இந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு மதச்சார்ப்பற நாடு. அண்மைக் காலத்தில் இந்து தேசியவாத்தின் செல்வாக்கு, அரசினுடைய தன்மையையும் குடியுரிமையையும் மிகவும் பாரதூரமாக பாதித்தது. இந்திய தேசியவாதம் சுதந்திரப் போராட்டகாலத்தில் உருவானபோது இந்து தேசியவாதமும், முஸ்லிம் தேசியவாதமும் இந்திய தேசியவாதத்திற்கு முரணாக உருவெடுத்தது. இந்து தேசியவாதத்தினதும், முஸ்லிம் தேசியவாதத்தினதும் வேர்கள் காலனித்துவ ஆட்சியைச் சார்ந்தவை. காலனித்துவ காலத்தில் சுதந்திரப் போராட்ட இயக்கம், இந்திய தேசியவாதத்தின் விழுமியங்ளைக் கட்டமைத்தபோது, உயர்சாதி மேட்டுக் குடியைச் சேர்ந்த, அரச வம்சத்தைச் சேர்ந்த இந்துக்களும், இந்திய சுதந்திர போராட்ட இயக்கத்திலிருந்து விலகி, இந்து தேசியவாதத்தை வலியுறுத்தினர். இந்து தேசியவாதம், ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. வினுடைய குறிப்பிட்ட நிகழ்சி நிரலைக் கொண்ட அரசியல்.

இந்து தேசியவாதம்: வரலாற்று வேர்கள்

காலனித்துவ காலத்தில் பின்வரும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்: தொழில்துறையாளர்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், கற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைந்து வெவ்வேறு நிறுவனங்களை உருவாக்கியிருந்தார்கள். அவற்றுள் மட்றாஸ் மஹாஜன் சபை, பூனே சர்வாஜன சபை, Bombay கழகம் இன்னும் பிற. மேற்குறிப்பிட்ட நிறுவனங்கள், எல்லா நிறுவனங்களையும் ஒன்றிணைத்த அரசியல் நிறுவன அமைப்பின் தேவையை உணர்ந்து இந்திய தேசிய காங்கிரஸை 1885 இல் நிறுவின​.[i] சரிவை எதிர்நோக்கியிருந்த சமூகத்தின் ஒரு சாரார் முஸ்லிம், இந்து நிலப்பிரபுக்களும், அரசர்களும் ஒன்றிணைந்து காங்கிரஸின் எல்லாவற்றை உள்வாங்கிய அரசியலை எதிர்ப்பதற்கு முடிவெடுத்தனர். ஆனால், அதுவே காலப்போக்கில் சுதந்திரப் போராட்ட இயக்கத்தை உருவாக்குவதற்குவதற்குரிய கருவியாக அமைந்தது. மேற்குறிப்பிட்ட சரிவைச் சந்தித்த சமூகத்தின் ஒருசாரார் சமூக மாற்றத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகினர். அவர்கள் காலனித்துவ நாயகத்திற்கெதிரான காங்கிரஸின் போக்கை விரும்பவில்லை. ஏனெனில், காங்கிரஸ் பல்வேறு சமூகக் குழுக்களுக்கான கோரிக்கையை முன்வைத்தது, அதுவே இந்தியாவிற்குமானது. தேசிய இயக்கமும், காங்கிரஸும் இந்தியா ஒரு தேசமாக உருவாவதற்குரிய அடிப்படைகளைக் கட்டமைத்தது.

சரிவைச் சந்தித்த சமூகத்தின் ஒரு சாராரும், அரசர்களும், காலனித்துவ நாயகத்திற்கு எதிரான எழுதலை – ஆள்பவருக்கு அல்லது ஆட்சி செய்பவருக்கு எதிராக எழுதலை – எங்களுடைய மதப் படிப்பினைகளுக்கு எதிரானதாக கட்டமைத்து பிரித்தானிய காலனித்துவ கதாநாயகர்களுக்கு விசுவாசமாக இருப்பதை ஊக்கப்படுத்தினார்கள். முஸ்லிம், இந்து நிலப்பிரபுத்துவக் கூறுகள் ஒன்றிணைந்து, ஒன்றிணைந்த இந்திய தேசிய கழகத்தை 1888 இல் உருவாக்கினார்கள்.[ii] இதற்கான தலைமைத்துவத்தை டாக்காவைச் சேர்ந்த நவாப் என்பவரும், காசியைச் சேர்ந்த இராஜா என்பவரும் கொடுத்தனர். பின்னர் பிரித்தானிய சூழ்ச்சி காரணமாக முஸ்லிம்கள் பிரிந்து சென்று முஸ்லிம் லீக் என்ற அமைப்பினை 1906 இல் உருவாக்கினர். இதற்கு சமாந்தரமாக இந்து மேட்டுக்குடியினர் பஞ்சாப் இந்து சபையை 1909 இலும் பின்னர் இந்து மகா சபையை 1915 இலும் உருவாக்கினர்.

இவ்வாறான இனத்தை அடிப்படையாகக் கொண்ட உருவாக்கம் முஸ்லிம் தேசியவாத்திற்கும், இந்து தேசியவாத கட்டமைப்பிற்கும் சார்பாய் அமைந்தது. இந்துத் தேசியவாதிகள், இந்துத்துவத்தை மையமாகக் கொண்ட அரசியல் கருத்தியலைக் கட்டமைத்துக் கொண்டார்கள். இதற்கு முன்னோடியாக இருந்தவர் சர்வார்கார். 1923 இல் வெளிவந்த அவருடைய நூல் ‘இந்துத்தவ அல்லது யார் இந்து’ என்கின்ற நூல் முக்கியமானது.[iii] இந்து சமயம் ஒரு மதம், இந்துத்துவம் என்பது ஆரிய இனத்தை, நிலத்தை, பிராமாணியப் பண்பாட்டை மையப்படுத்திய அரசியல். மேற்கூறப்பட்ட சூழமைவு பிரித்தானியருக்குச் சாதகமாக அமைந்தது. ஏனெனில், குழுக்களாவது காலனித்துவத்திற்கு எதிராக எழுகின்ற தேசிய இனத்தை பலவீனப்படுத்தும். பிரித்தானிய காலனித்துவம் ஒருபுறத்தில் முஸ்லிம்களுக்கு உதவி செய்ததோடு, மறுபுறத்தில் இந்து மகா சபையை – ஆர்.எஸ்.எஸ். மிக இலகுவாக கையாண்டார்கள்.

