67 வயதாகும் சின்னையா மாரிமுத்துவுக்கு தன்னுடைய பெயரே மறந்துவிட்டது. பெற்றோர்கள் வைத்த பெயரை ஊர் மக்கள் மாற்றிவிட்டார்கள். 50 வருடங்களுக்கும் மேலாக டோலக் வாசித்துவருவதால் டோலப்பா என்றே அழைக்கப்படுகிறார். மஸ்கெலியா, பிறவுண்ஸ்வீக் தோட்டத்தில் காலம் காலமாக இடம்பெற்றுவரும் திருவிழாக்கள், பஜனை, திருமணம், வீட்டு நிகழ்வுகள், துக்க நிகழ்வுகள் என அனைத்திலும் இவர்தான் ஹீரோ. இவரில்லாமல் நடக்கும் விழாக்கள் விசேஷமாக இருக்காது என்கிறார்கள் ஊர் மக்கள்.

டோலக் உடனான தன்னுடைய வாழ்க்கைப் பயணம் பற்றி மாற்றத்துடன் பகிர்ந்துகொள்கிறார் டோலப்பா.