2008ஆம் ஆண்டில் இருந்து நான் செய்வது போன்று தேர்தல் வன்முறை கண்காணிப்பின் போது ஒன்லைன் ஊடகத்தை கையாள்வதானது பிரச்சாரம், அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பாக வாக்காளர்கள் பிரதிபலிப்பை வெளிப்படுத்தும் விதம் பற்றிய உள்ளார்ந்த பார்வையை வழங்குகிறது. 2015ஆம் ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கும் அதே ஆண்டு ஓகஸ்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கும் முன்னரான சம்பந்தப்பட்ட பரபரப்பான நிலைமைகளை உதாரணத்துக்கு எடுத்துக்கொள்வோம். மஹிந்த ராஜபக்ஷவின் ஒன்லைன் சமூக ஊடக பிரசாரமானது அதன் மிகுந்த பரபரப்பான நிலையில் காணப்பட்டது. டுவிட்டரில் புதிதாக உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கணக்குகள், டஜன் கணக்கான பேஸ்புக் பக்கங்கள் வாசக செய்தியிடலுடன் இணைந்ததுடன், வாட்ஸ்அப் போன்ற பயன்பாடுகளிலான உள்ளடக்கங்களும் கூட அந்த காலப்பகுதியில் முன்னணி விளம்பர நிறுவனங்களிலும் அதேபோல், தனியார் துறையிலும் உள்ள பிரசார வடிவமைப்பாளர்களால் ஒருங்கிணைக்கப்பட்டோ அல்லது ஈர்க்கப்பட்டோ இருந்தது.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சம்பந்தப்பட்ட பரபரப்பான நிலைமையிலான உரையாடல்களிலானது முக்கிய நபர்கள் அல்லது குறிப்பான வேட்பாளர்களை பெயர் குறிப்பிடுவதில் இருந்து தவிர்த்திருந்தன. மாற்றத்துக்கான ஆர்வமுடனான விருப்பம் மற்றும் வாக்களிக்கச் செல்வதன் முக்கியத்துவம் ஆகியனவே முக்கிய செய்திகளாக இருந்தன. பல்வேறு ஊடக ஒன்லைன்களிலும் இவை தெளிவாகப் பேசப்பட்டிருந்தன. பொதுத் தேர்தல் முழுவதிலும் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. நாட்டில் முதற் தடவையாக பேஸ்புக், அதன் பயன்பாட்டாளர்களை வெளியில் சென்று வாக்களிக்குமாறு அதுவாக கேட்டிருந்தது. பயன்பாட்டாளர் ஒருவர் தாங்கள் வாக்களித்ததாகக் கூறியதை அடுத்து, தேர்தல்கள் திணைக்கள இணையத்தளத்துக்கு இணைப்பைக் கொண்டிருந்த ஸ்ட்டேட்டஸ் செய்தியானது தேர்தல் தினத்தன்று ஆரமபத்திலேயே உடனடியாக செயலிழந்தது. ஒருவேளை, இந்த இணைப்பானது அதனூடாக கிளிக் செய்யும் மக்களின் எண்ணிக்கை வழங்கப்பட்டதாக இருந்திருக்கலாம். இருப்பினும், சமூக ஊடகத்திலும் ஒன்லைனிலும் வெளிப்படையாக என்ன பகிரப்பட்டிருந்தது என்பதே மிகவும் சுவாரஸ்யமானதாக இருந்தது.
தாங்கள் யாருக்கு வாக்களித்தோம், ஏன் என்பதை பகிரங்கமாக வெளிப்படுத்துவதற்கும் அதே வேட்பாளர்களுக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிப்பதற்கு ஏனையவர்களை வாக்களிக்க ஊக்குவிப்பதற்கும் பேஸ்புக்கை பலரும் மேடையாக பயன்படுத்தியிருந்தனர். அப்படியிருக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரான சம்பந்தப்பட்ட பரபரப்பான நிலைமைகளில், சமூக ஊடகங்களில் ஆட்சி மாற்றம் பற்றிய கருத்துக்கள் பெருமளவில் அதிகரித்து காணப்பட்டன. அதேபோல், பொதுத் தேர்தலுக்கு முன்னரான சம்பந்தப்பட்ட பரபரப்பான நிலைமைகளில் பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் விருப்பு வாக்குகள், அரசியல் அப்பிராயங்கள் அல்லது அரசியல் எதிர்க்கருத்துக்கள் பற்றி வெளிப்படையாகப் பேசியிருந்தனர்.