இந்து தேசியவாதம் – ஆர்.எஸ்.எஸ்.

இந்துத்துவ கருத்தியலிலிருந்து, ஆர்.எஸ்.எஸ், இந்து தேசியவாதத்தின் மூலம், இந்து தேசத்திற்கான இலக்கினை முன்வைத்தது. எழுச்சி கொண்ட வகுப்பினருடைய விழுமியங்கள் பின்வரும் நபர்கள் ஊடாக உருக்கொண்டது, பகவத்சிங், அம்பேத்கார், காந்தி, மௌலானா அப்துல்கலாம் அசாத் இவர்களைப் போன்ற மற்றையவர்கள் இந்திய தேசியவாத்தினையம் அது கொண்டிருக்கும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி போன்ற பண்புகளையும் மையம் கொண்டிருந்தது. முஸ்லிம் லீக் சங்கத்தின் கருத்தியல் முஸ்லிம் மரபிலிருந்து வருகின்ற வகுப்புவாத, சாதிய, பால் வேறுபாட்டு ஏற்றத்தாழ்வு கட்டமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது. இது இந்து மகாசபையும் ஆர்.எஸ்.எஸ்ஸும் பெருநூலான மனுதர்மநீதிக் கோட்பாட்டின் அடிப்படையில் சாதிய, பால்வேறுபாட்டு ஏற்றத்தாழ்வு கட்டமைப்பிலிருந்து உருவாக்கப்பட்டது.

முஸ்லிம், இந்து இனவாதிகள் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் அங்கமாக இருக்கவில்லை, காரணம் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம் அனைவரையும் உள்வாங்கிய மதச் சார்பற்ற ஜனநாயக விழுமியங்களைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. இந்து, முஸ்லிம் இனவாதிகள் கடந்த கால அரசர்களுடைய புகழ்பாக்களிலிருந்து கட்டமைக்கப்பட்டிருந்ததால் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்திற்க எதிரான போராட்டத்திலிருந்து விலகியிருந்தார்கள்.[iv]

பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிராக மக்களை ஒன்று திரட்டும் முயற்சி பிரதானமானது. இதனால் அரசியலமைப்புவாதியான ஜின்னா, மரபுவாதிகளான முஸ்லிம் சங்கம், இந்து மகாசபை போன்றன நகர்ந்து சென்றன. ஆனால், 1920 களின் பின் ஒன்றிணைக்கப்பட்டன. 1920 களிலிருந்து இந்து தேசியவாதத்தின் பாதை மிகத் தெளிவாக விளங்குகின்றது. பிரித்தானிய காலனித்துவத்தின் பக்கம் சார்ந்து முஸ்லிம்களையும், சுதந்திரப் போராட்டத்தையும் எதிர்ப்பது. முஸ்லிம் சங்கமும் அதையே செய்தது, காங்கிரஸை இந்து அமைப்பென்று கருதியதால். இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரமும்,​பாகிஸ்தான் பிளவும் முஸ்லிம் சங்கத்தினர் பாகிஸ்தான் போவதற்கு வலிகோலியது. அதேநேரத்தில் எஞ்சிய பணியாக ‘முஸ்லிம் இனவாதம்’ தக்க வைத்துககொள்ளப்பட்டது. இந்து தேசிய வாதிகள், இந்து மகாசபை ஊடாகவும், ஆர்.எஸ்.எஸ். ஊடாகவும் தங்களை வலுப்படுத்திக் கொண்டனர். மகாத்மா காந்தியின் கொலையின் தொடக்கத்திலிருந்து, காந்தி அந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த இந்துவாக இருந்தார்.[v]

ஆர்.எஸ்.எஸ்: ஒரு சுருக்கமான வரலாறு

ஆர்.எஸ்.எஸ். 1825ஆம் ஆண்டு நாக்பூரில் உருவாக்கப்பட்டது. இவ் உருவாக்கத்திற்குரிய உடனடிக் காரணமாக அமைந்தது உயர்சாதிய, நிலப் பிரபுக்கள் மத்தியில் காந்தி உருவாக்கிய ஒத்துழையாமை இயக்கம் தொடர்பில் அதிருப்தி இருந்தது(1950). இவ் இயக்கம் சாதாரணர்களை சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்கு கொண்டு வந்தது எனலாம். இதுவும் மேட்டுக் குடிகளுக்கு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது எனலாம். அதேவேளை மகாராஷ்டிராவில் உருவாக்கப்பட்ட பிராமணரல்லாத இயக்கம் சமூக உறவுகளை ஆட்டம்காண வைத்தது. குறிப்பாக ஒருபுறம் பிராமண – நிலப்பிரபுக்களையும் மறுபுறம் தலித் தொழிலாளர்களையும். ஆர்.எஸ்.எஸ். உடைய நிறுவுனர்கள், ஹிட்லரால் உருவாக்கப்பட்ட தேசியவாதத்தால் அகத்தூண்டுதளிக்கப்பட்டார்கள்.[vi] ஆர்.எஸ்.எஸ். அமைப்பினைச் சேர்ந்தவர்கள் இந்திய தேசியவாதம் தொடர்பில் வெறுப்புக் கொண்டிருந்தனர். ஏனெனில், அக் கருத்தியல்தான் காந்தியால் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்ட இயக்கத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்தது.

