பட மூலம், CNN

கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உட்பட பல அமைப்புக்களால் பேஸ்புக் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை நாம் இவ்வாறு  வாசகர்களுக்கு வழங்குவதுடன், இந்தக் கடிதத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அவர்களது மறுமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பை வெகு சீக்கிரம் இங்கு பதிவிடுகின்றோம்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையமானது (CPA) இந்த திறந்த மடலை முன்வைப்பது  பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மார்க் சக்கர்பர்க் ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி காங்கிரஸ் முன்னிலையில் சாட்சியம் வழங்கத் தயாராக இருக்கின்ற சூழ்நிலையிலேயே. தமது தளத்தினூடாக பால்நிலை சமத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் மற்றும் குரோத  எண்ணங்கள் உள்ளடக்கியதான விடயங்களை மேம்படுத்துவதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் சிவில் சமூகத்தின் ஏனைய உறுப்பினர்களுடன் ஒன்றிணைந்து இந்தக் கடிதம் மூலமாக பேஸ்புக் நிறுவனத்திடம் வேண்டி நிற்கிறது.

திகனை, அம்பாறை மற்றும் ஏனைய பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து மிகவும் அண்மித்த  காலப் பகுதியில் இராணுவ கோப்ரல்கள் இருவர் உட்பட சந்தேக நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் வன்முறை செய்திகளை பரிமாறுகையில் பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்களில் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் போதுமானளவு விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை. பேஸ்புக் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை அரசாங்கத்தினை சந்தித்து அவர்களுடன் இணைந்து குரோத கருத்துக்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. எவ்வாறெனினும், கலந்துரையாடலின் உள்ளடக்கம் வெளியிடப்படவில்லை. பேஸ்புக் உள்ளடக்கம் அத் தளத்தின் குடியுரிமைப் பண்புகளை (Community Standards) மீறிய சந்தர்ப்பங்கள் தொடர்பாக சிவில் சமூகப் பிரதிநிதிகள் பல வருடங்களாக சுட்டிக் காட்டியுள்ள போதிலும் பேஸ்புக் நிறுவனமானது அவர்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கு எந்தளவு தயாராக இருக்கின்றது என்பது தொடர்பில் தெளிவில்லாமல் உள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகளைத் தூண்டிவிடுகின்றதெனவும் இலங்கையில் கிடைத்த முன் அனுபவங்களுக்கமையவும் அதற்கினையான கவலையளிக்கும் வகையில் மியன்மாரில் இடம்பெற்ற சம்பவங்களின் போதும் சமூக ஊடகங்கள் குரோத கருத்துக்களை பரப்புவதாக கண்டறியப்பட்டது மிக நீண்ட நாட்களுக்கு முன்னரேயாகும். முறைப்பாடு செய்யப்பட்ட சில கருத்துக்கள் குரோத கருத்துக்களைக் கொண்டதாகவும் இன்னும் சில கருத்துக்கள் பெண்களுக்கு எதிரானதாகவும் வன்முறைகளைத் தூண்டிவிட்டன. சில கருத்துக்கள LGBTIQ சமூகத்திற்கு எதிரான துன்புறுத்தல்களாக இருந்தது. ஆயினும், இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்ட பிறகும் கூட இவற்றுல் பல ஒன்லைன் வழியாக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆர்வமிக்க வகையில் இந்த விடயத்தினைக் கையாளுகின்ற தரப்பினரால் தொடர்ச்சியாக முறைப்பாடு செய்தபோதிலும் ஒன்லைன் வழியூடாக இந்தத் தலைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு பேஸ்புக் பக்கங்களில் தொடர்ச்சியாக அவதூறு ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை பகிர்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கும் பிரதானமான காரணியாக அமைவது பாதிப்பின்றிய வகையில் சிங்கள மொழியை நடுநிலைமைபடுத்தாமை என்பது தொடர்பில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் இலங்கையில் இடம்பெறுகின்ற குரோத கருத்து தெரிவிப்புக்களை விளக்கப்படுத்தி பல வருடங்களாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. பேராசிரியர் சுசான் வெனிஷ் என்பவரால் உருவாக்கப்பட்ட காழ்ப்புணர்வு கருத்து தெரிவிப்பு கட்டமைப்பினைப் பயன்படுத்தி தெற்காசியாவில் முதற்தடவையாக பேஸ்புக் குரோத கருத்துத் தெரிவிப்புக்களை விளக்கப்படுத்தி வெளியிட்ட அறிக்கைகளும் அவற்றுள் உள்ளடங்குகிறது. இந்த அறிக்கைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் ஆராய்ச்சியாளர்களால் பல சந்தர்ப்பங்களில் பேஸ்புக் நிறுவனத்திடம் சமர்ப்பித்த போதும் அவற்றுக்கு சாதகமான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தக் கடிதத்தினூடாக வெளிப்படுத்தப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிவில் சமூகத்துடன் மிகவும் செயற்திறன் மிக்க வகையில் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு பேஸ்புக் நிறுவனத்திடம் நாம் வேண்டுகின்றோம்.

