பட மூலம், Eranga Jayawardena Photo, news.yahoo

தேர்தலுக்குப் பின்னர் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதி குறித்து இன்றைய தினம் (ஏப்ரல் 10) டெய்லி மிரரில் வெளியாகியுள்ள கட்டுரையையும், தி ஐலண்ட் பத்திரிகையில் வெளியாகியுள்ள இரு விடயங்களையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். லாக்டவுன் செய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணத்தில் இருக்கும் நான் இந்த சந்தர்ப்பத்தில் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் என்ற அடிப்படையில் பி.பீ. ஜயசுந்திரவின் கடிதத்திற்கு பதிலை எழுதுகிறேன்.

கலாநிதி ஜயசுந்தர டெய்லி மிரர் பேட்டியை பிழையாக ஆரம்பிக்கின்றார். தேர்தல் ஆணைக்குழுவிற்கு எழுதிய கடிதத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர தேர்தலிற்கான திகதியை நிர்ணயிப்பது தேர்தல் ஆணைக்குழுவின் கடமை எனவும், அரசமைப்பின் 129ஆவது சரத்தின் கீழ் உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். அவர் ஒரு முக்கியமான விடயத்தை தவறவிட்டுள்ளார். உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறவேண்டியது அவசியமானதாகும்.

ஆம். தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்கவேண்டியது தேர்தல் ஆணைக்குழுவின் கடமையாகும். ஆனால், அரசமைப்பு நெருக்கடியைத் தவிர்க்கவேண்டியது வேறு எவரையும் விட ஜனாதிபதியின் கடமையாகும். அவரால் மாத்திரமே நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற முடியும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி மூன்று மாதத்திற்குள் புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான திகதி காணப்படவேண்டும் என்ற [அரசியலமைப்பின் 70(5) (அ)] அரசமைப்பின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நாங்கள் திகதியை நிர்ணயிக்க முடியாது என்பதை தெளிவாக தெரிவித்திருக்கின்றோம். இதன் காரணமாக நாடாளுமன்றம் கூடவேண்டிய திகதியாக ஜூன் 2 ம் திகதி காணப்படுகின்றது.

​இதனை விட முக்கியமாக நேற்றைய (ஏப்ரல் 9) ஐலண்ட் பத்திரிகையின் தலையங்கத்தின் படி ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 24ஆவது பிரிவின் முழு விதிகளின் அடிப்படையில் தேர்தல் ஆணைக்குழு செயற்பட தவறிவிட்டது எனத் தெரிவித்து ஆணைக்குழுவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளதுடன், சட்டத்தின் 24ஆவது பிரிவின் படி (3) தேர்தல் ஆணைக்குழு தேர்தலிற்கான புதிய திகதியை அறிவித்திருக்கவேண்டும் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஜயசுந்தர தவறாகப் புரிந்துகொண்டுள்ளார், தேர்தல் சட்டத்தின் 24 பிரிவு(3) எந்தத் தேர்தல் மாவட்டத்திலும் அவசரநிலை காரணமாகவோ அல்லது எதிர்பாராத  சூழ்நிலை காரணமாகவோ ஏற்கனவே குறிப்பிட்ட திகதியில் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில், தேர்தல் ஆணையகம் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி 14 நாட்களிற்கு முன்னர் இன்னொரு திகதியை அறிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. ​அவசரமான சூழ்நிலை அல்லது எதிர்பாராத சூழ்நிலை காரணமாக பிரிவு 24(1)இன் கீழ் குறிப்பிட்டுள்ள திகதியின் கீழ் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தேர்தல் திகதியை அறிவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளது. வர்த்தமானியில் குறிப்பிட்ட திகதியிலிருந்து 14ஆவது நாளிற்கு முன்னதாக  அந்தத் திகதி காணப்படவேண்டும் எனவும் பிரிவு 24(3)இல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஜயசுந்தர, வெளியிடவேண்டும் என தெரிவிக்கவேண்டும், வெளியிட்டிருக்கவேண்டும் என தெரிவித்திருக்கக்கூடாது. எங்களால் இன்னமும் திகதியை வெளியிடமுடியும், இதற்கான கால அளவு எதுவும் முன்வைக்கப்படவில்லை. மேலும் அந்த சொல் எங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும்.

