இலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை  சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்கள் எதிர்நோக்கிய, எதிர்நோக்கிவரும் துயரங்கள் எண்ணிலடங்காதவை.

வழக்குகள் இன்றி பல வருடங்களாக சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் நல்லாட்சி அரசிலும் விடுதலை செய்யப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக இல்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட மனித உரிமைகள் அமைப்புகள் வலியுறுத்திவருகின்ற போதிலும் நல்லாட்சி அரசாங்கம் அதனைப் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை

70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு துறைசார்ந்தவர்களை நேர்க்காணல் கண்டுவருகிறது. அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் ஏற்பாட்டாளர் வண. எம். சத்திவேல் உடனான நேர்க்காணலே இன்று வெளியாகிறது. முழுமையான நேர்க்காணலை இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் மூலமாகவும் பார்க்கலாம்.


ஆசிரியர் குறிப்பு: 70ஆவது சுதந்திர தினம் தொடர்பாக வெளியான முதலாவது நேர்க்காணல்