ராஜபக்ஷ ஆதரவு முகாமானது கருத்தொருமித்த தவறான தகவல்கள், தவறான செய்திகள் மற்றும் அவதூறு பிரசாரத்தை தொடங்கியிருந்தது. எனினும், அது எதிர்பார்க்கப்பட்ட ஈர்ப்பையோ அல்லது ஆதரவையோ பெற்றிருக்கவில்லை. கடுமையான தணிக்கை பரப்பொன்றுக்குள் தகவல் வெளிவருதலை தடுக்கும் முன்னயை ஆட்சியின் செயன்முறையானது தொடர்ச்சியற்ற தாவிச்செல்லும் பரப்புகளைக் கொண்ட ஒன்லைன் பிரவேசத்தின் விளைவாக வீழ்ச்சிகண்டமையே இதற்கான ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று குறிப்பிட்டு நான் ஏற்கனவே எழுதியிருந்தேன். அந்த நேரத்தில் வெளியான அனைத்து தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய 3 மொழிகளிலுமான நூற்றுக்கணக்கான சுயாதீன, விமர்சன குரல்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது அரசாங்கத்தில் இருந்தவர்களின் மிக சோசமான பதிவுகள் குறித்து கேள்வி கேட்பதற்கான அழைப்புகள் மத்தியில், அநாமேதய கைக்கூலிகளின் வழக்கமான கலகமூட்டும் மொழிப் பயன்பாடு மற்றும் தவறாக வழிநடத்தும் தகவல் தயாரிப்புகள் என்பன ஒரு அடக்குமுறை அரசியல் சூழலின் கீழ் சாத்தியப்பட்டிருக்க கூடியதைப் போன்ற அதே தாக்கதை ஏற்படுத்தியிருக்கவில்லை.
இந்தத் தகவல் பிரவாகங்கள் ஆய்வு செய்யப்பட வேண்டியது மிகவும் முக்கியமாகும். நான் வடிவமைக்க உதவிய மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வறிக்கை, ஏற்கனவே முதிர்ச்சியானவை, விவாதத்துக்கு வலுவான மேடைகள் மற்றும் இளைஞர்களுக்கான செய்தி மற்றும் தகவலின் முக்கிய காவிகள் என்ன என்பது பற்றிய சில புரிதல்களை இந்த ஆய்வறிக்கை வழங்குகிறது. சுற்றியுள்ள நுகர்வு வகைகள் மற்றும் பிரதான அதேபோல் சமூக ஊடகங்கள் பற்றிய உணர்வுகளைப் பார்த்து இந்த ஆய்வானது கடந்த வருடம் ஜூலை மாதம் மேல் மாகாணத்தில் நடத்தப்பட்டது. 1,743 பேர் நேரில் பேட்டி காணப்பட்டதுடன், இந்த ஆய்வானது சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் நடத்தப்பட்டது. கருத்து பெறப்பட்டவர்களில் 70 சதவீதமானோர் 18 – 34 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருந்தனர்.
சமூக அல்லது பிரதான ஊடகங்கள் ஊடாக தாங்களால் உள்வாங்கப்படும் விடயங்களானது ஒரு விவகாரம் பற்றி மேலும் தெரிந்துக்கொள்வதற்கு அவர்களை நிர்ப்பந்திப்பதாக கருத்து கணிப்பில் கலந்துகொண்ட பாதி பேர் தெரிவித்தனர். மின்னஞ்சல் வாயிலாக சுவாரஸ்யமான கட்டுரையொன்றை பெறுகையில், கருத்து கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 55.9 சதவீதமானோர் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமல்லாது, குறிப்பாக சமூக ஊடகத்திலான உள்ளடக்கத்தினதும் பொதுவாக ஒன்லைன் உள்ளடக்கத்தினதும் செல்வாக்கானது நேரடியான தொடர்பிலுள்ளவர்களுக்கு மிகவும் அப்பால் இருக்கின்றபோதிலும், இந்த ஒன்லைன் வலையமைப்புகளில் பங்குகொள்ளும் குழுக்களுக்கு விஸ்தீரனமாவதை எடுத்துரைத்து, ஒன்லைன் தொடர்பில் அறிந்துகொண்ட ஏதேனும் விடயம் பற்றி தங்களது குடும்பம் மற்றும் நண்பர்கள் மத்தியில் விழப்புணர்வை ஏற்படுத்தியிருப்பதாக 61.5 சதவீதமானோர் தெரிவிக்கின்றனர். நாட்டில் இணையத்தள ஊடுறுவல் ஒப்பீட்டளவில் குறைவு என்பதால், உள்ளடக்கம் பகிரப்பட்ட ஒன்லைனானது பெரிதளவிலான பொதுமக்கள் விழிப்புணர்வு நிலையில் எந்த தடமும் கிடையாது என்பதில் ஓரளவையே கொண்டுள்ளது என்று அடிக்கடி காட்டப்படும் மேற்கோளுக்கு இது இடைநிறுத்தமொன்றையும் வைக்கிறது.