ஆர்.எஸ்.எஸ். இந்து மகாசபையிலிருந்து ஆரம்பித்தது. இந்து மகா சபை இந்து அரசர்களாலும், நிலப் பிரபுக்களாலும் உருவாக்கப்பட்டிருந்தது. பின்னர் அவ் அமைப்பு மத்தியதர புத்திஜீவிகளால் வினாயக் தாமோதர் சர்வர்கரால் வழிநடத்தப்பட்டது. அவர் இந்து கருத்தியலை குறிப்பாக இந்துத்தன்மையை முன்வைத்தார். இந்துத் தன்மை பிராமனிய விழுமியங்கலாளான சாதியத்திலும், பால் ஏற்றத்தாழ்விலும் கட்டப்பட்ட தேசியவாதமாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ். நிறுவுனர்களுடைய முன்மொழிவாக இந்துத்துவம், இந்து ராஜ்ஜியம் என்பன அவர்களுடைய கருத்தியலாகவும், அரசியலாகவும் அமைந்திருந்தது.[vii]

ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய தொடண்டர் படையை பயிற்றுவித்தபோது அவர்களுக்குப் புதிய வரலாற்று திரிபுபட்ட பாடமுறையை அறிமுகப்படுத்தியது. இது இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதோடு, உண்மையை எடுத்துக்கூறவில்லை. அவ் வரலாற்றுத் திரிபு இந்தியா எப்போதுமே இந்து நாடாக இருந்து வந்ததாகவும், முஸ்லிம்களை போர் தொடுப்பவர்களாகவும் சித்தரித்தது. முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் பிறநாட்டவர்கள் எனக் கட்டமைத்தது. காந்தியாலும், ஜவகர்லால் நேருவாலும் முன்வைக்கப்பட்ட இந்திய தேசம் எல்லா மதத்தினருக்குமுரியது என்ற கருத்துப் பிழையானது எனச் சுட்டிக்காட்டி, தற்போது இந்து தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம் தேசத்தை வலுவற்றதாக்கியது. அது நேரடி அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்த்து, இந்துத்துவ கருத்தியலை மையப்படுத்தி சுவாயம் சேவகர்கள் என்கின்ற தொண்டர் சபையை உருவாக்கியது. அத் தொண்டர்படை சுதந்திரப் போராட்ட இயக்கத்திலிருந்து விலகி இருந்தது. ஏனெனில், சுதந்திரப் போராட்ட இயக்கம் மதம் சார்பற்ற, ஜனநாயக விழுமியங்களில் கட்டமைக்கப்பட்டிருந்தது. இத்தொண்டர் படை இந்து தேசத்தை உருவாக்குவதை முன்னிலைப்படுத்தியது, பிராமனிய விழுமியங்களை அகவயகப்படுத்தி.

தொண்டர்படை முற்று முழுக்க ஆண்களை மட்டும் கொண்டதாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. இலட்சுமிபாய் கெல்கர், ஆர்.எஸ்.எஸ்ஸில் பெண்களும் உள்வாங்க்கப்பட வேண்டும் என முன்மொழிந்தபோது, அவர்கள் இரண்டாம் படியான ராஸ்த்திர சேவிக சமித்தி (1936ஆம்) எனும் அமைப்பை உருவாக்கி உள்வாங்கப்பட்டார்கள். இப்பெண்கள் அமைப்பின் பெயர் உருவாக்கத்தில் சுவயம் (சுயம்) என்கின்ற பதம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஏனைய இனவாத அமைப்புகளைப் போல் ஆணாதிக்கத்திலும், எசமானத்துவத்திலும் ஆர்.எஸ்.எஸ். நம்பிக்கை கொண்டிருந்தது. ஆர்.எஸ்.எஸ்., மக்கள் சுதந்திரப் போராட்ட இயக்கங்களில் பங்கேற்பதை ஊக்குவிக்கவில்லை.[viii] ஒரு சிலர் நீங்கலாக (Ks.Hedsewar) ஆர்.எஸ்.எஸ். இலிருந்து எவருமே சுதந்திரப் போராட்டகாலத்தில் சிறை செல்லவில்லை. அப்படிப் போனவர்கள் ஒன்று ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஆட்சேர்ப்பதற்காய் போயிருந்தார்கள், இல்லையெனில் தற்செயலாக போயிருந்தார்கள். அவ்வாறு போயிருந்தவர்கள் பிரித்தானியரிடம் மன்னிப்புக்கோரி சிறையிலிருந்து வெளியேறியிருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் அடல் பிகாரி வாஜ்பேய்.[ix]

இந்தியாவைப் பிரித்து முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தியதாக ஆர்.எஸ்.எஸ்ஸும் இந்து மகாசபையும் காந்தி மீது பழி சுமத்தினர். முன்னர் ஆர்.எஸ்.எஸ்ஸின் விளம்பரதாரராக இருந்த நந்துரும் கோட்சே பின்னர் இந்து மகாசபையில் இணைந்து தேசத்தின் தந்தையை சுட்டுக் கொன்றார். சர்தார் வலபாய் பட்டேல், காந்தியினுடைய இழப்புக் குறித்துக் கூறும்போது, ஆர்.எஸ்.எஸ்ஸினால் முன்னெடுக்கப்பட்டு பரப்பப்பட்ட வெறுப்பினால்தான் இந்தியா தேசத்தின் தந்தையை இழந்தது எனக் குறிப்பிட்டு ஆர்.எஸ்.எஸ்ஸை குறிப்பிட்ட காலத்திற்கு தடை செய்திருந்தார்.[x] சவார்க்கரும் காந்தியினுடைய கொலையில் ஒரு குற்றவாளியாக இனம்காணப்பட்டிருந்தார். ஆனால், உறுதிப்படுத்தும் சான்றுகள் எதுவும் கிடைக்கப்பெறாததால் விடுவிக்கப்பட்டார்.

