பட மூலம், Selvaraja Rajasegar
இலங்கையில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவரும் நிலையில் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுவரும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்நோக்கிவரும் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து ‘மாற்றம்’ பதிவுகளை மேற்கொண்டு வருகிறது.
பதிவுகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
StorySphere என்ற புதிய சமூக வலைதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கும் அடுத்த பதிவு இங்கு தரப்பட்டிருக்கிறது. தோட்டத் தொழிலாளர்களைப் புறக்கணித்து 150 வருட கொண்டாட்டங்கள் இடம்பெற்றுவருவது குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அடங்கிய 360 பாகை வடிவிலான புகைப்படத்தை இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.
குறிப்பு: மலையக மக்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 வருடங்களாகின்றமைக்கு சான்றாதாரம் இந்தப் படமாகும். நுவரெலியா மாவட்டத்தில் 1800 ஆண்டு காலப்பகுதியில், 1900ஆம் ஆண்டு ஆரம்பகாலப்பகுதியில் உயிரிழந்த மலையக மக்களிடன் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் பகுதி இது.
இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவருகிறது. இதனை முன்னிட்டு பல நிகழ்வுகள் இலங்கை தேயிலைச் சபையினாலும், அமைச்சினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சர்வதேச தேயிலை சம்மேளனமும் இடம்பெற்றுவருகிறது. இந்த நிகழ்வுகளுக்கு இலங்கையில் 150 வருட தேயிலை உற்பத்திக்காக பரம்பரை பரம்பரையாக உழைத்துவரும் ஒரு மலையகத் தோட்டத் தொழிலாளியேனும் அழைக்கப்படவில்லை என்று அறியமுடிகிறது. தேநீரை சுவைப்பவர்கள், தேயிலையை விற்பனை செய்பவர்கள் கொண்டாட்டங்களை நடத்த தேயிலையை உற்பத்தி செய்யும் மலையக தோட்டத் தொழிலாளிகள் நாட்டின் சக பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகளைக் கூட பெறமுடியாமல் தேயிலை மரத்துக்கு உரமாகிக்கொண்டிருக்கிறார்கள்.