###

 

2018 ஏப்ரல் 10

கொழும்பு

இலங்கை.

அன்பின் மார்க் அவர்களுக்கு,

தேசிய மொழிகள் மற்றும் சூழ்நிலைகள் தொடர்பில் பேஸ்புக் குடியுரிமைப் பண்புகளை நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்துவதற்காக அவசரமானதும், பெறுமதியுடையதும் மற்றும் தொடர் நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு வேண்டிநிற்கின்ற வகையிலும், அண்மையில் மியன்மாரில் முன்னணி சிவில் சமூக அமைப்புக்கள் கையொப்பமிட்டு தங்களுக்கு சமர்ப்பித்த கடிதத்திற்கு இணக்கத்தினையும் ஒத்துழைப்பினையும் தெரிவித்து கீழே கையொப்பமிடுகின்ற நாம் பெரிதும் உணர்ந்த வகையில் இந்தக் கடிதத்தினை முன்வைக்கின்றோம். வன்முறையாலும் யுத்தத்தினாலும் காலாகாலம் அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றதும், சமூக சமய இன அரசியல் மற்றும் பால்நிலை வேறுபாடுகள், அவ்வாறான நிலைமைகளுக்கு வழிசமைத்திருக்கும் நாடுகளிலும் சூழ்நிலைகளின் போதும் அப் பண்புகளை நடைமுறைப்படுத்துவதனை உறுதிப்படுத்ததுல் மிகவும் அவசியமானதாகும்.

பேஸ்புக் தகவல்கள் மற்றும் பேஸ்புக் பக்கங்களை அடிப்படையாகக் கொண்ட பால்நிலை வன்முறை மற்றும் LGBTIQ சமூகத்திற்கெதிரான துன்புறுத்தல்கள் தொடக்கம் குரோத மனப்பாங்குடனான கருத்து தெரிவித்தல் வரையான அனைத்தையும் ஒரு சமமாக கருதி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு முறைப்பாடு செய்த வேளையில் அது தொடர்பில் தங்களது தளமானது சிறு ஒத்துழைப்பினையேனும் வழங்கவோ அல்லது எந்தவொரு ஒத்துழைப்பினையேனும் வழங்காதிருந்தமை தொடர்பில் நாங்கள் பெரிதும் கவலையடைந்துள்ளோம். இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றாகிய, மாதாந்தம் நாட்டுக்குள் செயற்பாட்டு ரீதியாக பேஸ்புக் தளத்தினைக் கையாளும் ஆறு மில்லியன்களுக்கு அண்மித்த தரப்பினர் பயன்படுத்துகின்ற சிங்கள மொழியில் பிரசுரிக்கப்படுகின்ற உள்ளடக்கங்களுக்கு இது மிகவும் பொருத்தமானதாக அமையும்.

