பட மூலம், Nazly Ahmed

மொழி உரிமை பற்றிய அரசியலமைப்பின் அடிப்படைகள்

மொழியை ஓர் உரிமையாக ஏற்றுக்கொள்வதும், வலுவாக்கம் பெறச் செய்வதும், அந்த மொழியைப் பேசுகின்ற, பயன்படுத்துகின்ற மக்களுக்கு வழங்கப்படும் ஒரு கௌரவாகும்.  சிலவேளை அது ஒரு கௌரவத்திற்கு அப்பால் செல்லும், ஆத்மீக ரீதியாக வழங்கப்படும் ஒரு நிவாரணமாகும். இதன்மூலம் தான் சமூகத்தினுள்ளும் அரச பொறிமுறையினுள்ளும் பேணிப்பாதுகாக்கப்படுவதான உணர்வாகும்.  உரிமைகளை நடைமுறையில் செயற்படுத்துவதற்கும், அவை மீறப்படும்போது மீளப்பெறுவதற்கும், அவசியமான சக்தியை வழங்குகிறது. இதற்கமைய 1978 அரசியலமைப்பின் மூன்றாம், நான்காம் அத்தியாயங்களில் மொழிபற்றிய சட்டம் அடிப்படை உரிமைகள் என்ற வகையீட்டுக்குள் உள்ளடக்கப்படுகிறது. அரசிலமைப்பின்  (2)ஆம் உறுப்புரைக்கமைய எந்தவொரு பிரஜையும் இனம், மதம், மொழி, சாதி, ஆண்பெண் பால்நிலை, அரசியற் கருத்து அல்லது பிறப்பிடம் ஆகிய காரணிகள் மீது அல்லது அவற்றுள் எந்தவொரு காரணி மீதாவது பாரபட்சத்திற்கு அல்லது விசேட கவனத்திற்கு உட்படுத்தக் கூடாது. இங்கு பாரபட்சத்திற்கான அல்லது விசேட கவனிப்பு, குறைந்து அல்லது கூடுதலான கவனிப்பாகும். அதாவது, சட்டத்தின்மூலம் அமுல்படுத்த வேண்டிய சமநீதி அமுல்படுத்தாமை பாரபட்சமாகும். இந்த பாரபட்சம் நிறைவேற்று அல்லது நிருவாக நடவடிக்கையின் மூலம் ஒரு பிரஜைக்கு ஏற்படலாம். அப்போது 12(2) உறுப்புரைக்கு அமைய நிவாரணம் பெறமுடியும். அரசியலமைப்பின் நான்காம் அத்தியாயத்தின் 18 ஆவது உறுப்புரைக்கு அமைய சிங்களமும் தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகளாகும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக கருதப்படுகிறது. அதேசமயம் 19ஆவது உறுப்புரைக்கு அமைய சிங்கள மொழியும் தமிழ் மொழியும் இலங்கையின் தேசிய மொழிகளாகும். 22ஆவது வாசகத்திற்கமைய சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் இலங்கை முழுவதிலும் நிருவாக மொழியாகும். இதன்போது புரிந்துகொள்ள வேண்டிய விடயம் என்னவெனில், அரச நிறுவனங்களில் பணியாற்றுவதற்கு அறிக்கைகளைப் பதிவு செய்வதற்கு உரித்தான மொழி நிருவாக மொழியாகும். சிங்களம் அல்லது தமிழ் அல்லாத வேறு மொழி (ஆங்கில மொழி) நிருவாக மொழியாக இருப்பினும் இதுவரை அவ்வாறு விதிக்கப்படவில்லை. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நிருவாக மொழி தமிழ் மொழியாகும்.  ஏனைய மாகாணங்களில் நிருவாக மொழி சிங்கள மொழியாகும். அதேசமயம் நிருவாக மொழியாக குறித்துரைக்கப்பட்ட பிரதேசங்களில் இரண்டு அரசகரும மொழிகளை விதிக்க முடியும். அப்போது சிங்களமும் தமிழும் நிருவாக மொழியாகச் செயற்படும்.