முதலில் நம்பப்பட்டிராத செய்தி கட்டுரையொன்று நண்பர் ஒருவரினால் சமூக ஊடகமொன்றில் பகிரப்பட்டிருந்தால், தங்களது ஆரம்ப அபிப்பிராயத்தை மீள் பரிசீலனை செய்ய வேண்டியிருப்பதாக கருத்து கணிப்பில் கலந்துகொண்டோரில் அரைவாசிக்கும் அதிகமானோர் (51.5 சதவீதம்) தெரிவித்துள்ளனர். ஒப்பீட்டளவில் குறைவான ஊடக அறிவை கொண்ட நாடொன்றில் அரசியலில் அதிகம் ஆர்வம் கொண்ட மற்றும் தமது முதன்மையான தகவல்களை ஒன்லைன் மூலங்களில் இருந்து பெறும் மக்கள் தொகையானது, துல்லியமானதும் பக்கசார்பற்றதுமான உள்ளடக்கத்தில் இருந்து பெரும்பாலும் அரிதாகவே விலக்கப்பட்ட, அதிகமாக பரவும் அல்லது வழங்கப்பட்ட எந்த நேரத்திலும் பிரபலமான விடயங்களையே நமப்புவதற்கு முனைவார்கள் என்பதையே “பேஸ்புக் விளைவு” அர்த்தப்படுத்துகிறது.
பொதுமக்களுடன் தொடர்புகளை மேற்கொள்வதற்கு எம்.பி.க்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று 42 சதவீதத்துக்கும் அதிகமானோர் நம்புகின்றனர். பெரும்பாலான அரசியல்வாதிகளும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ சமூக ஊடக கணக்குகளும் வெறுமனே தகவல்களை வெளியிடும்போது அவர்கள் தொடர்புகளில் ஈடுபடுவதன் மீதான அழுத்தத்தை குறிப்பிட்டுள்ளனர்.
தனியார் தொலைக்காட்சியே கருத்து கணிப்பில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான செய்தி மூலமாக காணப்படுவதுடன், அதனை அடுத்து பேஸ்புக் மற்றும் இணையத்தளங்கள் காணப்படுகின்றன. இதேநேரம், கருத்துக்கணிப்பின் அவதானிப்புகளை வயது மட்டத்தில் பிரிக்கும் போது, 18 – 24 வயதுக்கு இடைப்பட்டவர்களின் பிரதான செய்தி மூலமாக பேஸ்புக் காணப்படுகிறது. தொலைக்காட்சி பார்க்காத மக்கள் தொகையொன்றுக்கு நீண்ட நிகழ்ச்சிகளின் குறுகிய டிஜிட்டல் வீடியோ க்ளிப்புகள் தொலைக்காட்சியொன்றில் வேண்டுகோள் விடுப்பது என்பது சிறப்பாக இருக்கக்கூடும்.
கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் 77.3 சதவீதமானோர் இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதற்கு ஸ்மார்ட்போனையே முதன்மையான சாதனமாக பயன்படுத்துகின்றனர். உள்ளங்கையில் நுகரப்பட்டிருப்பதற்கு அல்லது பெருவிரலால் வழிசெலுத்தப்பட்டிருப்பதற்கு துணைக்கருவியாக இருந்திராத தகவல் அல்லது ஆதரவு திரட்டும் பிரசாரங்கள் இலகுவாக சாத்தியமாகாது என்பதே இதில் இருந்தான ஒரு எடுத்துகாட்டாகும்.
