பட மூலம், CNET
ஊடக அறிவு (உண்மையான செய்திகளை, படங்களை, வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான கல்வியை) தொடர்பாக ‘மாற்றம்’ வெளியிடவுள்ள இன்போகிராபிக்ஸ் வரிசையில் இது முதலாவதாகும். கடந்த மார்ச் மாதம் கண்டி, திகனை பகுதிகளில் முஸ்லிம் மக்களின் சொத்துக்களையும் வீடுகளையும் வழிபாட்டுத்தலங்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் கலவரங்களை அடுத்தே ஊடகக் கல்வியறிவு என்ற விடயம் கவனத்திற்கு வந்தது. சிங்கள பௌத்த இனவாதிகளின் வன்முறை நடவடிக்கைகளுக்கு ஆதரவாக, அதனைத் தூண்டும் வகையிலான பொட்ஸ்கள் டுவிட்டரில் பிழையான தகவல்களை பரப்ப ஆரம்பித்தன. அதேபோல போலியான கணக்குகள், பக்கங்களைக் கொண்டு பேஸ்புக் ஊடாக இனவாதத்தைப் பரப்பும் நடவடிக்கைகளிலும் இனவாதிகள் ஈடுபட்டிருந்தனர். இதனைக் கருத்திற்கொண்டு ஊடங்களில் வெளியாகும் செய்திகளில் எது உண்மையானது, எது போலியாக திரிவுபடுத்தப்பட்டது என்பதைக் கண்டுகொள்வதற்கான விளக்கத்தை – ஊடக அறிவை தொடர்ந்து வெளியிடப்படவுள்ள இன்போகிராபிக்ஸ் ஊடாக மாற்றம் வாசகர்களுக்குத் தரவுள்ளது.
படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.
எமது சகோதர தளமான ‘கிரவுண்ட்விவ்ஸ்’ ஊடக அறிவு தொடர்பாக ஆங்கிலத்தில் இன்போகிராபிக்ஸ் வெளியிட்டுவருகிறது. “How to spot False News?” என்ற இன்போகிராபிக்ஸை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.