நாம் 2017 செப்டெம்பர் 7ஆம் திகதி சிங்கள கவிதையுடன் கூடிய புகைப்படமொன்று தொடர்பில் ஓர் முறைப்பாட்டினை முன்வைத்தோம். பெண் ஒருவர் கூறுகின்ற விதத்தில் தொகுக்கப்பட்ட அந்த கவிதையில் பெண்கள் வெட்கத்தின் காரணமாக “இல்லை” என்று கூறுகின்ற பெரும்பாலானவைகளில் அதன் உள் அர்த்தமாக அமைவது “ஆம்” என்பதாகும் என்று கூறப்படுகின்றது. 2017ஆம் ஆண்டு பொலிஸ் புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மாத்திரம் சட்டத்திற்குட்பட்டதாக 2,438 பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்களும் 294 பாலியல் வன்புணர்வுகளும் அறிக்கையிடப்பட்டுள்ளதால் இந்த விடயம் மிகவும் முக்கியமானதாகும். இதில் எந்தவொரு சம்பவம் தொடர்பிலும் அந்த வருடத்தினுள் எந்தவொரு நபரும் குற்றவாளிகளாக குறிப்பிடப்படவில்லை. அந்த புகைப்படமானது தங்களது குடியுரிமைப் பண்புகளை மீறவில்லை எனக் கூறிய அதேவேளை அது தொடர்பிலான கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு இரண்டு நாட்களையும் எடுத்துக் கொண்டமையானது தாங்கள் தங்களது குடியுரிமைப் பண்புகளாக பாலியல் வன்முறைகளையும் சுரண்டல்களையும் அதிகரிக்கும் வகையிலான உள்ளடக்கங்களை அகற்றுவதாக உறுதியளித்திருக்கின்ற சூழ்நிலையிலேயே ஆகும்.

2017 Lanka Comic Con விழாவிற்கு இடையில் பேஸ்புக் பக்கங்கள் சிலவற்றின் நிர்வாகிகளது விழாவின் போது அலங்கார உடையணிந்து தமது மேடைப் பாத்திரத்தை வெளிக்காட்டிய பெரும்பாலான பெண்களது உடல் அமைவினை இழிவுபடுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதுடன் அவற்றுள் பெரும்பாலானவை சிங்கள மொழியிலேயே எழுதப்பட்டிருந்தது. இந்தப் பக்கம் மற்றும் புகைப்படம் தொடர்பில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு கையாளும் தரப்பினர் பலர் ஒன்று கூடி செயற்பட்டபோதும் 2018 மார்ச் மாதத்திலும் இந்தக் கருத்துக்களில் பல ஒன்லைனில் காணக்கூடியதாகவிருந்தது. ஆயினும், தமது கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் மீறப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் புகைப்படக் கலைஞர் ஒருவர் தாம் எடுத்த புகைப்படம் ஒன்று தொடர்பில் முறைப்பாடு செய்தவிடத்து அந்த புகைப்படம் அகற்றிக் கொள்ளப்பட்டது. கையாளும் ஒரு நபரது தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் பால்நிலை சமத்துவத்தினை அடிப்படையாகக் கொண்ட ஒன்லைன் வன்முறைகளையும் தாண்டி புலமைச் சொத்துகளுக்கு முன்னுரிமை வழங்கி பேஸ்புக் நிறுவனம் மேற்கொண்ட இந்தச் செயற்பாடானது பாதிக்கப்பட்ட பலரது நம்பிக்கையை இழக்கச் செய்த ஒரு நடவடிக்கையாக குறிப்பிட முடியும். தனிநபர் ஒருவரை அவமானப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் உருமாற்றம் செய்யப்பட்ட புகைப்படங்களை அகற்றுவதென தெரிவிக்கப்பட்ட விசேட குறிப்பு தங்களது குடியுரிமைப் பண்புகளுள் காணப்படுகின்ற சூழ்நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெறுகின்றது.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், Hashtag Generation மற்றும் Ghosha ஆகிய அமைப்புக்களால் தொழிநுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் தற்போது மேற்கொண்டு வரும் ஓர் ஆய்வில் அறியக்கிடைத்த விடயமாவது பெண்களை துன்புறுத்தும் வகையிலோ அல்லது பெண்களுக்கெதிரான வன்முறைகளை அதிகரிக்கும் வகையிலான தனிப்பட்ட மற்றும் அந்தரங்கமான புகைப்படங்கள் மற்றும் கருத்துக்கள் மீண்டும் மீண்டும் பொது இணக்கப்பாடுகளின்றி தங்களது தளத்தினூடாக பிரபல்யப்படுத்தப்படுகின்றது என்பதாகும். ஆயினும், அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வைக்கப்பட்ட பிறகும் கூட இந்த கருத்துக்களில் பல ஒன்லைனில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது. சிங்கள மொழியானது இலங்கையினுள் மாத்திரம் பயன்படுத்தப்படுகின்ற போதிலும் தமிழ் மொழியானது இந்தியா உட்பட பல நாடுகளில் விரிவடைந்து காணப்படுகின்ற காரணத்தினால் ஒருங்கிணைப்பு செய்வதற்கு கூடுதல் ஒத்துழைப்புக்களைப் பெறக்கூடிய சூழ்நிலையில் தான் பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தூண்டுகின்ற தகவல்கள் தமிழ் மொழியில் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்டு வருகின்றது.