இதற்கமைய ஒட்டுமொத்தமாக நோக்குகையில் அரசின் நடவடிக்கைகளும் அரசு பிரஜைகளுக்காகச் செயற்படுத்தும் அனைத்துப் பொறிமுறைகளும் அரசகரும மொழிக் கொள்கைகளுக்கமைய இடம்பெற வேண்டும். இந்நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டு 2012ஆம் ஆண்டில் இருந்து இதுவரை அரச பொறிமுறைகளில் அரசகரும மொழிக்கொள்கை உரிய முறையில் செயற்படாமை காரணமாக பிரஜைகளின் மொழி உரிமை மீறப்படுவதை அடிப்படையாகக் கொண்டு அவற்றிற்குப் பொறுப்புக் கூறவேண்டிய அதிகாரிகளிடம் முறைப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கு மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் நடவடிக்கை எடுத்தது. இதற்கமைய இவ்வாறு பொறுப்புக் கூறவேண்டிய இரண்டு அடிப்படை நிறுவனங்களாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும், அரசகரும மொழிகள் ஆணைக்குழுவும் அடையாளம் காணப்பட்டதோடு அரசகரும மொழிக்கொள்கையை மீறியமை பற்றிய விடயம் பல சந்தர்ப்பங்களில் இவ்விரு நிறுவனங்களுக்கும் முறைப்பாடு செய்யப்பட்டது.

பிரஜைகளின் மொழி உரிமைபற்றிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் வெற்றிகள்

இவற்றிடையே சில உரிமை மீறல்களுக்கான பரிகாரங்களைப் பெறுவது, மேற்படி இரண்டாவது நிறுவனங்களின் இடையீடுகள் போதியதாக இருப்பினும், மற்றுமொரு சந்தர்ப்பத்தில் உயர்நீதிமன்றம் வரை சென்று, மேற்படி உரிமைகளை வலுவாக்கம் பெறுவதற்கு கிடைத்த வாய்ப்புக்கள் உண்டு. இதற்கு உதாரணமாக தேசிய அடையாள அட்டை சிங்களம் மற்றும் தமிழ்மொழிகளில் வெளியிடுதல், பணநோட்டுக்களில் சில வாசகங்கள் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் அச்சிடுதல், சட்டங்கள் சிங்களம் மற்றும் தமிழ்மொழிகளில் வெளியிடுதல், ஒளடதங்கள் பொதியில் அடைக்கப்பட்ட பின்னரான தகவல்கள் சிங்களம் மற்றும் தமிழ்மொழிகளில் வெளியிடுதல் போன்ற சம்பவங்கள் முன்னுரிமை பெறுகின்றன. இவ்வெற்றிகள் அனைத்துமே பிரஜைகளுக்காக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வென்றெடுத்த வெற்றிகளாகும். இவற்றின் பெறுபேறுகள் ஒட்டுமொத்தப் பிரஜைகள் சமத்துவமாக அனுபவிக்கக்கூடியதாக உள்ளது.

நுகர்வுப் பொருட்களின் தகவல்களுக்கேற்ப ஏற்புடைய மொழி உரிமைகள் செயற்படாதபோது அவற்றை சவால்களுக்கு உட்படுத்துதல்