ஆர்.எஸ்.எஸ். வேறு பல இரண்டாம் தர அமைப்புக்களையும் உருவாக்கியது. அவற்றில் அகில பாரதீய வித்யார்த்தி சபை, மாணவர்களுடன் ஊடாடுவதற்காக உருவாக்கப்பட்டது. சியாமா பிரசாத் முகர்ஜி இந்து மகாசபையைச் சேர்ந்தவர், ஆர்.எஸ்.எஸ்ஸின் உதவியுடன் பாரதீயஜான் சந் ஒன்றுகூடலை 1951 இல் உருவாக்கினார். இது அடையாளம் தொடர்பான பிரச்சினைகளை முன்வைத்து போர்தொடுத்தலை ஊக்குவித்தது. அணு ஆயுதங்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட வேண்டுமென முன்மொழிந்தது. அதேவேளையில் முஸ்லிம்கள் இந்தியமயப்படுத்தப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது. இது ஜய பிரகாஷ் நாராயணன் இயக்கத்துடன் சேரும் வரைக்கும் விளிம்பு நிலை இயக்கமாக இருந்து வந்துள்ளது. ஜனதா அமைப்புடன் பின்னர் இணைந்தது.

ஆர்.எஸ்.எஸ். அரச இயந்திரங்களின் எல்லா அமைப்புகளுக்குள்ளும், சமூகத்திலும், நிர்வாகங்களிலும், காவற்துறை, கல்வி, ஊடகம், நீதித்துறை, இராணுவப்படைக் கட்டுமானம் என ஊடுருவியது. முற்போக்கான தாராளவாத விழுமியங்களை எதிர்த்து மதவாதத்தையும், பழமைவாதத்தையும் பண்பாட்டுத் தளத்தில் இவை வலியுறுத்தியது.[xi]

ஜான் சந், பாரதீய கட்சியுடன் இணைந்து 1977 இல் ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்த தலைவர்கள் அரசாங்கத்தின் அங்கமானார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களுடைய நபர்களை ஊடகத்துறையிலும் ஏனைய அரச இயந்திரத்திலும் உள்வாங்கிக் கொண்டனர். ஜனதாக் கட்சி பிளவுபட்டதன் பின்னர் ஜான் சபை பிரிவினர் பாரதீய ஜனதாக் கட்சியாக உருவெடுத்தனர் (காந்தியினுடைய சோசலிசத்தின் அடிப்படையில்). தேர்தல் நோக்கங்களுக்காக மட்டுமே காந்தியின் சோசலிசம் பயன்படுத்தப்பட்டதே தவிர, அவர்கள் அது கொண்டிருந்த விழுமியங்களில் நம்பிக்கை கொள்ளவில்லை. அது 1984 தேர்தலில் ராஜீவ் காந்திக்கு உதவிக் கரம் கொடுத்தது. அதேநேரத்தில் விஷ்வ இந்து சபையையும், வன்வாசி கல்யாண் ஆசிரமத்தையும் உருவாக்கியது. விஷ்வ இந்து சபை உணர்ச்சிமிக்க பிரச்சினைகளைக் கையிலெடுத்தது. இராமர் கோவில் பிரச்சினை அவர்களுடைய அரசியல் பற்றிற்குரிய கோட்பாடாக உருவெடுத்தது. அவர்கள் நாசி (ஜேர்மனியை) ஒத்த பாஜ்ரங் டால் என்ற அமைப்பை உருவாக்கினர்.[xii]

1960 களிலும், 1980 களிலும் இவ் அமைப்பு சிறுபான்மைக் குழுக்களுக்கெதிரான வெறுப்பை பரப்புரை செய்தது. ஆரம்பத்தில் இது முஸ்லிம்களுக்கெதிராகவும் பின்னர் கிறிஸ்தவர்களுக்கெதிராகவும் இருந்தது. இதன் விளைவாக நாடெங்கும் சிறுபான்மையினருக்கெதிரான வன்முறை வெடித்தது. இவ் வன்முறையில் 80 வீதமாக பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களே ஆவர். பெரும்பாலான விசாரணைக் குழுக்களின் அறிக்கையிலிருந்து வன்முறைக்கான காரணகர்த்தாக்களாக ஆர்.எஸ்.எஸ். அமைப்போடு தொடர்புடையவர்கள் இனங்காணப்பட்டனர்.[xiii] அவர்கள் வன்முறைக்கான பொய்க்காரணத்தை உருவாக்கியிருந்தனர். அரச இயந்திரம் இனவாதமயப்படுத்தப்பட்டிருப்பதால் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமலேயே போயினர். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அரசியல் தலைவர்கள் தங்களுடைய குறுகிய அரசியல் லாபங்களுக்காக இனவாத வன்முறையைப் பயன்படுத்தியுள்ளனர். இராமர் கோவிலைச் சுற்றி உருவாக்கப்பட்ட சமூக வெறுப்பு பாபர் மசூதியை அழிக்குமளவிற்குச் சென்றது. மும்பை, போபால், சுரக் போன்ற இடங்களில் பாரிய இனவன்முறைகளுக்கும் இட்டுச் சென்றது. மும்பையில் 1992 – 93 இல் நடைபெற்ற வன்முறை முழு நாட்டையும் ஆட்டங்காண வைத்ததுடன் சிறுபான்மையினர் மத்தியில் அச்சத்தையும் உண்டுபண்ணியது எனலாம்.