சிங்கள மொழியில் பிரசுரிக்கப்படுகின்ற தகவல்களை ஒருங்கிணைப்பு செய்பவர்களது அடையாளம் அல்லது மிகவும் முக்கியமான விடயமாக அமையும் அவர்களது பால்நிலை சமத்துவம் தொடர்பில் எந்தவிதமான வெளிப்படைத்தன்மையும் இல்லை என்பதனை மிகவும் ஆணித்தரமாக சுட்டிக் காட்டுகின்றோம். சுட்டிக் காட்டப்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அந்தப் பிரச்சினைகள் சுட்டிக்காட்டுகின்ற சூழ்நிலையை முழுமையாக உணர்ந்து கொள்ளக்கூடிய – மற்றும் புரிந்து கொள்ளக்கூடிய – நபர் ஒருவரின் மூலமாக முறைப்பாடு செய்யப்படுகின்ற உள்ளடக்கங்கள் மீளாய்விற்கு உட்படுத்தப்படுகின்றது என்பது  தொடர்பில் கையாள்பவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். பாலியல் நாட்டமுள்ள சிறுபான்மையினர் மற்றும் பால்நிலை சமத்துவ அடையாளம் தொடர்பிலான சம்பவங்களின் போது இந்த விடயமானது இரு மடங்கு அவசியமானதொன்றாகும். மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிடுவதற்காகவும் தங்களது தளம் தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவனங்களுக்கு கீழ்படிந்த சிங்கள உள்ளடக்கங்கள் தொடர்பில் கையாள்பவர்களால் செய்யப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நடுநிலையாக்குநர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்கள் தொழிற்படும் பேஸ்புக் அலுவலகம் அல்லது கால வலயம் மற்றும் அவர்களது பால்நிலை அடையாளங்கள் என்பன தெளிவுபடுத்தப்பட வேண்டும். வன்முறைகள் அதிகரிக்கப்படுகின்ற மற்றும் அதிகமாக கட்டுப்படுத்தப்பட வேண்டிய விசேட காலப்பகுதிகளில் கையாள்பவர்களால் முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகளை விசாரிப்பதற்கு மற்றும் தீர்த்து வைப்பதற்கென தெளிவான அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.

அண்மித்த சில மாதங்களில் இலங்கையின் கிங்தொட்டை, அம்பாறை மற்றும் கண்டி பிரதேசங்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களின் போது வெளிப்படையாகவே இன அழிப்பைத் தூண்டிய மற்றும் குரோதத்தைத் தூண்டும் வகையில் வேறு வகையிலான விடயங்களைக் கொண்ட உள்ளடக்கங்களை அகற்றுவதற்கு தங்களது தளம் தவறியமையும் தயாரின்றி இருந்த நிலையையுமே நாம் இங்கு கூடுதல் கவனத்தில் கொண்டுள்ளோம். உதாரணமாக, 2018 மார்ச் மாதத்தில் மத்திய மாகாணத்தின் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைகளுக்கிடையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்தி தொடர்பில் ஆரம்பத்திலேயே முறைப்பாடு செய்யப்பட்ட பிறகும் தொடர்ந்து ஆறு நாட்களாக பேஸ்புக் தளத்தில் காணக்கூடியதாக இருந்தது. கொடுமையானவர்கள் என்பதால் குழந்தையாக இருந்தாலும் விடாது அனைத்து முஸ்லிம்களையும் கொலை செய்ய வேண்டும் என அந்த செய்தியில் வேண்டப்பட்டிருந்தது.