கலாநிதி ஜயசுந்தர மேலும்  இவ்வாறு கூறுகிறார், ஜனாதிபதியின் ஆலோசனையின் அடிப்படையில் தேர்தலை 28.5.2020இற்கு முன்னதாகவோ அல்லது அதற்கு பின்னரோ நடத்த முடியாது  என்பதை தெரிவிக்க முடியாது. முதலாவது ஆலோசனை யாருக்கு? இரண்டாவதாக, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ இவ்வாறு தெரிவித்தார் என ஏப்ரல் 9 ஐலண்டில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய திகதி குறித்து ஜனாதிபதியும் தேர்தல் ஆணையகமும் எவ்வாறு அரசமைப்பு மற்றும் நாடாளுமன்ற தேர்தல் சட்டங்களின் அடிப்படையில்  இணக்கப்பாட்டிற்கு வரமுடியும் என்ற சாமிந்திர பெர்டினாடோவின் கேள்விக்கு விஜயதாச ராஜபக்‌ஷ, அரசமைப்பின் தற்போதைய ஏற்பாடுகளின் அடிப்படையிலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் கீழோ இந்த விவகாரத்திற்குத் தீர்வைக் காணமுடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது, அரசமைப்பு முட்டுக்கட்டை நிலைக்கு வாய்ப்புள்ளது என ஜனாதிபதியின் விசுவாசி தெரிவித்துள்ளார்.

“இது தங்கள் வாக்குரிமையை செலுத்துவதற்கு இந்த நாட்டின் மக்களுக்கு உள்ள உரிமை என்பதை கடுமையாக வலியுறுத்துகிறேன், இது அவர்களது இறைமை” என பி.பி. ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை, இதன் காரணமாகவே நாடாளுமன்றம் மீண்டும் ஜூன் 2ஆம் திகதி கூடும் விதத்தில் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணையகம் தெரிவிக்கின்றது. நாங்கள் அதனை அடிப்படையாகக் கொண்டு திகதியை நிர்ணயித்தால் இரண்டு விடயங்கள் இடம்பெறும். கொவிட்-19 குறித்த அச்சத்தில் உள்ள மக்கள் வாக்களிப்பதற்காக வரிசையில் நிற்க மாட்டார்கள். இதன் காரணமாக அவர்கள் வாக்களிப்பதற்கான தங்கள் உரிமையை இழப்பார்கள், நாங்கள் தேர்தலுக்கு அவசரப்படாமல் நிலைமையை அவதானித்தால் அவர்கள் வாக்களிப்பதற்கான தங்கள் உரிமையை இழக்கமாட்டார்கள். மக்களின் வாக்குரிமை குறித்த அவர்களின் அக்கறை எனக்கு நேர்மையற்றதாகவும், குழப்பமானதாகவும் தோன்றுகின்றது. இந்தத் தருணத்தில் அவசரமாக உள்ள தேசிய நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு பதில் குறுகிய அரசியல் நோக்கங்களை கொண்டதாக இது காணப்படுகின்றது.

இரண்டாவதாக, நாங்கள் மேலே சிந்தித்த சூழ்நிலை இல்லாவிட்டால், உலகளாவிய நோய் தொற்று எப்போது முடிவிற்கு வரும் என நாங்கள் மதிப்பிட்டு, நாங்கள் ஒரு திகதியை நிர்ணயித்த பின்னரும் உலகளாவிய நோய் தொற்று தொடருமானால் மக்கள் வாக்களிக்க செல்வார்கள், வரிசையில் நிற்பார்கள், வைரஸினை பரப்புவார்கள். அல்லது 1990இல் விடுதலைப் புலிகள் வாக்களிப்பவர்களுக்கு விடுத்த மரண அச்சுறுத்தல் காரணமாக பத்து வாக்கிற்கும் குறைவாக பெற்று ஈ.பி.டி.பியினர் நாடாளுமன்ற உறுப்பினர்களானது போன்ற நிலை ஏற்படலாம்.