வன்முறைக் கலவரங்களினால் ஆர்.எஸ்.எஸ். இன்னும் வலுவான அமைப்பாக உருப்பெற்றதுடன், அதனுடைய அரசியல் பிரிவான பாரதீய ஜனதாக் கட்சி வளர்ந்து 1996 இல் மத்தியில் ஆட்சி அமைத்தது.[xiv] அது மீண்டும் ஆர்.எஸ்.எஸ்ஸின் கண்காணிப்பின் கீழ் ஆறு வருடங்களுக்கு அட்சி அமைத்தது. கிறிஸ்தவ மிசனரிமார்கள், ஆதிவாசிகளுடைய வாழ்க்கை, நலத்திட்ட மேம்பாட்டிற்காக உரிமை மைய அணுகுமுறையில் உழைத்துக் கொண்டிருப்பதனால் அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களுக்கெதிரான வன்முறையைத் தூண்டிவிட்டனர். அதன் விளைவாக வன்முறைக்கான காரணமாக மதமாற்றத்தைக் குறிப்பிட்டனர். போதகர் கிறாகாம் ஸ்ரூவேர்ட் ஸ்ரெய்ன்ஸும் அவருடைய இரு புதல்வர்களும் உயிருடன் எரியூட்டப்பட்டனர். போதகர் மதமாற்ற வேலைகளில் ஈடுபட்டதன் விளைவாக இச் சம்பவம் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், வாத்வா ஆணைக்குழு தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்ட போதகர் எவ்வித மதமாற்ற நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை எனக் குறிப்பிட்டிருந்தது. மிக மோசமாக கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி செய்த குஜராத்திலும், பின்னர் ஒரிசாவின் கந்தமாலிலும் இடம்பெற்றது. ஒவ்வொரு வன்முறையின் பின்னரும் பா.ஜ.க. உறுதியாக வளர்ந்தது.[xv]

அமெரிக்காவின் 9/11 தாக்குதலின் பின்னர் பூகோள ரீதியான பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடுக்கப்பட்டபோது, ஆர்.எஸ்.எஸ். முஸ்லிம்களை அரக்கர்களாக கட்டமைத்தது. எல்லா பயங்கரவாதிகளுமே முஸ்லிம்கள் என்று சொல்லாடலை அறிமுகம் செய்தது. மாலேகானில் 2006 இல் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பிரக்யாசிங் தாகூர் ஈடுபட்டுள்ளமைக்கான சாட்சியங்கள் வெளிவரத் தொடங்கின. மேற்கூறப்பட்ட நபர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினோடு தொடர்புடைய எபிவிபி இன் அங்கத்தவர் என்பது தெரியவந்தது. அந்தக் குண்டு வெடிப்பிற்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வண்டிதான் இவ்வுண்மைகளை வெளிக்கொணர்ந்தது. இது ஏனைய ஆர்.எஸ்.எஸ். தொழிலாளர்கள் சத்வியுடன் ஒன்று சேர்வதற்கு இட்டுச் சென்றது.[xvi] மகாராஷ்ரா எரிஸ் பிரித்தானியாக இருந்த ஹேமன் கர்காரே அப்போது இராணுவ கடமையில் இருந்த அதிகாரிகளான லெப்டினட் கேணல் பிரசாத் சிறிகாந் புரோகித், சுவாமி தயானந் பாண்டே, மேசப் யாதே போன்றவர்களின் வகிபங்கு பற்றி விசாரித்து ஆராய்ந்து கொண்டிருக்கும்போது 26-11 வன்முறையில் மும்பையில் கொல்லப்பட்டார்.

குண்டு வெடிப்புக்களுக்குரிய தொடர்புகள் பற்றிப் பார்க்கும்போது குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பெரும்பாலானவர்கள் இந்து ராஜ்ஜியம் என்ற கருத்தியலை ஏற்றுக்கொண்டவர்களாக இருக்கின்றார்கள் அல்லது ஆர்.எஸ்.எஸ்ஸின் ஏனைய அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களாயிருக்கின்றார்கள். இந்து ஜாக்ரன் சமித்தி (சபை), மும்பையில் தானே என்கின்ற இடத்தில் வன்முறையை கையில் எடுத்தது. மேற்குறிப்பிட்ட அமைப்பு இந்து மகாசபையாலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களாலும்  ஊக்கமளிக்கப்பட்டு கலியுகத்தில் இந்துக்களும் தேவர்களும், அரக்கர்களை (முஸ்லிம்ளும் கிறிஸ்தவர்களும்) எதிர்கொள்ள வேண்டும் என நம்பினார்கள். அவர்களைப் பொறுத்தவரையில் வன்முறையைக் கையிலெடுப்பதனூடாக முஸ்லிம், கிறிஸ்தவ சமூகங்களுக்குப் பாடம் புகட்டுவதே இலக்காக இருந்தது.

இனங்களுக்கிடையே துருவமயப்படுத்தல் அதிகமாகியபோது தேர்தலில் வெற்றி பெறுவதென்பதும் (பலம் பெறுவது) உறுதியானது. அன்னா ஹசாரே இயக்கத்தின் உதவியோடு 2014 தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். காங்கிரஸின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியது. வணிக நிறுவனங்களின் உதவியுடனும், களங்கமற்ற தேர்தல் முகாமைத்துவத்தின் துணையுடனும் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. 2014 இலிருந்து ஏனைய தோற்றப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ்ஸினுடைய ஷகாஸின் எண்ணிக்கை அதிகர்த்துக்கொண்டே போனது. உணர்ச்சியைத் தூண்டி விடுகின்ற பிரச்சினைகள் சகிப்புத் தன்மையின்மையான சூழலை உருவாக்கியது. அத்தோடு சிறுபான்மையினரை இரண்டாம் தர பிரஜைகளுமாக்கியது.[xvii]