இங்கு அமைதியான முறையில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் உண்மையான செய்தி மிகக் கொடிய சொற்களை கொண்டிருந்தது. அந்தச் செய்தியானது எந்தவொரு வழிகாட்டுதல்களையும் மீறவில்லை என்று கூறி அது தொடர்பில் முறைப்பாடு செய்த கையாள்பவருக்கு பேஸ்புக் நிறுவனம் அளித்த பதிலிருப்பானது வியப்பிற்குறிய ஒரு விடயமே. சிங்கள உள்ளடக்கத்தினை மீளாய்வு செய்கின்ற நடுநிலை பணியாளர்களின் அடையாளம் தொடர்பான கேள்வி இங்கு மீண்டும் எழுகிறது. ஒன்றில் அவர்கள் தங்களது தளத்தில் குரோத கருத்துக்கள் தொடர்பில் தாங்கள் பின்பற்றும்  பண்புகளைப் பற்றி அறியாதவர்களாக இருக்க வேண்டும். இல்லையெனில் – மிகவும் பயங்கரமான விடயம் இதுவே – அவர்கள் அவ்வாறான செய்திகளூடாக தெரிவிக்கப்படுகின்ற உணர்வுகளுக்கு தமது பக்கச்சார்பு நிலையை வெளிப்படுத்துவதாக இருக்கலாம்.

இனத் தேசியவாதம் மற்றும் ஒன்லைன் களத்தினுள் வன்முறையைத் தூண்டிவிடுதல் மற்றும் அவற்றுக்கு பொறுப்பானவர்கள் தண்டனை பெறாதிருப்பதென்பது இலங்கைக்கு மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு விடயமல்ல. அவமானப்படுத்தும் இவ்வகையான செயற்பாடுகள் மியன்மாரின் நிலைமைக்கு நேரொத்ததாக காணப்படுவதோடு மியன்மார் நாட்டுக்குள் குரோத கருத்துக்கள் பரவுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் பொறுப்புக் கூற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை மிகத் தெளிவாக தெரிவித்து நின்றது. சமூக ஊடகத் தளங்களில் தெரிவிக்கப்படுகின்ற குரோத கருத்துக்களுக்கு தீர்வுகள் காணப்படாதவிடத்து இந்த பிரச்சினையானது மென் மேலும் பாரிய நெருக்கடியாக மாறக்கூடும் என்பதால் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் – இவர்களுள் பலர் தோழர்கள், நண்பர்கள் மற்றும் சம செயற்பாட்டாளர்கள் ஆவர் – பெரும்பாலும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

குரோத கருத்துக்கள் வன்முறையைத் துண்டிவிடுகின்றது என்ற விடயத்தை தொடர்புபடுத்தும் பேராசிரியர் சுசான் வெனிஷ் என்பவரால் உருவாக்கப்பட்ட காழ்ப்புணர்வு கருத்து தெரிவிப்பு கட்டமைப்பினைப் பயன்படுத்தி இலங்கையில் குரோத கருத்துத் தெரிவித்தல் தொடர்பாக கடந்த ஏழு வருட காலமாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினால் தொடர்ச்சியாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது என்பதனை தங்களுக்கு விருப்பத்துடன் ஞாபகப்படுத்துகின்றோம்.

