“83 வன்செயல்கள் பற்றி பேசும்போதெல்லாம் ‘கலவரம்’ என்ற சொல்தான் பயன்படுத்தப்படுகிறது. கலவரம் என்ற சொல் சிக்கலானதாகும். ஒரு மக்கள் கூட்டம் தங்களுக்குள் மோதி வன்முறைகளில் ஈடுபடுவதே கலவரம் என்கிறோம். ஆனால், 83 இடம்பெற்றது அப்படியல்ல, ஒரு மக்கள் கூட்டம் சிறுபான்மை தமிழ் மக்கள் மீது வன்முறை மிகுந்த தாக்குதல் நடத்தியது. ஆகவே, இதனை வன்செயல், தாக்குதல் என்ற சொல்லால்தான் குறிப்பிட வேண்டும்.”
ஜூலை கலவரம் இடம்பெற்று 35 வருடங்களாவதை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு துறைசார்ந்தவர்களை நேர்க்காணல் கண்டுவருகிறது. கலவரம் என்று கூறுவதால் அரசியல் நீக்கம் செய்யப்பட்டுள்ள 1983 வன்செயல், வன்செயல்கள் சிறுபான்மை மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்றபோது சிங்கள மக்கள் எதனை இழக்கிறார்கள்? என்பது குறித்து சமூக நீதிக்கான வெகுஜன இயக்கத்தைச் சேர்ந்த மு. மயூரன் இம்முறை பேசுகிறார்.
ஆசிரியர் குறிப்பு: கறுப்பு ஜூலை தொடர்பாக மாற்றம் வௌியிட்டுள்ள கட்டுரைகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.