சர்வாதிகாரியினை இல்லாது செய்யும் மாற்றம் ஆகும். இதற்கு உலக நாடுகளில் நிகழ்ந்த உதாரணங்களை மேற்கோள் காட்டுதல் மிகவும் சுலபமாக விளங்கக்கூடியதாக அமையும்.
நிறைவேற்று சர்வாதிகாரியாக மூன்று தடவையும் தொடர்ந்தவரான பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினன்ட் மார்க்பேகான், 1965 பதவிக்கு வந்து, 1969இல் இரண்டாவது தடவை போட்டியிட்டு வென்று, 1972 மூன்றாவது தடவை இராணுவ ஆட்சியை பிரகடனம் செய்து 1986 வரை ஆண்டு வந்தார். இவரின் சர்வாதிகார ஆட்சியால் பிலிப்பைன்ஸ் வறுமைக்கு சென்று, இன்று உலகில் விபச்சாரத் தொழிலுக்கு பெயர் போன நாடாக பிலிப்பைன்ஸ் உருவானது. அதுபோன்ற நிலைமை இலங்கைக்கு ஏற்படக்கூடாது. அடுத்து பெருநாட்டின் ஜனாதிபதியாக அல்பர்ட்டோ புஸிமோரி 199இல் தேர்தலில் வெற்றி பெற்று 199இல் இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு, 2000இல் சட்டத்தை திருத்தி மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக உருவானார். மேற்கூறிய இருவரும் பயங்கரவாதத்தினை ஒழித்தல், பொருளாதாரத்தை மீட்டெடுத்தல் என்ற தொனிப்பொருள்களையே மக்களுக்குச் சாட்டாகச் சொன்னார்கள். அவ்வாறே இன்றைய இலங்கையின் நிலை. தென்கொரியாவில் 1961இல் பாக் சுங் கீ இராணுவச் சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றி 1963இல் ஜனாதிபதி தேர்தலை நடத்தி 1971இல் மூன்றாவது தடவையும் போட்டியிட யாப்பினை திருத்தி அமைத்தார். பின் 1979 வரை, சொந்தப் பாதுகாப்புப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்படும் வரை எதேச்சை அதிகாரியாக இருந்தார்.
இன்று இலங்கையிலும் அதேமாதிரியான நிலைமை காணப்படுகின்றது. அடுத்து சர்வாதிகார ஆட்சி, மாற்றப்பட்டாலும் வன்முறைகள் ஏற்படும் சூழல் ஏற்படும் என்பது மறுப்பதற்கு இல்லை. இதற்கு எகிப்து, ஈராக் போன்ற நாடுகளின் அண்மைய நிகழ்வுகளை உதாரணங்களாகக் கூறலாம். இதற்கு கட்டியமாக கோட்டாபயவிற்கு எதிராக சரத் பொன்சேகா, தனக்குப் பாதுகாப்பு அமைச்சுப் பதவி வேண்டும் என்ற செய்தியும், பீல்ட் மார்சல் பதவி தரப்படல் வேண்டும் என்ற கேள்வியும் மக்களை ஐயப்பட, குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது.
1. இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சிங்கள அரசியல்வாதிகள் திரும்பக் காரணம்.
- குடும்ப அதிகாரம்
- இராணுவ அதிகாரம்
- புலனாய்வு அதிகாரம்
- நீதி இன்மை
- திடமற்ற வெளிவிவகாரக் கொள்கை
- நிறைவேற்று அதிகார எதேச்சை
- எதிர்கட்சிகளின் அபிலாசைகளுக்கு இடம் தராமையினால் எதிர்க்கட்சிகள் கூட்டிணைந்து உள்ளனர்.
- ஊழல்
- ஜனநாயக விரோதம்
- ஊடக சுதந்திரம் இன்மை
2. சிங்கள அரசியல்வாதிகள் திரும்பக் காரணம்.
- பொருளாதாரச்சுமை
- வேலை வாய்ப்பின்மை
- பொருட்களின் விலையேற்றம்
- போதைப்பொருள் வர்த்தகம்
- காட்டுமிராண்டித்தனம்
3. தமிழ் மக்கள் எதிர்க்கக் காரணம்.
- இனப்படுகொலை
- அரசியலமைப்பு மாற்றம்
- போர்க்குற்றம்
- ஆக்கிரமிப்பு
- தமிழின எதிர்ப்பு
4. இஸ்லாமிய மக்கள் எதிர்க்கக் காரணம்.
- பௌத்த தீவிரவாதம்
5. மலையக மக்கள் எதிர்க்கக் காரணம்.
- வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு
- அடிப்படை வசதிகள் இன்மை
- உரிய வேதனம் இன்மை
6. சீனச்சார்பு முதலீடுகள்
- இந்திய விரோதச் செயல்கள்
- இந்தியாவிற்கு தொல்லை கொடுக்கும் கடற்படையை வைத்திருத்தல்.
- பாகிஸ்தான் உளவு அமைப்புக்களின் செயற்பாடுகள்
- மேற்கத்தைய விரோத செயல்கள்
மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். அன்றேல் பிலிப்பைன்ஸ், பெரு, தென்கொரியா போன்ற நாடுகளில் நிகழ்ந்தது போல் இராணுவச் சர்வாதிகாரத்திற்கு சென்றுவிடும். இலங்கையின் பொது நிர்வாகம், வெளிவிவகாரம் உட்பட பல கட்டமைப்புக்களின் இராணுவ நிர்வாகம் உட்புகுத்தப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி வேலைகளிலும் இவ்வாறே திறமைக்கு முதன்மை கொடுக்கும் தன்மை பொதுச்சேவையாயினும் சரி, பல்கலைக் கழகங்களாயினும் சரியில்லை.
ஜனநாயக முறையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டாலும் நிர்வாக அலகுகளிலும் பல முரண்பாடுகள் தோன்றலாம். எகிப்து, ஈராக் போன்ற நாடுகளில் சர்வாதிகார ஆட்சியின் பின் ஏற்பட்ட அமைதி இன்மை இங்கு ஏற்படலாம் என்ற விழிப்பும் எமக்கு இன்றியமையாததாகின்றது.
யுத்த வெற்றியினால் அதிக வாக்குகளைக் கவரமுடியாது. ஏனெனில், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிப்பாய்களின் சமூக உளப் பிரச்சினைகள் தீர்க்கப்படாத பிரச்சினையாகவும் அடையாளம் காணப்படாத பிரச்சினையாகவும் தென்பகுதியில் உள்ளது. இராணுவ அதிகாரிகள் தற்போது உயர் இராஜதந்திர, அரசியல் பகுதிகளில் உள்வாங்கப்பட்டுவிட்டனர். பலர் வர்த்தகர்களாக மாறிவிட்டனர். ஆனால், காலிழந்த, அவயங்கள் பாதிக்கப்பட்ட, விதவைகளான இராணுவக் குடும்பங்கள் பாதிப்புக்களை எதிர்நோக்குகின்றன.
யுத்த வெற்றியினை இரண்டு வேட்பாளர்களும் குரங்கிடம் அப்பத்தினை பிரிக்கவிட்ட மாதிரி தேர்தலில் பிரச்சாரம் செய்யலாம். ஆனால், யுத்தத்தில் வென்றவர்கள் தோற்றனர் என்பதே இன்றைய தென்னிலங்கை அரசியல் நெருக்கடியின் உண்மைத்தன்மையாகும்.