அழுத்கம முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களினைத் தொடர்ந்து “வன்முறைக்கு விருப்பம் தெரிவித்தல்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையானது இலங்கையின் சமூக ஊடகத் துறையினுள் சிறுபான்மையினருக்கு எதிரான குரோத கருத்துக்கள் எந்தளவு காணப்படுகின்றன என்பது தொடர்பிலான கவனத்தை செலுத்த வைப்பதற்கான முயற்சியாக அமைந்தது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை கலந்துரையாடல் என்பது எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையுமின்றி குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற வதந்திகளுக்கும் அந்த சமூகத்திற்கு எதிரான வன்முறைக்கு விடுக்கும் அறைகூவல்களினதும் கலவையாகும். தெற்காசியாவினுள் இவ்வாறானதொரு அறிக்கை வெளியிடப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இது என்பதுடன் வன்முறை மற்றும் குரோதத்தை தூண்டிவிடும் உள்ளடக்கங்களை உருவாக்குகின்ற போது, பரவவிடுகின்ற போது மற்றும் அதனுடன் தொடர்புபடுகின்ற போது பேஸ்புக் தளமானது பிரதான கருவியாக மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் மற்றும் உரியதாக்கிக் கொள்ளுகின்ற விதம் தொடர்பாக நோக்குகையில் 2014 ஆம் ஆண்டு வரையான வெகு தூரத்திற்கு எமது கவனத்தை செலுத்த வைத்தது. “சுனிலைப் பாதுகாப்போம்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையானது ஒரு விடயத்துடன் தொடர்புபட்டு உருவாக்கப்படுகின்ற ஒரு பக்கம் எந்தளவு சீக்கிரமாக குரோத கருத்துக்களுக்கு கருவியாக அமைகின்றது என்பது தொடர்பில் ஆராய்கின்றது. இலங்கையின் சமூக ஊடகத் துறை கட்டமைப்பினுள் தொடர்ச்சியாக இவ்வாறான இருநூறுக்கும் மேற்பட்ட குழுக்கள் உருவாக்குவதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை என்றும் குரோத கருத்துக்களை பரப்பும் நபர்கள் தண்டனை பெறவில்லை என்றால் மற்றும் ஒன்லைனினுள் இடுகின்ற கருத்துக்கள் (போஸ்ட்) தொடர்பில் அதற்கான பொறுப்புக் கூறலை அவர்களைக் கொண்டு மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால் இந்த நிலைமையானது தீவிரமடையும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “குரோத எண்ணத்துடன் வாக்களித்தல்” என்ற பெயரில் வெளியிடப்பட்ட அறிக்கையானது அரசியல் கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட பேஸ்புக் குழுவின் அடையாளம், சமயம் அல்லது பால்நிலை சமத்துவத்தினை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை இலக்காகக் கொண்ட அரசியல் பேச்சுக்களின் மாயையில் குரோத கருத்துக்களை அதிகரிக்க வைப்பதற்கான சூழ்நிலை இருப்பதாக குறிப்பிடுகின்றது. இந்த அறிக்கையானது சிங்களம், தமிழ் மொழிகளுக்கு மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன் பல வருட காலமாக பல்வேறான சந்தர்ப்பங்களின் போது பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஆய்வாளருமான சஞ்ஜன ஹத்தொடுவ அவர்களால் பேஸ்புக் நிறுவனத்தின் பல பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அது மாத்தரமல்ல 2017 டிசம்பர் மாதம் நடைபெற்ற Global Voice மாநாட்டின் போதும், பேஸ்புக் நிறுவன பிரதிநிதிகளுடன் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதும் ஜனநாயகம், அபிவிருத்தி மற்றும் சட்ட ஆளுகை தொடர்பான நிலையத்துடன் ஒன்றிணைந்து சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பான தேசிய ஜனநாயக நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு 2017 ஜூன் மாதம் ஸ்டன்பர்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற போலியான டிஜிட்டல் தகவல் ஒன்றியத்தின் போதும் பேஸ்புக் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்தப் பிரச்சினை நேரடியாகவும் வெளிப்படையாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த ஒன்றை முன்வைப்பதற்கேனும் சாட்சிகள் மற்றும் தகவல்களின் மூலமாக வெளிபடுத்தப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து பெறுமதியான மறுமொழியினை தெரிவிக்கவில்லை.