2012 முதல் 2018 வரையிலான காலகட்டத்திற்குள் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும், அரசகரும ஆணைக்குழுவிற்கும் சுமார் 150 இற்கும் அதிகமான முறைப்பாடுகள் செய்யப்பட்டன. அரசகரும மொழிக் கொள்கைகளுக்கமைய நுகர்வுப் பண்டங்கள் பற்றிய மிக முக்கியமான தகவல்களை வழங்காமை பற்றி குறிப்பிடப்பட்டது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் 2013ஆம் ஆண்டில் இருந்தே நுகர்வு நடவடிக்கைகள் பற்றிய அதிகாரசபைக்கு சுட்டிக்காட்டியவாறு நுகர்வுப் பண்டங்களின் அத்தியாவசியத் தகவல்கள், அதாவது நுகர்வுப் பண்டத்தின் பெயர், உச்ச சில்லறை விலை, காலாவதியாகும் திகதி, உற்பத்தி செய்த திகதி, அதனுடைய எடை, கன அளவு, இறக்குமதி செய்யப்பட்ட நாடு/ உற்பத்தி செய்யப்பட்ட நாடு, பொதியில் அடைத்த திகதி ஆகிய தகவல்கள் ஆங்கிலமொழியில் மாத்திரம் அச்சிட்டு இருந்தது. இதனை மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சுட்டிக்காட்டியதோடு பண்டங்களின் தகவல்கள் ஆங்கிலமொழியில் மாத்திரமோ அல்லது ஒரு அரசகரும மொழியில் (சிங்களம் அல்லது தமிழ்) மாத்திரமோ அச்சிடுதல், நுகர்வோர் தகவல்களைப் பெறும் உரிமை மீறப்படுவதாகும். 2013இல் இருந்து நுகர்வு நடவடிக்கைகள் பற்றிய அதிகாரசபைக்கு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் முன்வைத்த முறைப்பாடுகளின் ஊடாக இந்நிலைமைகளுக்குத் தீர்வும், அதேவேளை இலங்கை அரசகரும மொழிக் கொள்கையை ஏற்பதற்கு நுகர்வோர் பற்றிய அதிகாரசபைக்கு அதிகாரமும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளமையை வலியுறுத்த முடிந்தது.

தகவல்களுக்கான உரிமைகள் ஊடாக விடயங்கள் வெளிப்படுதல்

மேற்படி முறைப்பாடுகளுக்கான பிரதிபலிப்பாக பல ஆண்டுகளாக மனித உரிமைகள் ஆணைக்குழுவும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவும் பல பரிசோதனைகளை நடத்தியுள்ளன. ஆனால், இன்றுவரை குறிப்பிடத்தக்க சாதகமான முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. எனவே, 2016இன் 12ஆம் இலக்க தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தின் கீழ், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் முறைப்பாடு செய்த விடயங்கள் தொடர்பான முன்னேற்றம் பற்றி நுகர்வோர் அதிகாரசபையிடம் கேட்டுக்கொண்டதோடு அதற்குப் பிரதிபலிப்பும் கிடைத்தது.

