பட மூலம், New York Post
22 ஒக்டோபர் 2020
கொவிட்-19 இற்கான பதிற்செயற்பாட்டில் அரசாங்கத்தின் மேலாண்மை பற்றிய பகிரங்க அறிக்கை
கொவிட் கொள்ளை நோய் தொடர்ந்தும் பரிணாமமடைந்து வரும் ஓர் உலகளாவிய நெருக்கடியாகும். இதன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஆரம்ப முயற்சிகள் வெற்றிகரமானதாக அமைந்திருந்தபோதிலும் இலங்கை இந்நோய்ப்பரவலால் விட்டுவைக்கப்படவில்லை. கூட்டு முயற்சிகளினாலும் நிலைபேறான முயற்சிகளினாலும் பதிற்செயற்பாடாற்றவேண்டிய முன்னெப்பொழுதும் முகங்கொடுத்திராத இந்த நெருக்கடிக்கு பாதிப்புறுநிலையிலுள்ள சமுதாயங்களின் பல்தேவைகளில் கவனம் செலுத்தப்படவேண்டியது அவசியமாக இருக்கின்ற அதேவேளை அச்சமுதாயங்களின் கௌரவம் மற்றும் அவை சமமாக நடத்தப்படல் ஆகியவற்றுக்கும் அவதானம் செலுத்தப்படவேண்டும். முயற்சிகள் பரவலைத் தடுப்பது முதல் சிகிச்சை வரை பரவிக் காணப்படல் வேண்டும். கொள்ளை நோயின் காரணமாக இச்சந்தர்ப்பத்தில் பாதிப்புறுநிலையிலுள்ள சமுதாயங்கள் அனுபவிக்கும் பொருளாதாரச் சவால்களையும் இம்முயற்சிகள் தீர்க்கவேண்டும்.
மினுவங்கொடயில் அமைந்துள்ள பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையில் அண்மையில் ஏற்பட்ட இந்த வைரஸ் பரவலுக்கு அரசாங்கத்தின் ஒட்டுமொத்த பதிற்செயற்பாடு தொடர்பிலும் நாம் மிகவும் அதிருப்தியுற்றுள்ளோம். இந்த நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் அந்நியச் செலாவணியினைப் பெற்றுக்கொடுக்க அல்லும் பகலும் அயராது உழைக்கும் மிகவும் பாதிப்புறுநிலையிலுள்ள தொழிற்சாலை ஊழியர்கள் அதீத அவமானப்படுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டு அடிப்படைக் கௌரவம் கூட வழங்கப்படாது நடத்தப்பட்டிருக்கின்றனர். ஒக்டோபர் 11ஆம் திகதி இரவும் 12ஆம் திகதி அதிகாலையும் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தலுக்காகச் சுற்றிவளைக்கப்பட்டு எவ்வித விளக்கமும் வழங்கப்படாது தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன் அவர்களின் மருத்துவ நிலைமைகளும் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன. கொள்ளை நோய் தொடர்பாகக் கிரமமாக அறிக்கையிடும் ஊடகங்களும் அரசாங்கப் பேச்சாளர்களும் தொழிற்சாலை ஊழியர்களை அச்சுறுத்தலுக்குரியவர்கள் என முத்திரை குத்தித் தரம் குறைத்துப் பேசி வருவதுடன் அவர்களின் அந்தரங்கத்திற்கு அற்பமான மரியாதையினையே வழங்கிவருகின்றனர் அல்லது சில சந்தர்ப்பங்களில் அவ்வாறு மரியாதை வழங்காதும் நடந்துகொள்கின்றனர். இதே பெருநிறுவனத்தில் வேறு மட்டங்களில் உள்ள பணியாள் உறுப்பினர்கள் மிகவும் வித்தியாசமாக நடத்தப்படுகையில் இது துலாம்பரமாகத் தெரியவருகின்றது. கம்பனியினால் தாமே அறிக்கையிடப்பட்டவாறு, இந்தியாவில் இருந்து திரும்பிவந்த பணியாள் உறுப்பினர்கள் பூரண வசதிகளைக் கொண்ட ஹோட்டல்களில் தனிமைப்படுத்தப்பட்டு சுயதனிமைப்படுத்தலுக்கும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் பிரெண்டிக்ஸ் தொழிற்சாலையினையும் ஏனைய தொழிற்சாலையினையும் சேர்ந்த தொழிலாளர்கள் நடத்தப்படுவதற்கு இது முற்றிலும் மாறானதாகும்.
