“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், “தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபா கொடுக்க முடியாது, தோட்டங்கள் நஷ்டமடைகின்றன. 730 ரூபா கொடுத்தால் போதும்” என்றார். இதேபோல 720 ரூபா கொடுத்தால் போதும் என தொழில் அமைச்சரும் கூறினார். 1000 சம்பள உயர்வு கோரி மக்கள் வீதிகளில் இறங்கி பல நாட்களாகப் போராடினார்கள். கடைசியில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டோம் என்று கூறுகிறார் ஐக்கிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ. முத்துலிங்கம்.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தோட்டத் தொழிற்சங்க கூட்டில் (Joint Plantations Trade Union Centre) ஐக்கிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கமும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆ. முத்துலிங்கத்துடனான முழுமையான நேர்க்காணலை கீழே காணலாம்.