2009ஆம் ஆண்டு அப்போது நீதி அமைச்சராக இருந்த மிலிந்த மொரகொடவினால் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம் தொடர்பிலான சீர்திருத்தங்களை ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு 16 உறுப்பினர்களைக் கொண்டது. அதில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத சட்ட வல்லுனர்களும் அடங்குவர். அதற்குத் தலைவர் நீதியரசர் சலீம் மர்ஷூப் ஆவார்.

இவர்கள் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்தில் செய்யவேண்டிய திருத்தங்கள் பற்றிய அறிக்கையை 9 வருட ஆராய்ச்சிக்குப் பின்னர் 2018ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் திகதி நீதி அமைச்சர் தலதா அத்துகோரலவிடம் சமர்ப்பித்தார்கள். இந்தக் குழுவில் உள்ள அனைவரும் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரவேண்டும் என்று ஏகமனதாக ஏற்றுக்கொண்ட விடயங்கள் அனேகம் உள்ளன. அதேநேரம் குழுவில் உள்ள சிலர் சில விடயங்களை திருத்துவது ஷரியாவுக்கு முரணானது என்று கூறி உடன்படவில்லை. அவ்விடயங்களைத் தனியாகக் கூறி அந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவதில் உடன்பாடு உள்ளவர்கள் இது இஸ்லாமிய ஷரியாவுக்கு உட்பட்டுத்தான் திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறோம், அதற்கான விரிவான விளக்கங்கள் அறிக்கையில் உள்ளதென்றும் கூறுகிறார்கள்.

இந்தக் குழுவில் பணிபுரிந்த சட்டத்தரணி சபானா குல் பேகம் இது தொடர்பில் தற்போது நிலவிவரும் முன்னுக்குப் பின் முரணான கருத்துகள் பற்றி விரிவான விளக்கமொன்றை வழங்கிய வீடியோ பதிவை இங்கே நீங்கள் காணலாம்.

ஆசிரியர் குறிப்பு: தொடர்புபட்ட கட்டுரைகள், “மர்சூப் அறிக்கை ஷரியா சட்டத்திற்கு முரணானதா?“, “முஸ்லிம் தனியாள் சட்டம்: இரு திருத்த நகல்கள்