பட மூலம், Selvaraja Rajasegar

பெண் பிள்ளை பிறந்து 40 நாட்களுக்குள் ஒஸ்தா மாமி என்று அழைக்கப்படும் பண்பாட்டு தாதியைக் கொண்டுதான் இந்த கத்னா என்று சொல்லப்படும் பிறப்புறுப்புச் சிதைவை செய்கிறார்கள். இப்போதும் செயற்பாட்டு தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்ற ஒஸ்தா மாமிகளை நாங்கள் சந்தித்திருக்கிறோம். இப்போதும் இலங்கையில் கத்னா நடைபெறுகிறது என்பதில் எந்தவித சந்தேகமோ மாற்றுக் கருத்தோ இல்லை என்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளரான ஸர்மிளா ஸெய்யித்.

இன்று பெண் பிறப்புறுப்புச் சிதைப்பை முற்றிலுமாக இல்லாமல் செய்வதற்கான சர்வதேச தினமாகும். மருத்துவ காரணங்கள் இல்லாமல் பெண்ணின் பிறப்புறுப்பில் காயங்கள் ஏற்படுத்துவதால் பெண்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது. 2030ஆம் ஆண்டில் பெண் பிறப்புறுப்புச் சிதைப்பை பூச்சிய நிலைக்கு கொண்டுவர அரசாங்கங்கள் கொள்கை வகுப்பாளர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட முன்வரவேண்டும் என்றும் ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றுவரும் பிறப்புறுப்புச் சிதைப்புக்கு எதிராக குரல்கொடுத்து வருபவர்களுள் ஸர்மிளா ஸெய்யித்தும் ஒருவர். இது தொடர்பாக ‘மாற்றம்’ அவருடன் பேசியது.

இதனை சிலர் கலாசாரம் சம்பந்தப்பட்டது என்கிறார்கள். சிலர் கலாசாரத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார்கள். மதம் சார்ந்தது, கட்டாயம் மத ரீதியாக இது செயற்படுத்தவேண்டியது என்று சில மதப்பெரியார்கள் உலமாக்கள் உறுதியான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான கருத்து முரண்பாடுகள் ஒருபக்கம் இருக்க கத்னா நடந்துகொண்டுதான் இருக்கிறது. எங்களுடைய பெண் சிறுமிகளின் அழுகையை நிறுத்துவதற்கான வழியை இன்னும் நாம் தேடிக்கொண்டிருக்கிறோம் என்றும் கூறுகிறார் ஸர்மிளா.

அவர் மேலும் கூறும் கருத்துக்களை கீழ் காணும் வீடியோவில் பார்க்கலாம்.

தொடர்புபட்ட கட்டுரைகள்: ‘கிளிட்டோரிஸ்’ச ஆபிரிக்காவிலிருந்து ஆசியா வரை, பட்டர் பூசும் கத்தியா அல்லது கூர்மையான பிளேட்டா: இலங்கையில் பிறப்புறுப்புச் சிதைவுக்குள்ளான பெண்கள்