மினுவாங்கொட தொழிற்சாலையில் என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்களைத் தெரிவிப்பதிலும் அல்லது சிறப்புரிமைக்குரிய சிலருக்கு மட்டுமல்லாது அனைத்து ஊழியர்களினதும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அரசாங்கம் பரிந்துரைத்த சுகாதார ஒழுங்குவிதிகள் போன்றவை பின்பற்றப்பட்டதா எனும் விடயங்கள் பற்றிக் கருத்துத் தெரிவிப்பதிலும் பிரெண்டிக்ஸ் நழுவல் போக்கினையே கடைப்பிடித்து வருகின்றது. அரசாங்கத்தின் உயர் மட்டங்களின் ஆதரவு இன்றி இவ்வாறான நழுவல் போக்கில் இருந்து பிரெண்டிக்ஸினால் தப்ப முடியாது என்றே நாம் நம்புகின்றோம்.
கொவிட்-19 கொள்ளை நோய் தொடர்பாக அரசாங்கம் கைக்கொண்டு வரும் பாகுபாடுமிக்க நடைமுறைகள் நாட்டின் அனைத்து மக்களையும் ஈற்றில் ஆபத்துக்குள்ளாக்கும் செயல் என்பதை அரசாங்கம் கட்டாயம் உணர்ந்துகொள்ளவேண்டும். கொள்ளை நோயினை அரசாங்கம் எவ்வாறு முகாமைத்துவம் செய்கின்றது என்பது தொடர்பிலும் இந்த நாட்டின் அனைத்து மக்களினதும் சுகாதாரம் மற்றும் நலனோம்புகையினை எவ்வாறு முன்னுரிமைப்படுத்துகின்றது என்பது தொடர்பிலும் அரசாங்கம் அதிக வெளிப்படைத்தன்மையுடனும் வகைப்பொறுப்புடனும் நடந்துகொள்வது அவசியமாகும். கொள்ளை நோயினைக் கட்டுப்படுத்துவதில் ‘வெற்றிபெற்றதைப்’ பிரகடனப்படுத்தும் அதன் ஆர்வத்தில் அரசாங்கம் கிரீடத்தைக் காத்துத் தலையைப் பலிகொடுக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளது. இந்த வைரஸ் இராணுவ உபாயமார்க்கங்களால் கைப்பற்றப்படவேண்டிய எதிரியல்ல. இது அதீத பரிமாணம் கொண்ட மனிதநேய நெருக்கடியாகும். இவ்வாறான ஒரு நெருக்கடிக்கு உலகம் அண்மைக் காலத்தில் முகங்கொடுக்கவில்லை. இச்சந்தர்ப்பத்தில் தேவைப்படுவது என்னவென்றால் நெருக்கடியின் பல் பரிமாணங்களுக்கும் பதிற்செயற்பாடாற்றுவதற்காக வெவ்வேறு துறைகளையும் ஒன்றுசேர்க்கும் மனிதநேய பதிற்செயற்பாடேயாகும். அரசியல் சௌகரியத்தினை விட கொவிட்-19 இற்கான பதிற்செயற்பாடானது மருத்துவ சுகாதார ஆளணியினாலும் கிடைக்கக்கூடியதான அறிவியலினாலும் முகாமைத்துவம் செய்யப்பட்டு முன்னெடுக்கப்படவேண்டும்.
பின்வரும் பரிந்துரைகளை நாம் முன்வைக்க விரும்புகின்றோம்:
1. கொவிட்-19 இற்கு பதிற்செயற்பாடாற்றுவது என்பது ஒரு நீண்டகால விடயம் என்பதையும் இலங்கை இந்த விடயத்தில் ஓய்வெடுக்க முடியாது என்பதையும் அறிந்துகொள்ளல். தொடர்ச்சியான அவதானமும் தொழில்வல்லுனர்களினாலும் நிபுணர்களினாலும் மேற்கொள்ளப்படும் திட்டமிடலும் இதற்குத் தேவைப்படுகின்றன.
