ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷன் இனந்தெரியாதோரால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்களாகின்றன.

ஊடகத்துறையில் புகுந்து பெயர் பெற வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்தவர் நிலக்‌ஷன். அதற்குள் அவருடைய உயிரைப் பறித்தனர் அதிகார பலம் கொண்டவர்கள்.

யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி வரை ஊரடங்கு அமுலில் இருந்தவேளை – இரவு முழுவதும் யாழ். கொக்குவில் வீதியில் படையினரின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்ட வேளை – ஆங்காங்கே இராணுவத்தினரின் சோதனைச்சாவடிகளும் இருந்த நிலையில் – யாழ். நகருக்கு மூன்று மைல் தொலைவில் கொக்குவிலில் உள்ள நிலக்‌ஷனின் வீட்டிற்கு அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதோர் அவரைச் சரமாரியாகச் சுட்டுவிட்டு தப்பிச்சென்றிருக்கிறார்கள்.

கொல்லப்படும்போது சகாதேவன் நிலக்‌ஷனுக்கு 22 வயதிருக்கும்.

இராணுவத்தினரது நடமாட்டம் மாத்திரமே காணப்படும் ஊரடங்கு வேளையில் இனந்தெரியாதோர் மோட்டார் சைக்கிளில் வந்தது எப்படி?

ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் தங்கள் எதிர்பார்ப்புகளை நல்லாட்சி அரசாங்கம் பூர்த்திசெய்யும் என்று தமிழர்கள் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அதிலும் குறிப்பாக கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, தாக்குதலுக்குள்ளான தமிழ் ஊடகவியலாளர்களின், ஊடகப் பணியாளர்களின் உறவுகள் வெகுவாக நம்பியிருந்தார்கள்.

லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட ஆகியோரின் வழக்கு விசாரணை ஓரளவாவது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், கொல்லப்பட்ட, காணாமல்போன தமிழ் ஊடகவியலாளர்கள் இன்னும் புலிகளின் பட்டியலிலேதான் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான எந்தவித அறிகுறியும் தென்படுவதாக இல்லை.

###

தொடர்புபட்ட கட்டுரைகள்,

“அழுகையை சேமிக்கத் தொடங்கும் அம்மா…!”

“காணாமல்போய் 9 வருடங்கள்: ஊடகவியலாளர் சுப்ரமணியம் ராமசந்திரன் எங்கே?

கொல்லப்படாத நிமலராஜனும் பிபிசியும் – வாக்குமூலம்

“7 வருடங்களுக்கு முன் கொடூரமான அந்தப் பொழுது…”