நுகர்வோருக்கான அதிகாரசபை மேற்கொண்ட நடவடிக்கைகள்

2013ஆம் ஆண்டில் இருந்து 2018ஆம் ஆண்டுவரை நாம் முன்வைத்த முறைப்பாட்டுப் பிரிவின் கவனத்திற்கு உட்படுத்தப்பட்ட விடயங்கள் சம்பந்தமாக உரிய முறையில் கவனம் செலுத்தப்படவில்லை. அதேசமயம், மேற்படி முறைப்பாடுகள் தொடர்பாக நுகர்வோர் நடவடிக்கைகளுக்கான அவதானிப்புகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், 2135/ 53 மற்றும் 2019.08.07 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டவாறு, கட்டளை இலக்கம் 68 இற்கமைய மேற்படி கட்டளைகளின் உப அட்டவணையில் குறிப்பிடப்பட்ட பண்டங்களின் அதி உயர் சில்லறை விலை, உற்பத்தி தொகுதி இலக்கம், காலாவதியாகும் திகதி, உற்பத்தி செய்த பண்டத்தின் எடை/ கனஅளவு, இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்தி நாடு, மீண்டும் பொதியில் அடைக்கப்பட்டிருப்பின் அவ்வாறு பொதியில் அடைக்கப்பட்ட திகதி, ஆகிய தகவல்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் விளக்கமாக அச்சிட்டு விநியோகிக்கப்பட வேண்டுமென கட்டளையிடப்பட்டது.  எவ்வாறாயினும், மேற்படி கட்டளைகள் 68ஆம் இலக்கத்தை வெட்டி 2156/ 16 கொண்ட 2019.12.31 திகதியிடப்பட்ட வர்த்தமான அறிவித்தலில் வெளியிடப்பட்ட கட்டளை இலக்கம் 71 விநியோகிக்கப்பட்டதோடு மேற்படி கட்டளை 2020.09.01 ஆகிய திகதியில் இருந்து செல்லுபடியாகும். மேலும், மேற்கூறிய வர்த்தமான அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட தகவல்கள் மும்மொழிகளிலும் பண்டங்களின் சிட்டைகளில் அச்சிடுவதன் மூலம் சிட்டையின் எல்லை, சிறிய அளவில் பண்டங்களுக்காக இம்முறைமை, பல கஷ்டங்களை ஏற்படுத்தக்கூடும். தொழில்நுட்பத் தடைகள், மும்மொழிகளிலும் உள்ளடக்குதல் வேறு ஆலோசனை பற்றிய தகவல்களை அச்சிட நிர்ப்பந்திக்கப்படுவதனால் நுகர்வுப் பொருட்களின் விலை உயர்தல் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக இலங்கையின் வாணிபப் பேரவையின் (உணவு, குடிபானங்கள் பிரிவு) நுகர்வு விவகாரங்கள் பற்றிய அதிகார சபைக்கு அறிவித்துள்ளது. எனவே, மேற்படி வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பண்டங்களின் சிட்டைகளில் உள்ளடக்கப்படும் தகவல்களை அச்சிடுகையில் மும்மொழிகளிலும் அச்சிட வேண்டுமா? என்பதுபற்றி அரசகரும மொழிக்கொள்கை பற்றி அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் 2019.10.16 திகதியிடப்பட்ட கடித மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி கடிதம் தொடர்பாக இதுவரை ஒரு பதிலும் கிடைக்கவில்லை என்பதை அறிகிறோம்.

அரசகரும மொழி ஆணைக்குழுவின் மந்தமான போக்கு

நுகர்வோர் நடவடிக்கைகள் பற்றிய அதிகார சபையினால் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு ஒப்படைக்கப்பட்ட கடிதம் தொடர்பாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் பதில் அளிக்கப்படவில்லை. இது அரசகரும மொழிக் கொள்கையை அமுல்படுத்துதல் தொடர்பான பாதகமான அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளதோடு, இது தொடர்பான வினைத்திறனின்மை கவலைக்குரிய விடயமாகும். அரசகரும மொழிகள் ஆணைக்குழு தனது நடவடிக்கைகளை அமுல்படுத்துகையில் அணுசரித்த மந்தமான போக்கு, இது விடயமாக மாத்திரமல்லாது பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்படையாகி உள்ளது.  அதற்கான சிறந்த உதாரணம் கடந்த ஒரு சில ஆண்டுகளாக அரசகரும மொழிக்கொள்கை மீறப்பட்டமை தொடர்பாக அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு முறைப்பாட்டிற்கும் ஆணைக்குழு தனது பரிந்துரைகளை செயற்படுத்தாமை காரணமாக, மேல்நீதிமன்றத்தில் எதுவித வழக்கும் தொடரப்படவில்லை. அதேசமயம், ஆணைக்குழுவின் பதவிகளுக்காக நியமிக்கப்படும் அதிகாரிகளின் உற்சாகமும் குறைந்தமை ஒரு பகிரங்க உண்மையாகும். ஏற்கனவே தமக்குள்ள வளங்களை உரியமுறையில் பயன்படுத்தி அரசகரும மொழிக்கொள்கையை வெற்றிகரமாகவும், முறையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு சரியான திட்டம் தீட்டப்படவில்லை. ஓர் அமைச்சரின் கீழ் இயங்கும் ஆணைக்குழு என்றபடியால் இங்கு இவ்வாணைக்குழு அனுசரிக்க வேண்டிய சுயாதீனத்தன்மையை நாடாளுமன்றத்திற்குப் பொறுப்புக்கூறும் ஓர் இயல்பு இல்லாமை காரணமாக, இது சுயாதீன ஆணைக்குழுவாக மாற்றியமைக்கும் அவசியம் அத்தியாவசியமாகக் காணப்படுகிறது.

