இலங்கையின் 43ஆவது பிரதம நீதியரசரான ஷிராணி பண்டாரநாயக்க கடந்த அரசினால் நீக்கப்பட்ட முறைமை சட்டவிரோதமானது என்றும் – அதன் பின் 44ஆவது பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்ட மொஹான் பீரிஸின் நியமனமும் சட்டவிரோதமானது என்றும் – சுயாதீனமான நீதி கட்டமைப்பை ஏற்படுத்த சட்டவிரோதமான முறையில் நியமனம் பெற்ற பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மொஹான் பீரிஸுக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளனர் என்றும் – சட்டத்தரணிகள் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ஜே.சி. வெலியமுன இன்று நீதிமன்ற வளாகம் முன் தெரிவித்தார்.
இன்று காலை பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவியிலிருந்து விலகுமாறு கோரி உயர் நீதிமன்ற வளாகத்தின் முன் சிவில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சட்டத்தரணிகள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே சிரேஷ்ட சட்டத்தரணி வெலியமுன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜே.சி. வெலியமுன தெரிவித்த கருத்துகள் கீழே வீடியோவாக தரப்பட்டுள்ளது.
பிரதம நீதியரசராக இருந்த மொஹான் பீரிஸை வௌிறேுமாறு கோரி உயர் நீதிமன்ற வளாகத்தின் முன் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது எடுக்கப்பட்ட படங்கள்.