படம் | Michael Hughes, Screen Shot

உயிரொன்று
சுமந்தாள் தன்
உயிராக…
 
உருப்பெரும் முன்னே
உயிரிழந்து போனது…
 
கருவறைக்குள் ஏனோ 
கரைந்து போனது
கருச்சிதைவு என்ற
பெயரால்…
 
சந்ததிகளின் சரிவுகள்
ஏற்றம் காண்கையில்
இதை
கண்டுகொள்ளாது
நிற்கிறது இவர்களின்
உரிமை குரல்கள்…
 
வேடிக்கை பார்த்தால்
வேர்கள் காணாமல்
போய்விடும்…
 
தக்க தருணம்
பேசுவோம் என்று
சந்தர்ப்பம் பார்த்தால்
சந்ததிகள் இல்லாமல்
போகும்…
 
முடி வெடு சீக்கிரம்
முன்னெச்சரிக்கையோடு.
 
பலாந்தோட்டை ஜெயந்தி