2. ஏற்கனவே உள்ள மற்றும் அடையாளம் காணப்பட்ட கொத்தணிகளில் பிசிஆர் பரிசோதனையை அதிகரிப்பதன் மூலம் சமுதாயத் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த முடியும் என்பதுடன் பரிசோதனை முடிவுகளை விரைவுபடுத்தி வெளியிடவேண்டும். ஏனெனில், சில நேரங்களில் இதற்கு 10 நாட்களுக்கு மேல் செல்கிறது.
3. பரவலைத் தடுப்பதென்பது மக்களின் சுதந்திரங்களின் மீது சில கட்டுப்பாடுகளை அவசியம் தேவைப்படுத்தும் – விசேடமாக, நடமாட்டம் மற்றும் ஒன்றுகூடல். எவ்வாறாயினும், கட்டுப்பாடுகளை விதிப்பது சில குறிப்பிட்ட சமுதாயங்களையும் தனிநபர்களையும் மட்டும் இலக்குவைக்கும் கண்மூடித்தனமான பாகுபாட்டிற்கு இட்டுச்செல்லக்கூடாது. குறிப்பாக விளிம்பு நிலையிலுள்ளவர்கள், சிறப்புரிமை கிட்டாதவர்கள் மற்றும் பாதிப்புறு சமுதாயங்கள்.
4. தனிமைப்படுத்தல் நிலையங்கள் தற்போது சன நெரிசல் மிக்கவையாகவும் உரிய சேவைகள் வழங்கப்படாதவையாகவும் வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு உகந்ததல்லாத சூழலைக் கொண்டவையாகவும் காணப்படுகின்றன. மாறாக இத்தனிமைப்படுத்தல் நிலையங்களில் சில வைரஸ் தொற்றினை மேலும் பரவச் செய்கின்றன. தொடர்புடையவர்களைச் சுய தனிமைப்படுத்துவதும் தொற்று உள்ளவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களை உள்ளூர் சுகாதார ஆளணியினரின் இறுக்கமான கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதும் மிகச் சிறந்த செயற்பாடுகளாக இருக்கமுடியும்.
5. சிகிச்சை தேவைப்படுபவர்களை மாத்திரமே வைத்தியசாலைகளில் அனுமதிப்பதால் சுகாதார சேவையின் மீதான அழுத்தத்தினைக் குறைக்க முடியும்.
6. சுகாதாரத் துறை, போக்குவரத்துத் துறை, உணவு மற்றும் மருந்து விநியோகத் துறை மற்றும் சட்ட அமலாக்கப் பிரிவு போன்ற அத்தியாவசிய சேவையினைச் சேர்ந்த ஆளணியினர் மாத்திரம் அவர்களின் கடமைகளைச் செயற்திறனுடன் மேற்கொள்வதற்குப் பூரண ஆதரவு வழங்கப்படவேண்டும். இதில் பிசிஆர் உபகரணம், விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மற்றும் தேவையெனின் தங்குமிட வசதிகள் மற்றும் உணவு மற்றும் விசேட கொடுப்பனவுகள் ஆகியவை அடங்குகின்றன.