இந்து தேசியவாதிகள் முதலில் ஜான்சவ்வை(19510) இல் உருவாக்கினர். பின்னர் பா.ஜ.கவை உருவாக்கினர். இத் தேசியவாதிகள் பிரதான பிரச்சினையாக கூட்டுறவு விவசாயமுறைக்கெதிராகவும் அரசுத்துறைக்கெதிரவும் தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்ததோடு, வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுத்தார்கள். உதாரணம்: முஸ்லிம்களை இந்திய மயப்படுத்தல், பசுவதைக்கு எதிராக பசுக்களைப் பாதுகாத்தல், அன்பு ஜிகாத் கார் வப்பாசி (இந்து சமயத்திற்கு மீண்டும் மதம் மாற்றுதல்), அத்துடன் பாகிஸ்தானுக்கெதிரான மிதவாத தேசியவாதம், பாகிஸ்தானுக்கு எதிரான வெறுப்பு, இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுடன் தொடர்புகளைப் பேணுவதாயிருந்ததால் அவர்களை சமூகத்திற்கெதிரானவர்களாக மாற்றுதல் போன்றன.

அடையாளம் தொடர்பான பிரச்சினைகள் மத தேசியவாதத்திற்கு தீனி போட்டுக் கொண்டிருந்தன. உதாரணம்: இராமர் கோவில், பசு தாயாக (கோமாதா), இராம் சேது, 370 சரத்தை நீக்குதல், ஒரே மாதிரியான உரிமையியல் விதித்தொகுப்பு போன்றவை உணர்ச்சியைத் தூண்டக்கூடிய செயற்பாடுகளுக்கு தூபமிட்டன. யாருடைய ஆட்சியின் கீழ் அதிகமான வன்முறைக் கலவரங்கள் இடம்பெற்றன என்பதை கோடிட்டுக் காட்டும்போது, இனவாத வன்முறைக் கலவரத்திற்கு காரணமானது ‘மற்றைமைகளை’ வெறுத்தல் என்பதை மறந்து போகக்கூடிய சூழல் இருக்கின்றது. பெரும்பாலான இனவன்முறைகள், இனவாத ஆட்சி அமைப்பதற்குக் காரணமாயிருந்தன. இதனால் சமூகங்கள் மதத்தை அடிப்படையாகக் கொண்டு துருவமயப்படுத்தப்பட்டன.

தற்போதைய ஆட்சி

மோடி-பா.ஜ.க. கூட்டு, இந்து தேசியவாத கருத்தியலின் ஓர் அங்கம். பெரும்பாலான இந்தியர்கள் தங்களை இந்துக்கள் அல்லது இந்து தேசியவாதிகள் என இனம்காண்பதில்லை என்கின்ற உண்மையை மலினப்படுத்துகின்றார்கள். காந்தி ஓர் இந்துவாக இருந்த போதிலும் ஓர் இந்து தேசியவாதியாக இருந்ததில்லை. அப்துல் கலாம் ஒரு முஸ்லிம் கல்விமானாக, தீவிர முஸ்லிமாக இருந்தபோதும் முஸ்லிம் தேசியவாதியாக இருந்ததில்லை. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும்பாலும் எல்லா மதங்களைச் சார்ந்தவர்களும் இந்திய தேசியவாதத்துடனேயே தங்களை அடையாளப்படுத்திக் கொண்டார்களே தவிர மதத்தை அல்லது மதங்களைப் பயன்படுத்திய தேசிய வாதங்களோடு அல்ல, மோடியும் அவருடைய சகாக்களும் கூறுவததைப்போல் நிகழ்காலத்திலும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் இந்திய தேசியவாதத்தோடு தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்களே தவிர மதத்தேசியவாதத்தோடு அல்ல.

இந்து தேசியவாதம் பிரிவினையை மையமாகவும், பிரத்தியேகத்தன்மை (ஏனையவர்ளைத் தவிர்த்து ஒரு குழுவுக்கானது) ஒரு அடையாளத்தைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமானதுமாகும். இந்திய தேசியவாதமும் எல்லாரையும் உள்வாங்கியது, இவ்வுலக பிரச்சினைகளில் ஆழமாக வேரூன்றியுள்ளது, குறுகிய அடையாளத்தை மட்டும் கொண்டதல்ல. துரதிஷ்டவசமாக இந்து தேசியவாதிகள் அடையாளம் தொடர்பான பிரச்சினைகைள முன்னிறுத்தி, ஏழைகள், ஒடுக்கப்பட்டவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை வலுவற்றதாக்கி, மலினப்படுத்துகின்றார்கள். சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக உருவாக்கப்பட்ட இந்திய தேசியவாதம், இந்தியாவில் இந்து தேசியவாதத்தாலும், இலங்கையிலும், மியன்மாரிலும் பௌத்த தேசியவாதத்தாலும் சவாலுக்குட்படுத்தப்பட்டு, ஜனநாயக பொறிமுறையின் செயன்முறையை அச்சத்திற்குள்ளாக்குகின்றது. முஸ்லிம் தேசியவாதம் பாகிஸ்தானையும், ஏனைய நாடுகளையும் சிதைத்துள்ளது.

மோடி ஆட்சிக்கு வரும்போது பல வாக்குறுதிகளை முன்வைத்தார். உதாரணம்: ஊழலை அழித்து விடுவதாகவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதாகவும். ஆனால், இவை அனைத்தும் விழலுக்கிறைத்த நீராயின. விலையேற்றம் சாதாரணர்களின் வாழ்க்கையைச் சீரழித்தது. மோடியினுடைய பணமாற்றம் தங்களுடைய பணத்தை மாற்றுவதற்காக நீண்ட வரிசையில் நின்ற ஏறக்குறைய 100 பேரைப் பலியெடுத்தது. பின்னர் 99.7% பணம் வங்கிகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டது. பொருட்களுக்கும், சேவைகளுக்குமான வரி வணிகர்களினதும் மக்களினதும் அவல நிலையை இன்னும் அதிகரித்தது. அரசு சர்வதிகாரத்தை நோக்கி நகர்வதாக பெரும்பாலானவர்கள் உணரத் தலைப்பட்டனர். குறிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதிகாரம் (elected autocracy).[xviii] சுயாதீன அரச நிறுவனங்கள் என்று கருதப்படுகின்ற, தேர்தல் ஆணைக்குழு, காவல்துறை, இந்திய மத்திய உளவுத்துறை போன்றன பாரபட்சத்துடன் ஆட்சியிலுள்ளோர் பக்கம் சாயத் தலைப்பட்டன.

