படம் | JDS

இலவு காத்த கிளியா

இலவு காத்த கிளியா

தமிழா நீ கிளியா

பான் கீயும் நவி பிள்ளையும்

தஞ்சம் என்றாய்

வஞ்சம் அன்றோ

 

செத்தவன் இயற்கை கணக்கில்

கொன்றவன் ஐ.நா. வரவில்

வாக்குவாதம் பண்ணுவோம்

வரவா போறார் வாழ்ந்தவர்

 

போக்குவரத்து

பாதையெல்லாம்

போட்டுவைத்து

திறந்துவைத்தால்

போட்டுத்தள்ளிய

கணக்கையெல்லாம்

அதனுள்ளே

போட்டுப்புதைத்தார்

 

ஓலம் போட்ட காலம்

மானம் போன காலம்

ஊனம் தோய்ந்த காலம்

வானும் மண்ணும் காணும்

வாழ வழி தேடி

வந்தவன் கதை கோடி

 

பிடி பிடி இடம் பிடி

வெடி வெடி

எதிர் இனம் அழி

என்றன்று வந்தார்

கொன்றுஉயிர் தின்றார்

 

பச்சையாய் ரத்தமாய்

கொத்தாய் குலையாய்

 

மண் நனைய

உயிர் உறைய

தின்றும் திணறத்திணற

கொன்றும்

வென்றோம் என்றே

வீரம்பாடி

தென்மண் முத்தமிட்டு

வெற்றியென்றாய் தாய்மண்

மீட்புயென்றாய்

தாயைகொண்றதை

திரை மூடி

மார்தட்டி நின்றாய்

 

நாடகம் கண்ட உபகண்டமோ

உதவி தந்த வீட்டோ நாடே

பார்த்தும் உயிர் வேர்த்தும்

முடியட்டும் வேடிக்கை பார்…

 

வினாவிடை போட்டியில்

நாலுகேள்வி கேட்டால்

நாலுவருடம் நகர்ந்தால்

தப்பித்து விடலாம்…

 

எதிரியின் எதிரி

நன்பணன்றோ

எமைவிட வீரம் வருவது

நன்றோ

 

சமத்துவக் கொள்கை கெட்ட

சாம்ராஜ்யமே

தர்மம்தனை போதனை

செய்யும்

ராகன் நாடே

 

நீ அழித்த அத்தனை உயிரும்

உயிர்க்கும்

அத்தனைக்கும் உரமாக உன்

செயலே இருக்கும்…

 

ரிஷி