படம் | DALOCOLLIS
“இன்று தெற்கில் உள்ள எந்தவொரு தொழிற்சங்க அமைப்பும் மலையக மக்களுக்காகப் போராடுவது கிடையாது. அதேபோன்று தெற்கில் ஏதாவது போராட்டமொன்று நடந்தால் மலையகத்தில் உள்ள தொழிலாளர்கள் ஆதரவு தெரிவிப்பதும் இல்லை. இது தொழிலாளர் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டிருக்கும் பிளவைக் காட்டுகிறது. ஆகவே, இந்தப் பிளவுதான் மலையக மக்களின் சம்பளப் போராட்டம் வெற்றியை நோக்கிச் செல்வதற்குத் தடையாக இருக்கிறது” என்று கூறுகிறார் வணக்கத்துக்குரிய சக்திவேல்.
இன்று தொழிலாளர்கள் இனம், மதம், நிலம் சார்ந்து பிரிந்து காணப்படுகிறார்கள் என்று கூறும் அவர், இந்தப் பிரிவினையைக் கடந்து போராடக்கூடிய வலிமை தொழிலாளர்களிடம் இருக்கவேண்டும்; தொழிற்சங்கங்களிடம் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறுகிறார்.
“தற்போது மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்காலிகத் தீர்வாக ரூபா 2,500 வழங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள். இந்த மக்கள் 25 நாட்கள் தொழிலுக்குச் சென்றால் மட்டுமே இரண்டாயிரத்து ஐநூறு ரூபா பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், தொழிலாளர்களுக்கு மாதமொன்றுக்கு 25 நாட்கள் தொழில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை. கம்பனிகள் கொடுக்கின்ற நிலையிலும் இல்லை. அதேபோன்று, சுகயீனம் மற்றும் சொந்தத் தேவைகள் காரணமாக 25 நாட்களும் வேலைக்குப் போகமுடியாத சூழ்நிலையும் காணப்படுகிறது. 2,500 ரூபா கொடுப்பனவு என்பது ஒரு கண்துடைப்பு நாடகம். இப்போதிருக்கும் அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை ஏமாற்றுகின்றன.”
‘மாற்றம்’ தளத்துக்கு வண. சத்திவேல் அவர்கள் வழங்கிய நேர்க்காணலை முழுமையாக கீழே பார்வையிடலாம்.