மேல் மாகாணத்தில் சமூக ஊடகத் தளங்கள் மற்றும் பிரதான ஊடகங்களின் பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கை நேற்று மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தால் வெளியிடப்பட்டது.

இந்த ஆய்வில் 55.8%மான ஆண்களும் 44.2%மான பெண்களுமாக 1,743 பேரின் கருத்துகள் உள்வாங்கப்பட்டுள்ளன.

ஆய்வில் உள்ளடக்கப்பட்டுள்ளவை,

unnamed

தற்போதைய செய்திகள் மற்றும் நிகழ்கால விவகாரங்களை தெரிந்து வைத்திருப்பதை அவர்கள் விரும்புகிறார்களா எனக் கேட்டபோது 1.7% பதிலளிப்பவர்கள் மட்டும் ‘ஒரு போதும் இல்லை” எனக் கூறினர். 55.1% பதிலளிப்பவர்கள் அதனை அதிகளவு விரும்புவதாகக் குறிப்பிட்டனர். அத்துடன், 42.3% ஓரளவு விரும்புவதாகக் கூறினர்.

தனியார் தொலைக்காட்சிகளே பதிலளிப்பவர்கள் செய்திகளைப் பெறும் மிகவும் பிரபல்யமான தகவல் மூலம் ஆகும். அதனைத் தொடர்ந்து பேஸ்புக் (Facebook) மற்றும் இணையத்தளம்/ வலையமைப்பு அமைந்துள்ளன. வயது அடிப்படையில் ஆய்வு முடிவுகளை வகைப்படுத்தும்போது பதிலளிப்பவர்களில் 18-24 வயதினரிடையே பேஸ்புக் (Facebook) முக்கியமான செய்திகளைப் பெறும் மூலமாகவும், அதேசமயம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் இணையத்தளம்/ வலையமைப்பு என்பன காணப்படுகின்றன.

மின்னஞ்சல் வழியாக ஒரு சுவாரசியமான முக்கியமான செய்திக் கட்டுரையைப் பெறுவது தொடர்பில் 55.9% பதிலளிப்பவர்கள் ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றார்கள். 23.6% அதனை மின்னஞ்சல் வழியாக அனுப்புவதன் மூலம் பகிர்ந்துகொள்கிறார்கள், 18.4% பதிலளிப்பவர்கள் சமூக வலைதளங்கள் ஊடாக பகிர்ந்துகொள்தோடு, 13.9% இரண்டினையும் செய்கிறார்கள் எனவும் குறிப்பிட்டனர்.

MEDIA SURVEY1

கைத்தொலைபேசிக்கு சுவாரசியமான ஒரு குறுந்தகவலைப் பெற்றால் (SMS) நீங்கள் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என்று அவர்களிடம் கேட்டபோது, 24.2% பதிலளிப்பவர்கள் அதனை அநேகமாக மற்றவர்களுக்கு குறுந்தகவலாக SMS அல்லது உடனடிச் செய்தி மென்பொருள் – Instant Massage App பிரயோகங்கள் வழியாக அவர்களது கைத்தொலைபேசியின் மூலம் அனுப்புவதாகக் கூறுகின்றனர். அதேசமயம், 16.6% பதிலளிப்பவர்கள் சமூக ஊடகத் தளங்களில் பகிர்வதாகவும், 16.2% இரண்டினையும் செய்வதாகவும், இதன்போது 22% தாம் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.

MEDIA SURVEY2

கடந்த வருடம் இக்கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட ஏறத்தாழ 50% பதிலளிப்பவர்கள் தாங்கள் ஒன்லைன் மூலமாக அல்லது பிரதான ஊடகங்கள் வாயிலாக கற்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசியல் மற்றும் சமூக விடயங்கள் தொடர்பில் பெருமளவு கற்றுக்கொள்ள/ தெரிந்துகொள்ள தீர்மானித்துள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஒன்லைன் வாசிக்கும் அல்லது பிரதான ஊடகங்கள் வாயிலாக கற்ற விடயங்களின் அடிப்படையில் அரசியல் அல்லது சமூக விடயங்கள் தொடர்பிலானதொரு நடவடிக்கை எடுக்கும்போது, 22.9% பதிலளிப்பவர்கள் அவர்கள் நடவடிக்கை எடுத்ததற்கான காரணம் அவர்கள் ஒன்லைனில் வாசித்த குறித்த விடயம்தான் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதேசமயம் 20.8% பதிலளிப்பவர்கள் பிரதான ஊடகங்கள் மூலமாக கற்ற விடயங்களின் அடிப்படையிலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

MEDIA SURVEY4

நடவடிக்கை எடுத்ததாக குறிப்பிட்ட பதிலளித்தவர்களிடம் அவர்கள் எத்தகைய நடவடிக்கை எடுத்தார்கள் எனக் கேட்கப்பட்டது. நடவடிக்கை எடுத்தவர்களில் ஒன்லைன் மூலமாக (61.5% பதிலளிப்பவர்கள்) அவர்கள் கற்ற விடயங்களின் அடிப்படையில் அவர்கள் குடும்பத்திலும் நண்பர்களுக்கிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிந்தது எனவும், ஒன்லைன் ஊடாக வாயிலாக (16.5%) கலந்துரையாடலில் ஈடுபடுகிறார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