கண்டி பிரதேசத்தில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு மத்தியில் பேஸ்புக் சமூக ஊடகம் தடைசெய்யப்பட்ட பின்னர் மட்டுமே பேஸ்புக் நிறுவனம் அதற்கு பதிலழிக்க தீர்மானித்ததுடன் அதன்போதும் அவர்கள் அரச பிரதிநிதிகளுக்கு மட்டுமே பதிலழித்தார்கள். அது கருத்திலெடுக்கப்பட வேண்டிய விடயமாகும். அதன் பின்னர் கூட அவர்களது சமூக ஊடகத்தில் இடம்பெற்ற அவதூறுகள் தொடர்பாக பல ஆண்டுகளாக முறைப்பாடுகளை செய்திருந்த சிவில் செயற்பாட்டாளர்களுடன் அர்த்தபுஷ்டியான உறவுகளை பேணுவதற்குக்கூட பேஸ்புக் நிறுவனம் தீர்மானிக்கவில்லை. மார்ச் மாதம் பேஸ்புக் நிறுவன சிரேஷ்ட பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பின்னரே பேஸ்புக் நிறுவனம் தமது தளத்தில் இடம்பெறும் வெறுப்பூட்டும் பதிவுகளைக் கட்டுப்படுத்துவதாக அரசுடன் இணைந்து செயற்பட தீர்மானித்தது. இலங்கை மற்றும் சிங்கள பதிவுகள் தொடர்பிலான தாமதமாகவேனும் காட்டும் அக்கறையை பாராட்டினாலும் அதுகூட சிவில் சமூகப் பிரதிநிதிகள் இல்லாமலும், தெளிவுபடுத்தப்படாமலும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பில் நாம் மிகவும் அக்கறையுடன் இருக்கிறோம். அதுமட்டுமன்றி மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுத்த போதிலும் பேசப்பட்டவை என்ன? எட்டப்பட்ட முடிவுகள் என்ன? என்பது போன்ற விடயங்கள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. வெறுப்பூட்டும் கூற்றுக்களை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் குறுகிய செயற்பாடுகளுக்கு பதிலாக தனித்துவமாக கருத்து தெரிவிக்கும் சுதந்திரத்தை அச்சுறுத்தலுக்கு உட்படுத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள மற்றும் அதனை தொடர்ச்சியாக மேற்கொண்டுவரும் நிலையில் பேஸ்புக் நிறுவனம் எதிர் அரசியல் கருத்துக்களைத் தடுப்பதற்காக உத்தியோகபூர்வமாக நடவடிக்கை எடுக்குமென கருதுகிறோம். ஆலோசனை கோரும் செயற்பாடுகள் இல்லாத நிலையில் உங்களது மதிநுட்பமிக்க கருத்துக்களுக்கு மிகவும் மோசமான பதிலிறுப்புக்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இவை காணாமல்போகச் செய்யப்படும் பயம். அல்லாவிட்டால் பேஸ்புக் நிறுவன நண்பர்கள் மற்றும் குடும்பத்தவர்களுடன் மிகவும் அர்த்தபூர்வமான இடைத்தொடர்புகளுக்கு வாய்ப்பு வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் விசாரணையாக அறியப்படும் “Explore Feed” பிரிவை பரீட்சித்து பார்ப்பதற்காக தெரிவுசெய்யப்பட்ட நாடுகள் சிலவற்றில் இலங்கையும் உள்ளடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவு அதனை அமுல்படுத்தம் பெரும்பாலான நாடுகளில் இயக்கங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களுக்குப் பாதகமாக தாக்கம் செலுத்தியுள்ளதுடன் இன்னமும் முழுமையாக தெளிவுபடுத்தப்படாத காரணங்களினால் கடைசியில் தோல்வியடைந்துள்ளது. எமது நாடு தெரிவு செய்யப்படுவதற்காக கையாளப்பட்ட அளவுகோல் என்ன என்பதும் பரீட்சித்து பார்ப்பதன் ஊடாக பேஸ்புக் நிறுவனம் எதனை கற்றுள்ளது என்பது தொடர்பிலும் அது எமது news feeds வலுப்படுத்தும் சமன்பாடுகளுக்கு ஏதாவது காலம் கடந்த அழுத்தத்தை ஏற்படுத்துமா என்பதும் எமக்குத் தெரியாது.

