Photo, GETTY IMAGES

ஷெலோம், அப்துல்லாஹ், இப்பொழுது எல்லாம் முடிந்து விட்டது. நாங்கள் தொடர்ந்து விளையாடலாம்.

என்னுடைய பெற்றோர் இங்கே இருக்கிறார்களா?
இல்லை. உன்னுடைய சகோதரியும், சகோதரர்களும் இருக்கிறார்கள்.

உன்னுடைய பெற்றோர் இங்கே இருக்கிறார்களா?
நாங்கள் எல்லோரும் சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாக இங்கு வந்தோம்.

எங்களைப் போலவே நீங்களும் பட்டினி கிடந்தீர்களா? குண்டடிபட்டீர்களா?
எங்களை ஒன்றாக சேர்த்து வைத்து விஷவாயுத் தாக்குதல் நடத்தினார்கள்.

இது ஏன் என்பது எப்போதாவது எனக்குப் புரியுமா?
அங்கு முக்கியமான விசயங்கள் இங்கு முக்கியமில்லை.

நிலம்?
அல்லது வரலாறு அல்லது பணம் என அழைக்கப்படும் நாங்கள் சேகரித்த காகிதம்.

இங்கே எது தான் முக்கியம்?
இருக்கிறது… உங்கள் ஆன்மாவின் நிறம்.

உன்னுடைய ஆன்மா ஒளிர்கிறது… சூரியனைப் போல என்னுடைய நண்பனே.
அவ்வாறு தான் உன்னுடைய ஆன்மா ஒளி வீசுகிறது.

அவர்கள் உன்னை என்ன பெயர் கொண்டு அழைத்தார்கள்?
எலிகள், பூச்சிகள் மற்றும் அது போன்ற பெயர்கள்

‘தற்பாதுகாப்பு’ என்று அவர்கள் சொல்வதைக் கேட்டேன்…?
‘இறுதித் தீர்வு’ என்ற சொல்லைக் கேட்டேன்.

அப்படியானால், உங்களைக் கொன்றவர்கள் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
மக்கள் அவர்களை ‘நாசிகள்’ என்று அழைத்தார்கள்.

‘சியோனிஸ்ட்கள்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
இல்லை.

விளையாடுவதைத் தவிர, நாங்கள் இங்கு என்ன செய்ய வேண்டும்?
நாங்கள் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம், காத்திருக்கிறோம்.

காத்திருப்பது? எதற்காக காத்திருப்பது?
‘இனி ஒருபோதும் வேண்டாம்’ என மக்கள் கூறும் வரையில்.
இந்தத் தடவை அநேகமாக அது அவ்விதமே நடக்கும்.

ருவந்தி டி சிக்கேரா