எவ்வாறாயினும், அரசகரும மொழிக்கொள்கையை அமுல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து, நுகர்வோர் விவகாரங்களுக்கான அதிகாரசபை விநியோகித்துள்ள, 2019.12.31 திகதியிடப்பட்ட 2156/ 16 இலக்கம் கொண்ட வர்த்தமானியினால் திருத்தப்பட்ட, 2019.08.07 திகதிகொண்ட 2135/ 53 வர்த்தமானி அறிவித்தல் 2020.06.22 ஆம் திகதி வெளியிடப்பட்டமை பாராட்டுக்குரியது. மேற்படி வர்த்தமானப் பத்திரிகைக்கு அமைய நுகர்வோர் விவகாரம் பற்றி அதிகாரசபையினால் அனைத்துப் பண்டங்களினதும் உற்பத்தி பற்றிய முக்கிய விபரங்கள், அனைத்துப் பண்டங்களையும் பொதியில் அடைக்கும்போது, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அது பற்றிய விபரங்களை அச்சிடுமாறு அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் இறக்குமதியாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், வியாபாரிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகள் நுகர்வோர் பண்டங்கள் என்னும் தலைப்பில் 76 பொருட்களுக்கு ஏற்புடையதாகும்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேற்கோள் காட்டிய உரிமை மீறல்கள் பற்றிய விசேட கவனம்

இதன்போது குறித்துரைக்கப்பட வேண்டிய விசேட விடயம்: மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் மேற்கொண்ட முறைப்பாடுகளில் அடையாளம் கண்டுள்ள பண்டங்களில் அதிகமானவை மேற்படி வர்த்தமானப் பத்திரிகைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  இதன்விளைவாக, வர்த்தமானி அறிவித்தல் வலுவாக்கப்படும் திகதியான 2020.09.01ஆம் திகதி முதல் மும்மொழிகளிலும் நுகர்வுப் பொருட்கள் தொடர்பாக அத்தியாவசிய தகவல் மீது கவனம் செலுத்துவதற்கு, அனைத்து நுகர்வோருக்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இதற்கமைய, நுகர்வோருக்கு ஆகக்குறைந்த பட்சம் உற்பத்தி பற்றிய அடிப்படைத் தகவல்களைப் பெறுவதற்கு முடிந்துள்ளமை மிகவும் முக்கிய விடயமாகும்.  மேற்படி நுகர்வுப் பொருட்கள் அவர்களின் பாவனைக்கு அனுகூலமானதா? தகுதியானவையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு முடிந்துள்ளது.  நுகர்வோர் புரியக்கூடிய மொழியில் இத்தகைய தகவல்கள் வழங்கப்படுவதன் காரணமாக, தனிநபர்களுக்கு தமது தாய்மொழியில் (சிங்களம் அல்லது தமிழ்) ஆலோசனை பெறுவதற்கான உரிமை பேணப்படுவது மாத்திரமல்லாமல் நுகர்வோரின் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மீதும் அது நேரடியாக தாக்கம் செலுத்துகிறது.

