அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டம், மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களை அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி இம்மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை வனப் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்டுவருகிறது. இந்தச் செயற்பாட்டில் உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட செயலகம் என அனைத்தும் களத்தில் இறங்கியுள்ளன.

ஒரு பக்கம், 150 வருடங்களாக தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலத்தைப் பறிப்பதற்கான செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில், மறுபுறம் காணிசீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பெரும்பான்மையின மக்களுக்கு 20, 25 பேர்ச்சர்ஸ் அடிப்படையில் கிராமமே உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இங்கு பெரும்பான்மையினரின் உரிமைகள் மீறப்படாமல் அரசாங்கத்தால் அவை பாதுகாக்கப்பட்டு உறுதிசெய்யப்படுகிறது.

இவ்வாறு காணி பறிபோகும் நிலைக்கு முகம்கொடுத்திருப்பவர்களில் நான்கு பிள்ளைகளின் தாயான சத்தியகாந்தியும் ஒருவர். அவர் தொடர்பான காணொளியைக் கீழே பார்க்கலாம்.

###

குறிப்பு: மொனறாகலை தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கியிருக்கும் ஆபத்து குறித்து மாற்றம் தளத்தில் வெளிவந்த முழு விவரக் கட்டுரையை கீழே தரப்பட்டுள்ள லிங்கினூடாகவும், அதன் கீழே தரப்பட்டுள்ள Adobe Spark ஐ கிளிக் செய்வதன் ஊடாகவும் பார்க்கலாம்.


“இவர்களால் நீர் அசுத்தமாகிறது”: மலையகத் தமிழரை வெளியேற்ற நடக்கும் முயற்சி

பரம்பரை பரம்பரையாக இருக்கிற எங்களுக்கு ஏன் 2 ஏக்கர் தரமுடியாது?” | (காணொளி)

“எமது எதிர்கால வாழ்க்கையே இந்த மண்ணில்தான்” | (காணொளி)


"இவர்களால் நீர் அசுத்தமாகிறது..."

செல்வராஜா ராஜசேகர்


சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்