7. தொழிற்சாலை ஊழியர்களின் அதீத பாதிப்புறுநிலையினை அடையாளம் காணல், குறிப்பாகச் சுதந்திர வர்த்தக வலயத்தில், குறிப்பாக நோய்த்தொற்றின் போது எடுத்து விளக்கப்பட்டதைப் போல,பொருத்தமான தங்குமிட வசதிகளை வழங்கல். சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிலாளர்கள் பின்வருவனவற்றிற்கு முகங்கொடுக்கின்றனர்:
a) சுகாதாரக் கரிசனைகளை விட உற்பத்தி இலக்குகளைப் பூர்த்திசெய்வதற்கு முன்னுரிமை வழங்கும் கடுமையான வேலை நிபந்தனைகள்;
b) வைரஸ் பரவுவது உயர்வாகக் காணப்படும் நெருக்கடிமிக்க வாழும் சூழல்;
c) சமுதாயச் சேவைகளில் இருந்து விலக்கப்படல், இதனால் சுதந்திர வர்த்தக வலயத் தொழிலாளர்கள் உதவிச் சேவைகளில் இருந்து ஒதுக்கப்படுவதுடன், நோயுறுகையில் சமுதாயத்தினராலும் ஒதுக்கப்பட்டு முத்திரை குத்தப்படுகின்றனர்;
d) தொழிலாளர்கள் எச்சூழ்நிலையின் கீழ் வாழ்கின்றனரோ அதனை அதிகாரிகளும் தொழில்வழங்குனர்களும் புரிந்துகொள்வதில்லை. உதாரணமாக அதிகமான தொழிலாளர்கள் நாளாந்தம் வாங்கும் உணவுப் பொருட்களைக் கொண்டே வாழ்க்கை நடத்திவருகின்றனர் – அத்தியாவசியப் பொருட்களை அவர்களினால் நாட்கணக்காக சேமித்துவைக்க முடியாது. இதனால் இரண்டு விளைவுகள் ஏற்படுகின்றன. அவசிய பொருட்களை வாங்குவதற்காக அடிக்கடி சமுதாயத்தில் நடமாடுதல் மற்றும் நடமாட்டம் கட்டுப்படுத்தப்படுகையில் சிரமங்களுக்கு முகங்கொடுத்தல்.
8. எனவே, சுதந்திர வர்த்தக வலயங்கள் போன்ற இடங்களிலுள்ள தொழிலாளர்களைப் பாதுகாக்க நாம் தனித்துவமான இடையீடுகளை முன்மொழிகின்றோம். அவற்றுள் பின்வருவன உள்ளடங்குகின்றன:
a) தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கவேண்டுமாயின் ஊழியர்களுக்கும் தொழில்வழங்குனர்களுக்குமான சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக அமுல்படுத்தல். தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டால் அவர்கள் தங்கி வாழ்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொறுப்பினைத் தொழில்வழங்குனர்கள் ஏற்கவேண்டும். இவற்றுள் போக்குவரத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், தங்குமிடவசதி, அத்தியாவசியமான பொருட்களைக் கொள்வனவு செய்துகொடுத்தல் மற்றும் அவர்களின் குடும்பத்திற்கான உதவி. ஊழியர்களினால் சேவையினை வழங்க முடியாவிட்டால் தொழிற்சாலைகளைத் திறந்துவைக்க அவர்கள் அனுமதிக்கப்படலாகாது.
-
- தர நியமம் மிக்க மருத்துவ சேவைகளையும் விடுப்பினையும் வழங்கல்.
- கொவிட்-19 ஏற்பட்டால், உரிய மருத்துவப் பராமரிப்பும் மருத்துவக் காப்புறுதியும் சம்பளத்துடனான விடுப்பும் வழங்கப்படவேண்டும்.
b) வெளிவளத்தினைப் பயன்படுத்தும் நடைமுறை தொழில்வழங்குனர்கள் தங்களின் வேலைத்தளங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்பான பொறுப்புக்களைத் துறப்பதற்கான அவகாசத்தினை அவர்களுக்கு வழங்குகின்றது. குறிப்பாகச் சில பணிகளைப் பொறுப்பேற்கும் வெளிவள மனிதவலுப் பணியாளர்கள் தங்களின் ஊழியர்களாக வகைப்படுத்தப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர். வெளிவளத் தொழிலாளர்கள் உள்ளடங்கலாக தங்களின் தொழிற்சாலைகள் அல்லது அலுவலகங்களில் பணியாற்றும் அனைத்து வகையான தொழிலாளர்களினதும் பொறுப்பினைத் தொழில்வழங்குனர்கள் ஏற்கவேண்டும்.
c) தொழிலாளர்களை உள்ளூர் சுகாதார மற்றும் சமூக சேவைகளுடன் இணைத்தல். இவர்கள் தொடர்புடைய கிராம சேவை உத்தியோகத்தரினால் பதிவுசெய்யப்பட்டிருக்கவேண்டும் என்பதுடன் பொதுவாகச் சமுதாயத்திற்கு வழங்கப்படும் அதே சேவைகளைப் பெறும் தகைமையினைப் பெறவேண்டும்.