ஒளடத சிட்டைகளின் தகவல்கள் அரச கரும மொழிக் கொள்கைகளுக்கு ஏற்ப அணுசரிக்கும் முறைமைகளுக்கான போராட்டம்

அரசகரும மொழிக்கொள்கை பற்றிய உரிமை மீறல்கள் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தொடர்ந்து குரலெழுப்பி வந்துள்ளது. இது தொடர்பாக பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுடன் முறைப்பாடு செய்தல், நுகர்வோர் உரிமைகள் பற்றிய விடயத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை. அது மிகவும் பரந்து விரிந்த விடயத்துறையில் செயற்படுகிறது. இது தொடர்பான மற்றுமோர் முறைப்பாடு பின்வருமாறு: ஒளடதங்களின் சிட்டைகளில் உள்ளடக்கப்பட்டுள்ள தகவல்கள் அரசகரும மொழிக்கொள்கைகளுக்கு ஏற்ப குறிப்பிடப்படாமை தொடர்பாக தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகாரசபைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கும் அரசகரும மொழிகள் ஆணைக்குழுவிற்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவிடயமாக பொறுப்புக் கூறவேண்டிய ஏழு பிரதிவாதிகளின் பெயர்கள் குறித்துரைக்கப்பட்டுள்ளன.

  1. தவிசாளர், அரச ஒளடத கூட்டுத்தாபனம்
  2. முகாமைத்துவ பணிப்பாளர், அரச ஒளடத உற்பத்தி கூட்டுத்தாபனம்
  3. பணிப்பாளர், ஒளடதங்களை ஒழுங்குறுத்தும் அதிகாரசபை
  4. சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சு
  5. பணிப்பாளர் வைத்திய வழங்கல் பிரிவு, சுகாதார அமைச்சு
  6. தவிசாளர், தேசிய ஒளடத உற்பத்தியாளர்களின் கூட்டுத்தாபனம்
  7. தவிசாளர், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை

இது தொடர்பாக அரசகரும மொழிகள் ஆணைக்குழு மேற்கொண்ட நடவடிக்கைகளாக இறக்குமதி செய்யப்படும் ஒளடத பொதிகளில் குறிப்பிடப்படும் ஒளடதப் பயன்பாடு பற்றிய விபரங்கள் அரசகரும மொழிக் கொள்கைகளுக்கு அனுகூலமாக தயாரித்தல் பற்றிய முறைப்பாட்டிற்கு ஏற்புடைய கலந்துரையாடல் 2012.03.26ஆம் திகதி அரசகரும மொழிகள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது. அதேசமயம் அங்கு பரிந்துரைக்கப்பட்ட இறக்குமதி செய்யப்படும் ஒளடதங்களில் குறித்துரைக்கப்படும் காலாவதி திகதி, களஞ்சியப்படுத்தல் சம்பந்தமான ஆலோசனைகள், பயன்பாட்டின் பின்னர் செய்யத் தகாத நடவடிக்கைகள்/ இடைநேர் விளைவுகள், மருந்தின் அளவு என்பன ஒரு நோயாளர் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டிய விடயங்கள். அரசகரும மொழிக்கொள்கைகளுக்கு அனுகூலமாகத் தயாரிக்கப்பட வேண்டும்.  இந்நிலைமை உள்நாட்டிலும் உற்பத்தியாளர்களின் ஒளடதங்கள் தொடர்பாகவும் ஏற்புடையது என குறித்துரைக்கப்பட்டது.