MEDIA SURVEY5

60.4% பதிலளிப்பவர்கள் தரவுப் பயன்பாட்டிற்கு அவர்களால் அதிகம் செலவு செய்ய முடியுமாயின் அவர்களது ஒன்லைன் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களது இணையத்தளப் பாவனையை அதிகரிக்க அவர்களது சேவை வழங்குனர்கள் என்ன செய்யலாம் எனக் கேட்டபோது, 40.2% பதிலளிப்பவர்கள் இணைப்புக்கான வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், அதேசமயம், 37.5% பதிலளிப்பவர்கள் அதிகரிக்கப்பட்ட தரவுப் பொதி வேண்டும் என்றும் கேட்டனர். 35.5% பதிலளிப்பவர்கள் மாதாந்த கட்டணத்திற்கான செலவு குறைக்கப்படுமானால் அவர்களது இணையத்தளப் பயன்பாட்டினை அதிகரிப்பர் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

பதிலளிப்பவர்களது வயது 35 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மாதாந்த கட்டணத்திற்கான செலவு குறைக்கப்படுமானால் அவர்களது இணையத்தள பயன்பாட்டில் ஓர் அதிகரிப்பைக் காணலாம் எனவும், அதேநேரம் 18-24 வயதுக் குழு முக்கியமாக அதிகரிக்கப்பட்ட தரவுப்பொதியும் (42.7% பதிலளிப்பவர்கள்) மற்றும் 25-34 வயதுக் குழுவிற்கு நல்லதொரு இணைப்பு வேகம் (41.6%) தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்களிடம் இணைய சேவை வழங்குனர் அவர்களது இணையத்தின் வேகத்தை ஒரு கூடுதலான கட்டணத்தில் கணிசமானளவிற்கு அதிகரித்துத் தருவதற்கு முடியுமாயின், 30.8% பதிலளிப்பவர்கள் அவர்கள் மேம்படுத்துதலைக் கருத்தில் கொள்வார்கள் எனவும், அதேநேரம் 42.5% பதிலளிப்பவர்கள் மேம்படுத்துதலைச் சிலநேரம் கருத்தில் கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்களம் அல்லது தமிழில் கூடுதலான உள்ளடக்கங்கள் அல்லது தளங்கள் காணப்படுமாயின் நீங்கள் உங்கள் இணையப் பாவனையை அதிகரிப்பீர்களா எனக் கேட்டபோது, 57.1% பதிலளிப்பவர்கள் ஏற்றுக்கொண்டதுடன், அதேநேரம் 21.1% பதிலளிப்பவர்கள் அதிகரிக்காது எனக் குறிப்பிட்டுள்ளனர்.

media survey9

63.1% பதிலளிப்பவர்கள் அவர்களது நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒன்றுக்கு மேற்பட்ட செய்தி ஊடகங்கள் காணப்படுகின்றன, 25.3% பதிலளிப்பவர்கள் அனைத்து செய்தி ஊடகங்களும் ஒரே மாதிரியாகக் கருதுவதாகத் கூறினர். பெரும்பாலும் 10% அவர்களுக்கு நம்பத்தகுந்ததாக எந்தவொரு செய்தி ஊடகமும் இல்லை எனத் தெரிவித்தனர்.

பதிலளிப்பவர்களது நம்பிக்கையில் ஏனையவர்கள் எந்தளவுக்கு தாக்கம் செலுத்துகிறார்கள் என்பதைப் பார்த்தபோது, 37.2% பதிலளிப்பவர்கள் ஊடக வலைப் பக்கத்திலிருந்து நேரடியாக முதலில் அறிந்துகொள்ளும் செய்திக் கட்டுரைகளை விட, சமூக ஊடகங்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக நண்பர்கள் முதலில் பகிர்ந்து கொள்ளும் செய்திக் கட்டுரைகளை நம்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஆர்வத்தைத் தூண்டும் விதமாக 51.1% பதிலளிப்பவர்கள் தாம் நம்பாத ஒரு செய்திக் கட்டுரையை சமூக வலைப்பக்கத்தில் ஒரு நண்பர் பகிர்ந்து கொள்வதைக் காணும்போது தமது (பதிலளிப்பவரது) முதல் அபிப்பிராயத்தை தாம் சிலவேளை மீள் பரிசீலனை செய்வார்கள் எனக் குறிப்பிட்டார்கள்.

ஒன்லைன் அல்லது அச்சு ஊடகத்தில் நீங்கள் வாசிக்கும் முக்கியமான செய்தியின்/ கட்டுரையின் ஆசிரியரை அல்லது பிரசுரிப்பவரை அறிந்திருப்பது முக்கியமானது என 63.2% பதிலளிப்பவர்கள் தெரிவித்தார்கள். பெரும்பாலும் 30% பதிலளிப்பவர்கள் அது முக்கியத்துவம் அற்றது எனக் குறிப்பிட்டார்கள்.

தேர்தல் காலங்களின் போது உங்களின் பிரதான மற்றும் மிகவும் நம்பகமான தகவல் மூலம் எது எனப் பதிலளிப்பவர்களிடம் கேட்டபோது, குறிப்பிட்டுக் கூறும் விதத்தில் இணையத்தளமே முக்கியமானதும் மிகவும் நம்பகமானதுமான தகவல் மூலமாக 18.3% பதிலளிப்பவர்கள் குறிப்பிட்டார்கள். அதேநேரம் 16% பதிலளிப்பவர்கள் பேஸ்புக் என்பதனைக் குறிப்பிட்டுக் கூறினர். 40.3% பதிலளிப்பவர்களுக்கு அவர்களது பிரதான மற்றும் நம்பகமான மூலம் தனியார் ஊடகங்களின் தொலைக்காட்சி அலைவரிசைகளாக இருந்தன.

42.2% பதிலளிப்பவர்கள் அரசாங்க அமைச்சர்கள், மக்களுடன் இடைத் தொடர்பாடுவதற்கு சமூக ஊடகத்தை உபயோகிப்பது அவசியம் என நம்புகின்றனர். அதேநேரம், 26.2% பதிலளிப்பவர்கள் அது ஓரளவு அவசியம் என நம்புகின்றனர்.