9. சுகாதாரச் சேவைகளை முன்னுரிமைப்படுத்தல். இக்காலகட்டத்தில் குறிப்பாகப் பொது வைத்தியசாலைகளிலும் கிளினிக்குகளிலும் இயலுமான அளவிற்குத் தடையின்றிய சேவைகளை உறுதிப்படுத்தவேண்டும். சில பிரதான வைத்தியசாலைகளில் கூட அத்தியவாசியமான மருந்துகளுக்குத் தட்டுப்பாடு நிலவுவது பற்றி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சமுதாயத்தில் தொற்றா நோய்களுடன் வாழும் நோயாளிகளுக்கு இது பாரதூரமான பிரச்சினையாக மாறியுள்ளது, கொவிட்டினால் பாதிக்கப்படும் பாதிப்புறுநிலையினையும் அதிகரிக்கின்றது. தடையின்றிய சுகாதார சேவைகளை உறுதிப்படுத்துவது சுகாதார ஆளணியினர் அச்சமின்றி அவர்களின் கடமைகளை மேற்கொள்ள அவர்களுக்குச் சகல உதவிகளையும் வழங்குவதையும் குறிக்கின்றது.
10. கொள்ளை நோயினைக் கடந்து வந்ததில் மிகவும் வெற்றியடைந்த நாடுகள் மக்களின் நம்பிக்கையினைப் பெற்ற நாடுகளாகும். நம்பிக்கையினை விசுவாசத்தினாலேயே வெற்றிகொள்ள முடியேமேயன்றி அச்சத்தினால் அல்ல.
மக்களின் தேவைகளுக்குப் பதிற்செயற்பாடாற்றுமாறும் நிலைப்பாட்டினை உடனடியாக மாற்றுமாறும் கீழே ஒப்பமிட்டுள்ள நாம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். இல்லாவிடின், குறிப்பாக நாட்டின் சிறப்புரிமை கிட்டாத பிரிவினருக்குப் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் விளைவுகளுடன் நடப்பு பதிற்செயற்பாட்டின் செயற்திறனின்மையும் போதாநிலையும் மனிதாபிமானமற்ற நிலையுமே சான்றாகக் காணக்கூடியதாக மாறிவருகின்றது. இந்த அரசாங்கம் ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தல்களின் போதும் ஆணையினைப் பெறுவதற்கு இதே குழுவினரின் ஆதரவுதான் அவசியமாக இருந்தது என்பதே இதில் உள்ள முரண்நகையாகும்.
