நாளைய தினம் வடக்கு – கிழக்கு பகுதிகளில் இராணுவத்தினரின் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் மக்கள் வாக்களிக்கும் வீதத்தை குறைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறுகிறார் தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் நிலையத்தின் இணைப்பாளர் ச. மணிமாறன்.

விசேடமாக வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் அரசுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர் என்றும் – தபால் மூல வாக்களிப்புக்கான தேவைப்பாடு இல்லாத – சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களுக்கு தபால் மூல வாக்களிப்புக்கான சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் – அவர் மேலும் கூறுகிறார்.

“அவர்களை நாங்கள் சந்தித்து கேட்டபோது, தங்களுக்கு தபால் மூலமாக வாக்களிப்பதற்கான தேவை இருக்கவில்லை என்றும், தாங்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், அது தொடர்பாக எதுவித தௌிவும் நாங்கள் பெற்றிருக்கவில்லை என்றும் அவர்கள் எங்களிடம் தெரிவித்தனர்” என்கிறார் மணிமாறன்.

அவர் இது தொடர்பாக மேலும் கூறியவற்றை கீழ் காணும் வீடியோ இணைப்பின் ஊடாக பார்க்கலாம்.