தான் விரும்பும் இடத்தில் வாழ்வதற்கான சுதந்திரம் ஓர் அடிப்படை உரிமை என்று இலங்கை ஜனநாயக குடியரசின் அரசியலமைப்பின் 14ஆவது பிரிவு கூறுகிறது. இலங்கை நாட்டின் பிரஜைகளான பெருந்தோட்டங்களில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்த உரிமை உள்ளது. அதேபோன்று அரசியலமைப்பின் 12ஆவது பிரிவின் படி, சட்டத்தை நடைமுறைப்படுத்துவது, நிலைநாட்டுவது, அதன் மூலம் பாதுகாப்பைப் பெறுவது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி இலங்கையில் தற்போது அமுலில் உள்ள காணிச் சட்டங்களுக்கு உட்பட்டு காணி உரிமையைப் பெற்றுக் கொள்ளும் உரிமை தோட்டத் தொழிலாளர்களுக்கும் இருக்கிறது.
இருந்தபோதிலும், அரசாங்கத்தால் கைவிடப்பட்ட நிலையில், காணிச்சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மொனறாகலை மாவட்டத்துக்குச் சொந்தமான மொனறாகெலே மற்றும் அலியாவத்தை தோட்டங்களில் 5, 6 தலைமுறைகளாக வாழ்ந்துவரும் தோட்டத் தொழிலாளர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டுவருகிறது.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை பிரதான ஜீவனோபாயமாகக் கொண்டு வாழும் இவர்களின் காணிகளை தற்போது பறித்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இயற்கை நீருற்றுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறி மக்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை வனப் பாதுகாப்புத் திணைக்களம் மேற்கொண்டுவருகிறது. இந்தச் செயற்பாட்டிற்கு உள்ளூராட்சி நிறுவனங்கள், மாவட்ட செயலகம் என அனைத்தும் களத்தில் இறங்கியுள்ளன.
ஒரு பக்கம், 150 வருடங்களாக தமிழ் மக்கள் வாழ்ந்துவரும் நிலத்தைப் பறிப்பதற்கான செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்ற நிலையில், மறுபுறம் காணிசீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் பெரும்பான்மையின மக்களுக்கு 20, 25 பேர்ச்சர்ஸ் அடிப்படையில் கிராமமே உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இங்கு பெரும்பான்மையினரின் உரிமைகள் மீறப்படாமல் அரசாங்கத்தால் அவை பாதுகாக்கப்பட்டு உறுதிசெய்யப்படுகிறது.
மொனறாகலை, அலியாவத்தை – மொனறகெலே ஆகிய கைவிடப்பட்ட இரு தோட்டங்களிலும் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மீறப்படுவது குறித்து Adobe Spark ஊடாக தயாரிக்கப்பட்டுள்ள கட்டுரையை இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.
###
சமூக ஊடகங்களில் மாற்றம்:
பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்
ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்
இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்