கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவு இடம்பெற்று நேற்றுடன் ஒரு வாரம் கடந்துள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்புப் பணிகளில் தொடர்ந்தும் 500ற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்சரிவில் பாதிக்கப்பட்ட 57 குடும்பங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பூணாகலை தமிழ் வித்தியாலயம், கொஸ்லந்தை தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த பாடசாலைகளில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், அடுத்த வாரம் தவணைப் பரீட்சை ஆரம்பிக்கப்படவுள்ளதால் இடம்பெயர்ந்து பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு மாற்றிடமாக பாவனைக்குதவாத பழைய தொழிற்சாலை ஒன்று தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் மக்கள் தங்குவதற்கு ஏற்றவாறான வசதிகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலும் நாளை அவர்கள் தொழிற்சாலையில் தங்கவைக்கப்படுவர் என இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

மண்சரிவு இடம்பெற்ற பிரதேசம் மற்றும் முகாம்களில் நிலைமை குறித்து எம்மால் கமராவால் பதிவுசெய்ய முடிந்தது. கீழ் படங்களைக் காணலாம்.