படம் | Getty Images

திருகோணமலை, மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு கடந்த 4ஆம் திகதியோடு 10 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், இதுவரை குற்றவாளிகள் இணம்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.

04, ஓகஸ்ட் 2006, இலங்கை, மூதூரில் ‘அக்‌ஷன் போர்ம்’ (Action contre la Faim [ACF]) அரச சார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 ஊழியர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களுள் 16 தமிழர்களும் ஒரு முஸ்லிமும் அடங்குவர்.

இலங்கை பாதுகாப்புப் படைப் பிரிவைச் சேர்ந்தவர்களே தொண்டு ஊழியர்களின் கொலைக்குப் பொறுப்பானவர்கள் என்று ‘அக்‌ஷன் போர்ம்’ மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. அத்தோடு, இலங்கை உள்நாட்டு ஆயுத மோதலின் போது இழைக்கப்பட்ட மிகமோசமான போர்க்குற்றங்களில் இதுவும் ஒன்று என்று ‘அக்‌ஷன் போர்ம்’ நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

மூதூர் படுகொலை தொடர்பாக பல உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைகள் செயற்படுத்தப்பட்டன. இருப்பினும், சுயாதீனமாக இயங்காத காரணத்தால் நீதி மறுக்கப்பட்டது. சுயாதீனமான சர்வதேச விசாரணை இடம்பெற்றால் மாத்திரமே நீதி நிலைநாட்டப்படும் என்று ‘அக்‌ஷன் போரம்’ தொண்டு நிறுவனம் தெரிவிக்கின்ற போதும், நீதிவிசாரணையில் சர்வதேசத்தின் பங்களிப்பு இருக்காது என்று ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தொடர்ந்து கூறிவருகிறார்.

‘அக்‌ஷன்’ போர்ம் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டு 10 வருட நிறைவையொட்டி Adobe Spark வலைதள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஒரு பதிவை கீழே பார்க்கலாம்.