பேஸ்புக் நிறுவனத்தின் இந்த ரகசித்தன்மையானது கையாள்பவர்களது பலத்தைக் குறைப்பதற்கும் வெறும் வியாபாரப் பொருளாக மாற்றுகின்றதுமான செயற்பாடாகும். மேற்கூறிய விடயங்களுக்கு மேலதிகமாகக் காணப்படுகின்றன மற்றுமொரு பிரச்சினையாவது தங்களது தளம் சேகரித்துக் கொண்ட தரவுகளைப் பயன்படுத்தி மேற்கொண்ட Cambridge Analytica தொடர்பில் அண்மையில் செய்யப்பட்ட வெளிப்படுத்தல்கள் எந்த வகையில் தமக்கு அழுத்தங்களை தந்தது என்பது தொடர்பில் இலங்கையில் ஒரு மாதத்தில் செயற்பாட்டு ரீதியில் இருக்கின்ற ஆறு மில்லியன் தரப்பினர் அறியாதிருந்தமையே ஆகும். தங்களது தளமானது பலமடைந்து இருக்கின்ற இந்தியாவில் அரை மில்லியன் கையாள்பவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸில் கையாளும் ஒரு மில்லியன் தரப்பினரை விட சற்று அதிகமான எண்ணிக்கையினருக்கு வெளிப்படுத்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தினை கவனத்தில் கொள்ளும் போது எமது கவலை மேலும் அதிகரிக்கின்றது.

இந்த வாரம் அமெரிக்க காங்கிரசில் சமர்ப்பித்த எழுத்துமூல சாட்சியில் உங்களது பேஸ்புக் தளம் பாரதூரமாக தவறாக பாவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தங்களுக்குள் காணப்படும் மனவருத்தத்தினை அதிகாரபூர்வமாக அறிக்கையிடப்படுவது மாத்திரமன்றி நிறுவனமானது முன்னுரிமை வழங்குவது “எமது பிரஜைகளை பாதுகாப்பதற்கு” என்பதற்காகவும் அது “எமது உச்ச இலாபமீட்டலை விடவும் மிக முக்கியமானது” எனவும் தாங்கள் அதன்போது குறிப்பிட்டீர்கள். நாங்கள் இந்த கருத்துக்களை வரவேற்கின்றோம். ஆயினும் இந்த வசனங்கள் பேச்சளவில் இல்லாது செயலளவில் மாற்றப்பட வேண்டும்.

நீண்ட காலமாக எமக்கு கேட்கக் கிடைத்துள்ள விடயமானது தனிப்பட்ட அர்ப்பணிப்புக்கள், வாக்குறுதிகளை வழங்கல் அல்லது மன்னிப்புக் கோரல் தொடர்பாக மட்டுமே. தங்களது நிறுவனத்திடம் நாங்கள் இவ்வேளையில் சுட்டிக் காட்டியிருக்கும் மற்றும் பல வருட காலமாக கவனம் செலுத்தியிருக்கும் பிரச்சினைகள் தொடர்பில் செயற்பாடுகளை எடுப்பதற்கு சிவில் சமூகத்துடன் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாரதூரமாகவும் உடனடியாகவும்  ஆக்கபூர்வமாகவும் அர்ப்பணிப்பு செய்வீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இந்த கடிதம் தொடர்பில் கவனம் எடுத்தமை தொடர்பாக தங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

கையொப்பமிட்டோர்,

Bakamoono, http://www.bakamoono.lk
Centre for Equality and Justice
Centre for Policy Alternatives, http://www.cpalanka.org
Equal Ground, http://www.equal-ground.org
Ghosha, https://ghoshawomen.wordpress.com
Grassrooted Trust, https://grassrooted.net
Hashtag Generation, https://www.facebook.com/hashtaggenerationsl
INFORM Human Rights Documentation Centre, https://ihrdc.wordpress.com
South Asians for Human Rights (SAHR), http://www.southasianrights.org
Viluthu, http://www.viluthu.org
Women and Media Collective, http://womenandmedia.org
Women’s Action Network
Youth Advocacy Network Sri Lanka, https://www.facebook.com/YANSriLanka

இந்த மடல் தொடர்பான மேலதி தௌிவுபடுத்தல் மற்றும் தகவல்களுக்காக தொடர்பு கொள்ளவும்: Sanjana Hattotuwa ([email protected]) Raisa Wickrematunge ([email protected]) or Amalini De Sayrah ([email protected])