ஒன்லைனில் தாங்கள் வாசித்த அல்லது பிரதான ஊடகங்கள் ஊடாக தாங்கள் அறிந்துக் கொண்ட யாதேனும் விடயங்கள் காரணமாக அரசியல் அல்லது சமூக விவகாரம் பற்றி மேலும் கற்றுக்கொள்ள கடந்த ஓராண்டாக தாங்கள் தீர்மானித்திருந்ததாக கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டவர்களில் சுமார் 50 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.
ஊடகத்தின் மரணம் பற்றி வருந்தி ஏங்குபவர்கள் சுவாசிக்க முடியும். இந்த புள்ளிவிபரமானது, எது அறிக்கையிடப்பட்டது என்பதன் மூலமும் விஸ்தரிப்பின் மூலமும் பொதுமக்கள் அபிப்பிராயம் எப்படி வடிவமைக்கப்படுகின்றன என்பதற்கு இடையிலான நீடித்த தொடர்பை எடுத்துக்காட்டுவதுடன், தொடர்ந்தும் இருக்கும் ஆழமான கட்சிசார்பு, பழமைவாதம் மற்றும் பிற்போக்குடைய பிரதான ஊடக நிகழ்ச்சிநிரல் என்பன அவசரமாக மாற்றியமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் கோடிட்டுக்காட்டுகிறது.
மாதாந்த வாடகை செலவிலான குறைப்பொன்று என்பது கருத்துக்கணிப்பில் கலந்துக்கொண்டவர்களில் 35 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கு அவர்களின் பயன்பாட்டிலான அதிகரிப்பொன்றாகவே பார்க்கப்படும் அதேநேரம், 18 – 24 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு பிரதானமாக அவர்களது டேட்டா பெக்கேஜிலான அதிகரிப்பொன்றாகவும் (42.7 சதவீதம்), 25 – 34 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு அதிகமான வேகமாகவும் (41.6 சதவீதம்) காணப்படுகிறது. நுகர்வுக்கு பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் உதவித்தொகை வழங்கும் போதோ அல்லது முழுமையாக செலுத்தும் போதே செலவு என்பது ஒரு காரணியாக இருக்காது. எனினும், முதிய பயன்பாட்டாளர்களை எடுத்துக்கொண்டால், ஒன்லைன் செயற்பாடுகளை பேணுவதுடன் ஏனைய பொருளாதார காரணிகள் போட்டியிடும் போது செலவு என்பது தெளிவாக ஒரு தீர்மான காரணியாகவே இருக்கிறது.
குறிப்பாக 2016 ஆம் ஆண்டு முழுவதும், விவாதத்துக்கான இந்த வளமான பரப்புகளை ஆய்வுசெய்தல், புரிந்துக்கொள்ளல் மற்றும் உந்துதளித்தல் முக்கியமாகும். புதிய அரசியலமைப்பை உருவாக்கும் நடவடிக்கையில் சமூக ஊடகம் ஈடுபடுத்தப்படும் என்று பிரதமர் விக்கிரமசிங்க கடந்த வாரம் தெரிவித்திருந்தார். நிலைமாற்று நீதி மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு போன்ற விவகாரங்கள் தொடர்பில் பிரஜைகளை ஈடுபடுத்துவற்கான சாத்தியம் பற்றி சிவில் சமூகம் அதிக ஆர்வம்கொண்டிருக்கிறது. பொது விவாதத்தை வடிவமைப்பதில் குறிப்பாக சமூக ஊடகம் எப்படி ஆழமாக ஏற்கனவே பதிக்கப்பெற்றுள்ளது என்பதற்கு, நாட்டின் மிகவும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்டதும் நாட்டின் நிர்வாக மற்றும் வர்த்த மையங்களுக்கான இல்லமுமான மாகாணத்தில் இருந்து ஈட்டப்பட்ட தரவுகள் ஊடாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆய்வு ஆதாரமளிக்கிறது. சிறப்பாக தீட்டப்பட்ட திட்டங்களையும் நல்ல நோக்கத்தையும் கூட ஊடகங்கள் மீதான தவறான தகவல்களைக் கொண்ட பிரசாரங்கள் எவ்வளவு விரைவாக தடம்புரளச் செய்யக்கூடும் என்பது பற்றிய எச்சரிக்கையாகவும் இந்த அவதானிப்புகள் அமைந்துள்ளன.
The offline effect என்ற தலைப்பில் ‘சஞ்சன ஹத்தொடுவ’ ஆல் எழுதப்பட்டு ஞாயிறு ஐலண்ட் பத்திரிகையில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்.