சிரேஷ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொல்லப்பட்டு இன்றோடு 11 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையம் அருகில் வைத்து கடத்திச் செல்லப்பட்ட தராக்கி எனப்படும் சிவராம், சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மறுநாள் இலங்கை நாடாளுமன்றம் அருகில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் இந்தக் கடத்தல் மற்றும் படுகொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தும் எதுவித விசாரணைகளையும் கடந்த மஹிந்த அரசாங்கம் மேற்கொண்டிருக்கவில்லை.

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாகவும், மனித உரிமைகளை ஸ்திரப்படுத்துவதாகவும் கூறி ஆட்சிக்கு வந்த மைத்திரி – ரணில் ஆட்சியும் மஹிந்தவின் பாதையில் பயணிப்பதாக ஊடகவியலாளர்கள் குறை கூறுகின்றனர்.

கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் குறித்து நீதி விசாரணை மேற்கொள்வதாக ஊடக அமைப்புகளிடம் ஒப்புக்கொண்ட நல்லாட்சி அரசு தற்போது ஊடகவியலாளர்களுக்கு சலுகைகள், நிவாரணங்களை வழங்கி குற்றவாளிகளை சுதந்திரமாக நடமாட அனுமதித்துள்ளது.

ஆகவே, “சலுகைகள் வேண்டாம்; நீதி வேண்டும்!” என்ற தலைப்பில் படுகொலை செய்யப்பட்ட தர்மரத்தினம் சிவராம் உட்பட அனைத்து ஊடவியலாளர்களுக்கும், கடத்தப்பட்ட, காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கும் நீதிகோரி ஊடக அமைப்புக்களால் இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. அதன்போது எடுக்கப்பட்ட படங்கள்/ வீடியோ பதிவை கீழே காணலாம்.

வீடியோ

படங்கள்

IMAG3403