முஸ்லிம்களுக்கு, கிறிஸ்தவர்களுக்கு, தலித்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன.[xix] முஸ்லிம்கள் பசு – மாட்டிறைச்சி அடிப்படையில் இலக்கு வைக்கப்பட்டனர். 2014 இல் ஏறக்கறைய 100 பேர் சட்டவரையறைகளுக்கப்பால் கொல்லப்பட்டனர். இவர்களுள் 80வீதமானவர்கள் முஸ்லிம்கள், ஏனையவர்கள் தலித்துக்கள். மதங்களுக்கிடையிலான திருமணத்தை தடைசெய்வதற்காக ஏற்கனவே பல் சமய திருமணம் புரிந்த தம்பதிகள் தாக்குதலுக்குட்படுத்தப்பட்டனர். குறிப்பாக மணமகள் இந்துவாக இருக்கும் குடும்பங்களில், மதச் சுதந்திரம் என்ற பெயரில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. இதனால் பெரும்பாலும் இந்து சமயத்திலிருந்து மதம் மாறுதலைத் தடுப்பதற்காகவும், மீள்வருதல் எனும் அடிப்படையில் இந்து சமயத்திற்குள் கொண்டு வருவதற்குமான முயற்சியாக அமைந்தது. பெரும்பாலான செபக் கூட்டங்கள், மதமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, தாக்குதலுக்குள்ளாயின. கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை தொடரும் தோற்றப்படாக உருவாக்கப்பட்டது.

அசாமில் முன்னெடுக்கப்பட்ட பிரஜாவுரிமைகளுக்கான தேசியப் பதிவுத் திட்டம், ஐம்பது இலட்சம் பங்களாதேஷ் குடிமைகள் அசாமிற்குள் நுழைந்துவிட்டார்கள் என்ற எடுகோளிலேயே நடைமுறைப்படுத்தப்பட்டது. மக்கள் தங்கள் குடியுரிமை தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கு அழைக்கப்பட்டார்கள். இறுதியில் இருபது இலட்சம் பேர் ஆவணமின்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் பன்னிரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் இந்துக்கள் ஏனையோர் முஸ்லிம்கள். இந்திய குடியுரிமை அரசியலமைப்புச் சரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டதன்படி, அயல் நாடுகளில் துன்புறுத்தப்படுகின்ற சிறுபான்மையினத்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டலாம் எனவும், ஆனால்,  முஸ்லிம்களுக்கு வழங்கப்படமாட்டாது என மேற்படி சரத்து குறிப்பிடுகின்றது. இதற்குரிய பதிலிறுப்பு சாகின் பாக் இயக்கத்தினூடாக வழங்கப்பட்டது. ஒவ்வொரு நகரத்திலும் முஸ்லிம் பெண்கள் இச் சட்டத்திற்கெதிராக போராட்டத்தை அமைதி வழியில் முன்னெடுத்தனர்.[xx] இந்தப் போராட்டத்தைச் சிதைப்பதற்காக டெல்லி வன்முறை கட்டவிழ்க்கப்பட்டது. 50 பேர் இவ்வன்முறையில் பலியாகினர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். முஸ்லிம் மக்களுடைய சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.

இனவாத சக்திகள் பெரிய வணிக நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்கின்றன, மூன்று விவசாய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  இவை விவசாயிகளால் நிராகரிக்கப்பட்டன. ஏனெனில், இவை விவசாயிகளைப் பெரிய வணிக நிறுவனங்களில் தங்கியிருக்கும் தன்மையை ஏற்படுத்துவதோடு விவசாயிகளை தொடர்ந்தும் பாதிக்கின்றது. ஏனெனில், வணிக நிறுவனங்களின் அடுத்த இலக்காக விவசாயத்துறை அமைந்துள்ளது.

இது தொடர்பில் விவசாயிகள் பெருமெடுப்பிலான போராட்டங்களை ஒழுங்கு செய்துள்ளனர். ஆனால், அரசாங்கம் அதைத் தடுப்பதற்காகவும், விவசாயிகள்  டெல்லிக்கு வருவதை நிறுத்துவதற்காகவும் தடைகளை அமைத்து வருகின்றது.[xxi]

இந்து தேசியத்தின் நிகழ்ச்சிநிரல் பன்முகம் கொண்டது. ஒரு புறத்தில் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும், சிறுபான்மை மதத்தினரையும் விளிம்பு நோக்கி நகர்த்துகின்றது. மறுபுறுத்தில் தலித்துக்களின், பெண்களின் உறுதியான இருப்பை மறுக்கின்றது, நிராகரிக்கின்றது. இதனால் அவர்களுடைய தற்போதைய சமூக அடக்குமுறை போக்கைத் தக்கவைத்துக்கொள்ளுகின்றது. இதில் விதிமுறைகள் அல்லது நியமங்கள் செயற்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ஆதிவாசிகளுடைய, தலித்துக்களுடைய உரிமைக் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் நகர்ப்புற நக்சல்கள் என முத்திரையிடப்பட்டு சிறையிலடைக்கப்படுகின்றார்கள். அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளது. ஜீண் டிறைஸ் குறிப்பிடுவது போல் இந்திய தேசியவாதம், உயர் சாதிய ஆண்வர்க்கத்தினருடைய கட்டமைப்பு. இக்கட்டமைப்பு தலித்துக்களும், பெண்களும் முன்வைக்கின்ற சமத்துவ விழுமியங்களுக்கெதிரானது.[xxii] அம்பேத்கார் தனது நூலில் (திருத்திய பதிப்பில்) இஸ்லாத்தின் பெயரால் பாகிஸ்தான் பிளவுபடுவதை எதிர்த்தார். அவருடைய வாதமாக பாகிஸ்தான் இஸ்லாத்தினுடைய பெயரில் உருவாக்கப்படுமாக இருந்தால், இந்து ராஜ்ஜியம் உருவாவதை தடுக்க முடியாமலிருக்கும். இந்து ராஜ்ஜியம் உருவாக்கப்படுமாக இருந்தால் தலித்துக்களின் பேரழிவு தடுக்கப்படமுடியாதது.

