“இங்கு விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையிலான திட்டங்கள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. குறிப்பாக மக்களின் உணவுப் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான திட்டங்கள் இல்லை.

ஆகவே, இலங்கையில் இருக்கும் பொருளாதார கட்டமைப்பில் மாற்றமொன்றை கொண்டுவருவதாக இருந்தால் மக்களின் பங்கேற்புடன் கூடிய திட்டங்களை அரசாங்கம் நடைமுறைபடுத்த வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை ஈடுபட வைப்பதற்கான திட்டங்களை அரசாங்கம் கொண்டிருக்கவேண்டும். ஆனால், அப்படியொன்றை இதுவரை காணமுடியவில்லை” என்று கூறுகிறார் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர்.

கொரோனா காரணமாக எமது பிள்ளைகளின் கல்வி பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது பொருளாதார பிரச்சினை காரணமாக அவர்களுடைய போஷாக்கும் பாதிக்கப்பட்டு அடுத்த தலைமுறையே நெருக்கடியைச் சந்திக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.

இலங்கை தற்போது எதிர்நோக்கிவரும் பொருளாதார நெருக்கடி தொடர்பாக மாற்றம் தளத்துக்கு அவர் வழங்கிய நேர்க்காணல் கீழே இணைக்கப்பட்டிருக்கிறது.