இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களை, அநீதிகளை, பாரபட்சங்களை எதிர்நோக்கிவருகிறார்கள். அவர்கள் இலங்கை நாட்டின் பிரஜைகளாக இருக்கின்ற போதிலும் அவர்களுடைய உரிமைகள் காலனித்துவ ஆட்சியிலிருந்தே மறுக்கப்பட்டு வருகிறது.

மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவர்களை பொலிஸ் நிலையங்களில், வைத்தியசாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள், தொழில் தருனர்கள், அரசாங்க அதிகாரிகள், பொது இடங்களில் உள்ளவர்கள் இழிவுபடுத்தி வருகிறார்கள்.

அவர்கள் தாங்கள் விரும்பும் பெயர் மற்றும் பால்நிலை என்பவற்றைப் பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் ஒரு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்வதும், ஏனைய உத்தியோகபூர்வமான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதும் பெருமளவுக்கு சிரமமான ஒரு காரியமாக இருந்து வருகின்றது.

70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு தரப்பினரை நேர்க்காணல் கண்டுவரு​கிறது. இன்றைய நேர்க்காணலில் மாற்றுப்பாலினத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் தான் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகள் குறித்து விக்கி சாஜஹான் கூறுகிறார். அவருடைய முழுமையான நேரக்காணலை இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.


ஆசிரியர் குறிப்பு: 70ஆவது சுதந்திர தினம் தொடர்பாக வெளியான முதலாவது, இரண்டாவது நேர்க்காணல்