முன்னோக்கிய பாதை:

ஜனநாயக விழுமியங்களை மீளப்பெறுதல் என்பது தற்போதைய  சூழலில் பாரிய பணியாகவுள்ளது. சிறுபான்மையினருக்கு எதிரான பரப்புரைகள் பல்வேறு ஊடகங்களுக்கூடாக பரப்பப்பட்டு வருகின்றது. அதுவே ஓரளவிற்கு சமூக சிந்தனையாக கட்டமைக்கப்பட்டு விட்டது. சிறுபான்மையினருக்கெதிரான வெறுப்பு சமூக கட்டமைப்பாக உருவாக்கப்பட்டுவிட்டது. இவ் வெறுப்பினூடாக வன்முறைக்கான களம் தயாரிக்கப்பட்டு செயன்முறைப்படுத்தப்படுகிறது. சிறுபான்மையினருக்கெதிரான வன்முறை சமூகங்களைத் துருவமயப்படுத்துவதோடு இனவாத சக்திகள் ஆட்சிக்கு வருவதற்கு சந்தர்ப்பமளிக்கின்றது. ஆட்சிப்பீடமேறும் இனவாத சக்திகள் ஆர்.எஸ்.எஸ்ஸை வலுவடையச் செய்வதோடு, இந்து தேசத்தை உருவாக்குவதற்கான நிகழ்ச்சி நிரலையும் ஒழுங்கிணைக்கின்றன.​

சிறுபான்மையினருக்கெதிராக கட்டமைக்கப்பட்ட தவறான கருத்துக்களைப் பல்வேறு தளங்களில் கட்டவிழ்ப்பது என்பது பாரிய பணியாகவுள்ளது. இது மதங்களுக்கிடையே அன்பையும் நட்புறவையும் வளர்ப்பதனூடாகத் தான் உருவாக்க முடியும். மனித உரிமையைப் பாதுகாக்கின்ற சமூக இயக்கங்கள் பாதுகாக்கப்படுவதோடு, சமூக பிரச்சினைகள் இந்திய அரசியலமைப்பு விழுமியங்களை பேணுவதனூடாகவும், சகோதரத்துவம், சமத்துவம், நீதி போன்றன சுதந்திரத்தை வலுப்படுத்த வேண்டும். பணிகள் ஏராளம்.

Hindu Nationalism; From Genesis to Present Rule என்ற தலைப்பில் ராம் புண்ணியாணி எழுதிய கட்டுரை. தமிழாக்கம்: எழில் ராஜன்


[i] https://www.thehindu.com/opinion/lead/Was-Indian-nationalism-inclusive/article16817231.ece

[ii] https://www.wikizero.com/en/United_Patriotic_Association

[iii] https://www.amazon.com/Hindutva-Hindu-Vinayak-Damodar-Savarkar-ebook/dp/B073KQ72L8

[iv] https://www.hindustantimes.com/india/hindu-mahasabha-rss-stayed-away-from-freedom-struggle-historian-mridula-mukherjee/story-sT04JennXYUIL0KnYtn0iM.html

[v] https://www.theguardian.com/world/2021/jan/17/mahatma-gandhis-killer-venerated-as-hindu-nationalism-resurges-in-india

[vi] https://www.jstor.org/stable/4408848?seq=1

[vii] http://mainstreamweekly.net/article9836.html

[viii] https://sevikasamiti.org/About-RSS

[ix] https://frontline.thehindu.com/the-nation/article30160890.ece

[x] https://www.nationalheraldindia.com/politics/what-did-sardar-patel-actually-think-of-rss

[xi] https://journals.sagepub.com/doi/abs/10.1177/2321023018762674?journalCode=inpa

[xii] https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ten-most-aggressive-fringe-elements-of-the-parivar/articleshow/47423053.cms?from=mdr

[xiii] Teesta Setalvad ‘Who casts the First Stone’ Communalism Combat, March 1998,

[xiv] https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/bjp-gains-in-polls-after-every-riot-says-yale-study/articleshow/45378840.cms

[xv] https://clarionindia.net/conversions-and-anti-christian-violence-in-india-prof-ram-puniyani/

[xvi] https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/malegaon-blast-wasnt-first-right-wing-terror-case-for-hemant-karkare/articleshow/68961811.cms?from=mdr

[xvii] https://www.indiatoday.in/india/story/rss-has-benefited-greatly-under-modi-government-1187765-2018-03-12

[xviii] https://www.thehindu.com/news/national/india-is-moving-towards-a-form-of-elected-autocracy-says-ap-shah/article32369612.ece

[xix] https://www.indiatoday.in/india/story/muslims-dalits-religious-attacks-grew-in-india-narendra-modi-us-report-959959-2017-02-10

[xx] https://sabrangindia.in/article/shaheen-bagh-movement-deepening-democracy-uniting-india

[xxi] https://www.tribuneindia.com/news/delhi/delhi-police-cement-nails-barricade-border-protest-sites-with-barbed-wires-206911

[xxii] https://www.theindiaforum.in/article/revolt-upper-castes