Signatures
Individuals
- Ajitha
- Rahman
- Abiramy Sivalogananthan
- Amali Wedagedara – University of Hawai’i, Mānoa
- Amalini De Sayrah
- Anithra Varia
- Anthony Jesudasan – Human Rights Defender
- Anuratha Rajaretnam
- Anushaya Collure
- Ashila Niroshi Dandeniya
- Chamila Thushari
- Chandra Devanarayana
- Chandrika De Silva – Freelance Journalist
- Chintaka Rajapakse
- Damaris Wickremesekera
- Dee Jayasinghe
- Deekshya Illangasinghe
- Dilhara Pathirana
- Ameer Ali – School of Business and Governance – Murdoch University, Western Australia
- Jehan Perera
- Leonie Solomons
- Ranil D. Guneratne
- Dulan de Silva
- M.B Menike
- Zackariya
- Francis Costa Priyankara
- Francis Raajan
- Gayathri Gamage
- Geethika Dharmasinghe – Cornell University, New York
- Godfrey Yogarajah
- Herman Kumara
- Ishara Danasekara – vikalpa.org
- A.N.N. Priyantha Fernando
- Janakie Seneviratne
- Joe William
- Juwairiya Mohideen
- Hemalatha
- Nihal Ahamed
- Saranhan
- Sathiyaseelan
- Kalani Subasinghe
- Kamala Vasuki – Feminist Activist, Batticaloa
- Lakmali Hemachandra – Attorney-at-Law
- Lal Wijenayake – General Secretary, United Left Front / Wame Wedikawa
- Linus Jayatilake – President, United Federation of Labour (UFL)
- Nirmala
- Mahaluxmy Kurushanthan
- Maithreyi Rajasingam
- Marisa de Silva
- Melani Manel Perera
- Mujeebur Rahman (LLB)
- Girithy
- Nagulan Nesiah
- Nilshan Fonseka
- Niyanthini Kadirgamar
- Deepan
- Paba Deshapriya
- Padma Pushpakanthi
- Philip Dissanayake
- Philip Setunga
- Ajit Abeysekera
- Kanchana N. Ruwanpura – University of Gothenburg, Sweden
- Punitham Selvaratnam – Women for Justice and Peace in Sri Lanka
- Rajany Rajeshwary
- Rasika Mendis – Attorney-at-Law
- Dr. Jayasiri Peiris
- Fr. Aloysius Pieris, S.J.
- Fr. F.J. Gnanaraj Croos (Nehru) – Mannar
- Fr. Jeyabalan Croos
- Fr. Nandana Manatunga
- Fr. Reid Shelton Fernando – Retired Catholic Priest
- Fr. V. Yogeswaran
- Sr. Noel Christine Fernando
- Sr. Rasika Pieris HF
- S.D.P. Selvan
- Ruwan Laknath Jayakody
- Easwary
- Ithayarani
- Mariyarosalin
- Nithika
- Tharsan
- C.C. Elankovan
- T. Ganeshalingam
- Sabra Zahid
- Sachini Perera
- Sakuntala Kadirgamar
- Sampath Samarakoon – Editor, vikalpa.org
- Sandun Thudugala
- Sandya Salgado
- Sarah Arumugam – Attorney-at-Law
- Shreen Saroor
- Srinath Perera – General Secretary, Free Trade Union Centre
- Suchith Abeyewickreme – Social Activist
- Sugath Priyantha
- Sunanda Deshapriya – Journalist and Human Rights Activist
- Swasthika Arulingam – Attorney-at-Law
- Sylvester Jayakody – General Secretary, CMU
- Tisaranee Gunasekara
- Tharmika Sivarajah
- Shamini
- Sinthuka
- V. Ganeshananthan
- Vanie Simon
- Vidura Munasinghe – Attorney-at-Law & Senior Researcher, LST
- Vraie Cally Balthazaar
Organisations
- Affected Women’s Forum, Ampara
- Alliance Development
- Aluth Piyapath
- Ampara District Women Network (ADWN)
- lk
- Centre for Justice and Change (CJC)
- Ceylon Mercantile Industrial & General Workers Union (CMU)
- Dabindu Collective
- Human Elevation Organization (HEO)
- Human Rights Office (HRO)
- Lanka Solidarity
- Law and Society Trust (LST)
- Left Voice
- Liberation Movement
- Mannar Women’s Development Federation (MWDF)
- Movement for Land and Agricultural Reform (MONLAR)
- Movement for Plantation People’s Land Rights (MPPLR)
- Muslim Women’s Development Trust (MWDT)
- Muslim Women’s Research and Action Forum (MWRAF)
- National Fisheries Solidarity Organization (NAFSO)
- National Peace Council (NPC)
- Praja Abhilasha Network
- Progressive Women’s Collective
- Revolutionary Existence of human Development (RED)
- Right to Life (R2L) Human Rights Center
- Savisthri National Womens’ Movement
- Shramabhimani Kendraya
- Social Institute for Development of Plantation Sector (SIDPS)
- Standup Movement Lanka
- Suriya Women’s Development Centre
- United Federation of Labour (UFL)
- Upcountry Civil Society Collective (UCSC)
- Vallamai (A movement for Social Change)
- Women’s Action Network (WAN)
- Women’s Development Foundation, Kurunegala