கலாநிதி ஜயசுந்தர தனது வலியுறுத்தலின் போது இன்னொரு முக்கியமான விடயத்தை தவறவிட்டுள்ளார், “அரசமைப்பின் 129 பிரிவின் படி உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையை பெறவேண்டிய தேவை எழவில்லை.” இது ஜூன் 2, 2020 திகதியன்று இலங்கையின் அரசமைப்பு மற்றும் தேர்தல்கள் சட்டம் மீறப்படும். தேர்தல் ஆணைக்குழுவில் உள்ள நாங்கள் நிபுணத்துவம் வாய்ந்தவர்கள், வாழ்க்கையை தேர்தல்களில் செலவிட்ட மக்கள் நாங்கள். ஜூன் 2ஆம் திகதி புதிய நாடாளுமன்றம் கூடுவதற்கான வாய்ப்பேயில்லை என உறுதியாக கருதுகிறோம். கொவிட்-19 மாத்திரம் இதற்கான தடையில்லை, நாங்கள் எதிர்கொள்ளவுள்ள  அளவுக்கதிகமான விடுமுறைகளும் இதற்கு காரணம். மங்களகரமான நாளிற்காக காத்திருக்கும் எங்களின் தேசிய மனோபாவமும் ஒரு காரணம்.

ஏற்கனவே புதுவருடம் மற்றும் வெசாக்கின் போது கட்டாயமாக தொழிலாளர்கள் வேலைக்கு வரமாட்டார்கள். இதுவே தானாக, ஜூன் 2ஆம் திகதியை நாங்கள் கற்பனை செய்வதை விட சாத்தியமற்றதாக்குகின்றது. அனுராதபுரம் போன்ற அதிகளவு வாக்காளர்கள் (இராணுவத்தினர்) உள்ள பகுதிகளிலில்  வந்திருக்கவேண்டிய வாக்காளர் அட்டைகளில் குறைவானவையே ஊரடங்கு ஆரம்பித்தவேளை வந்துள்ளன. மங்களகரமான நாளிற்காக காத்திராமல் எங்களால் கட்டுப்படுத்த முடியாத தபால் ஊழியர்கள் ஏனைய பதிவுத்தபால்களை வழங்குவார்களா?

ஜனாதிபதி கூட பணியாளர்கள் விடுமுறையால் அவதிப்படுகின்றார் என நான் கருதுகின்றேன். ஏப்ரல் ஆறாம் திகதி வெளியான அவரது இரண்டு பக்கம் கூட இல்லாத அந்த கடிதம், பல தவறுகளை கொண்டிருந்தது. அதனைச் சுட்டிக்காட்டியவேளை வழமையான பணியாளர்கள் காணப்பட்டாலே அதனை திருத்தமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் ஏழு இலக்கணப் பிழைகள் காணப்பட்டன. நான் பிழைகளை கணக்கிடவில்லை, ஜனாதிபதியின் சுய ஒழுக்கத்தின் பெருமைக்கு மத்தியிலும், மொழி தொடர்பான உத்தியோகத்தர்கள் கூட பணிக்கு வருகின்றார்கள் இல்லை என்பதே இதன் அர்த்தம். ஒப்பீட்டளவில் இறுக்கமற்ற அலுவலகத்தில் பணிபுரியும் நாங்கள் எவ்வாறு வாக்காளர் அட்டைகள், சட்ட ரீதியிலான ஆவணங்கள் சரியாக காணப்படும்போது தவறுகள் அற்ற தேர்தலை கற்பனை செய்து பார்க்க முடியும்?

உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகளை பெற மறுப்பதன்  மூலம் அக்கறையின்றி சட்டங்கள் மீறப்படுவது போல தோன்றும். அங்கு நாங்கள் செல்ல விரும்பவில்லை. மேலும், நாங்கள் சாத்தியமற்ற ஒரு தேர்தல் திகதி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றோம். எங்களுக்குத் தீர்மானங்கள் அவசியம், உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல், அது நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுப்பதை தெரிவித்தாலும்கூட, அது முறையீட்டுக்கு உட்படுத்த முடியாதது என்பதுடன் அது நாங்கள் எதனை செய்தாலும் அதற்கு இறுதியை வழங்கும். ஆலோசனை முறையீட்டிற்கான அந்த உரிமை குறித்து அரசமைப்பின் 129 (1) தெரிவிக்கின்றது.

குடியரசின் ஜனாதிபதிக்கு, மக்கள் நலனிற்கு முக்கியமான சட்டம் அல்லது விடயம் குறித்த கேள்வி எழுந்தால் அல்லது எழும்போல தோன்றினால், அது குறித்து உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறவேண்டும். அவர் அந்தக் கேள்வியை நீதிமன்றத்தின் கவனத்திற்காக சமர்ப்பிக்கலாம், அவ்வாறான விசாரணையின் பின்னர் அது குறிப்பிட்ட காலத்திற்குள் அத்தகைய குறிப்பு பொருந்தும் என கருதினால் அல்லது ஜனாதிபதியினால் நீடிக்கப்படும் கால அளவிற்குள்ளோ நீதிமன்றம் தனது கருத்தை சமர்ப்பிக்கலாம்.

குறிப்பு – ஜனாதிபதி மாத்திரம் நீதிமன்றத்தின் ஆலோசனையைக் கோரலாம். இத்தனை நாட்களுக்குள் பதிலை தரவேண்டும் என அவர் குறிப்பிடவேண்டும், உச்சநீதிமன்றத்தின் கருத்து எதுவாகயிருந்தாலும் அதனை மேல்முறையீட்டிற்கு உட்படுத்த முடியாது.தேர்தல் ஆணையகம் தன்னிச்சையாக திகதியொன்றை தீர்மானித்தால், யாராவது நீதிமன்றம் செல்வார்கள். அந்த விடயம் ஜூன் இரண்டாம் திகதிக்கு அப்பால் இழுத்துச்செல்லப்படும்.

அரசமைப்பின் 33 (1) (டி) சரத்து என்ன தெரிவிக்கின்றது என்பதை மீட்டுப்பார்ப்பது அவசியம்:

33 (1) (டி) தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்குவதும், சுதந்திரமான நீதியான தேர்தலிற்கான உரிய சூழலை உருவாக்குவதும் ஜனாதிபதியின் கடமை.

நீண்டகாலத்திற்கு முன்னரே இடம்பெற்றிருக்கவேண்டிய மாகாண சபைத் தேர்தல்களை தாமதிக்கவேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எங்களை கேட்டுக்கொண்டவேளை நாங்கள் இந்த ஏற்பாட்டை பயன்படுத்தினோம். நான் இதனை வெளிப்படையாக  பின்பற்றவேண்டும் என தெரிவித்த அதேவேளை தலைவர் அதனை விரும்பாததுடன் அபயசேகரவும் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டார்.

நாங்கள் 33(1)இனை அங்கு பயன்படுத்தாத போதிலும், நாங்கள் அதனை வெளிப்படையாக செயற்படுத்துகின்றோமா இல்லையா, 31 மார்ச் மாதம் மற்றும் 2020 ஏப்ரல் முதலாம் திகதிகளில் நாங்கள் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றவேண்டிய கடமை ஜனாதிபதிக்குள்ளது.