இதுபற்றி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டிற்குரிய விசாரணையின்போது நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை முறைப்பாட்டாளர் தரப்பில் முன்வைக்கப்பட்ட யோசனை தகுதியானதென ஏற்றுக்கொண்டு பின்வரும் முன்மொழிவுகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பித்தது. அதாவது நுகர்வோர் விசாரணை செய்யும்போது, தாம் பெறும் ஒளடதங்கள் பற்றி நுகவர்வோருக்கு அவசியமான அனைத்து விபரங்களும் அவர்களுக்கும் கூடிய தேர்ச்சியுள்ள மொழிமூலம் மருந்தாளரிடம் கேட்டு அறிவதற்கு உரிமை உண்டு. அதேவேளை, சகல ஒளடத விற்பனை நிலையங்களிலும் இரண்டு அரசகரும மொழிகளிலும் இணைப்பு மொழியான ஆங்கில மொழியிலும் குறிப்பிடப்படும் விளம்பரப்பலகையில் காட்சிப்படுத்துவதன் மூலம் நுகர்வேரை அறிவூட்ட முடியும். அதேசமயம், இலங்கையின் ஒளடத உற்பத்தியாளர்கள் இரண்டு அரசகரும மொழிகளிலும் தமது சிட்டைகளில் அல்லது பொதிகளில் மேற்படி ஒளடதம் தொடர்பான தகவல்களைக் குறிப்பிடுதல் வேண்டும். இதன்போது குறிப்பிட்ட ஒளடதம் பற்றி சாதாரணமாக ஒரு நோயாளர் அறிய வேண்டிய விபரங்கள் மாத்திரம் போதுமானதென இந்த அதிகாரசபை பரிந்துரைக்கும் அதேவேளை, மேற்படி தகவல்கள் ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகாரசபையின் பரிந்துரைகளுக்கமைய குறிப்பிடப்பட வேண்டுமெனவும் இந்த அதிகாரசபை பரிந்துரைக்குமென ஓர் இணக்கப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னே உறுதிப்படுத்தப்பட்டது.

ஒளடத பொதிகளில் உள்ள தகவல்கள் அரசகரும மொழிக் கொள்கைகளுக்கு அமையாவிடின் அதுபற்றிய அடிப்படை உரிமைகள் சார்ந்த வழக்கு

பின்னர் மேற்படி நியமங்களுக்கு பிரதிவாதிகள் உடன்படாத காரணத்தினால் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இதுவரை அடிப்படை உரிமைகள் தொடர்பான SEFR/102/16 இன் கீழ் வழக்குத் தொடரப்பட்டது. அவ்வழக்கு தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் சாதகமான நடவடிக்கையாக, அடையாளம் காணப்பட்ட சில ஒளடதங்களின் தகவல்களை அரசகரும மொழிக்கொள்கைகளுக்கமைய 2020.01.01 திகதி முதல் விநியோகம் செய்வதற்கு ஏற்புடையவாறு தேசிய ஒளடத ஒழுங்குறுத்தும் அதிகாரசபையினால் 2019.10.14 திகதிய வர்த்தமான பத்திரிகை இலக்கம் 2145/01 இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தேசிய ஒளடத ஒழுங்குறுத்தும் அதிகார சபையினால் விநியோகிக்கப்பட்டுள்ள இந்த வர்த்தமானப் பத்திரிகை இலங்கை ஒளடத கைத்தொழிற் சபையினால் மேல் நீதிமன்றத்தின் முன்னே சவாலுக்கு உட்படுத்தப்பட்ட அதேவேளை இது எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.

இந்த வர்த்மானி அறிவித்தலின் மூலம் அரசகரும மொழிக்கொள்கையை அமுலாக்குதலும், நுகர்வோருக்கு தீர்மானகரமான தகவல்களை வழங்கும் முக்கிய முன்நடவடிக்கையை குறிப்பிடும் அதே வேளை, இந்தச் சாதகமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டமைக்கு எதுவித சான்றும் கிடையாதென்பதை வலியுறுத்த வேண்டியுள்ளது. இத்தகைய பின்னணியில் நுகர்வோரின் உரிமைகளையும் நல்வாழ்வினையும் பாதுகாத்து பொறுப்புடன் செயற்படுவது அனைத்து தரப்பினரதும் சட்டம் மற்றும் சமூகக் கடமையாகும். இக்குறிக்கோள் சகல மட்டங்களிலும் சாதகமாகவும் ஒழுங்காகவும் அமுலாக்குவதை சான்றுப்படுத்துவதற்கு அரசகரும மொழிக் கொள்கையை நடைமுறையில் செயற்படுத்துவதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும்.

சட்டத்தரணி துமிந்து மதுஷான்,
ஆய்வாளர், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்