மார்ச் 2 ம் திகதி வர்த்தமானியை இரத்துச்செய்வதே ஜனாதிபதி மேற்கொள்ளக்கூடிய சிறந்த நடவடிக்கையாகும். 2018 ஒக்டோபர் 27ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்தது சட்டவிரோதமானது என நீதிமன்றம் அறிவித்த பின்னர் நாடாளுமன்றம் சுமூகமாக இயங்கியது போன்று தொடர்ந்து இயங்கும். 2015 ஆகஸ்ட் 17ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்றம் செப்டெம்பர் முதலாம் திகதி 2015இன் முதல் அமர்விற்கு பின்னர் ஐந்து வருடங்கள் தொடர்ந்து நீடிக்கலாம். இது கொரோனா நெருக்கடியிலிருந்து தப்புவதற்கான வழியை எங்களுக்கு வழங்கும். இதுவே சிறந்தது. ஆனால், உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கினால் இதனை சாத்தியமாக்குவது ராஜபக்‌ஷவின் கரங்களிலேயே உள்ளது, தேர்தல் ஆணையகத்தின் கரங்களில் இல்லை.

தற்போதைய நெருக்கடி தோன்றுவதற்கு முன்னரே இராணுவம் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ஆரம்பித்துவிட்டது. கொரோனாவிற்கு எதிராக போராடுவதற்கு ஊரடங்கு உத்தரவுகள் சிறந்தவை என்றபோதிலும் அவற்றிற்கு சட்ட அடிப்படையில்லை. இதன் காரணமாக ஊரடங்கு சட்டத்தினை மீறியமைக்காக கைதுசெய்யப்படுபவர்கள் மீது குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை கைதுசெய்யும் அதிகாரம் பொலிஸ்மா அதிபருக்கு இல்லை. சிலர் 15ஆவது சரத்தின் 6ஆவது, ஏழாவது, எட்டாவது உபபிரிவுகள் அவசரசூழ்நிலையின் போது நாட்டின் பொருளாதாரத்தை – தேசிய பாதுகாப்பை – பொது ஒழுங்கை – பொதுமக்களின் ஒழுக்கத்தை – சுகாதாரத்தை பாதுகாப்பதை கருத்தில் கொண்டு சில உரிமைகளை எடுத்துக்கொள்வதற்கான அதிகாரம் உள்ளது என தெரிவிக்கின்றனர். எனினும், ஆழமாக வாசித்தால் எங்கள் உரிமைகள் மீதான இந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் சட்டம் பரிந்துரைக்கவேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால் ஊரடங்கு சட்டத்திற்கு கூட நாடாளுமன்றத்தின் அதிகாரம் அவசியம்.

ஊரடங்கு சட்டமும், கட்டுப்பாடுகளும் நெருக்கடியான தருணத்திற்கு சிறந்தவை என்ற காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எங்கள் பிரதிநிதிகளினால் இலகுவாக ஆதரவு கிடைக்கக்கூடிய சூழ்நிலையில் இது ஒரு தந்திரோபாயமாகும். இவ்வாறான முக்கியமான தருணங்களில் ஏன் எங்களுக்கு நாடாளுமன்றம் மறுக்கப்படுகின்றது. நாடாளுமன்றத்தின் கண்காணிப்பு இல்லாவிட்டால் எங்கள் உரிமைகளை குறைக்கலாம் என்பதாலா? எங்கள் அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்துவதற்கான சட்டபூர்வமான வழிமுறைகள் உள்ளபோது, நன்மை செய்கின்றோம் என்ற பெயரில் சட்டத்தை அகற்றுவதற்காக நிறுவனமயப்படுத்தபட்ட நெருக்கடியொன்று துரிதப்படுத்தப்படுகின்றது என நான் கருதுகின்றேன்.

எஸ். ரத்னஜீவன் எச் ஹூல்

கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியாகிய இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவத்தைப் பார்க்க இங்கு கிளிக் செய்யுங்கள்.