பட மூலம், Amalini De Sayrah
காலை 10.30 மணியிருக்கும். மஸ்கெலியாவின் ஸ்திரஸ்பே தோட்டத்தில் உள்ள தோட்டத் தொழில்துறை அபிவிருத்திக்கான சமூக நிறுவகத்தினால் நிர்வகிக்கப்படும் ஆரம்பப் பாடசாலையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
முதலில் ஆண்பிள்ளைகள், பின்னர் பெண்பிள்ளைகள் என வரிசையாக நிற்கின்றனர். அந்த ஆரம்பப் பாடசாலைக்கு என மலசலகூடம் எதுவுமில்லை. மலசலகூடம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலப்பகுதிக்கு அருகாமையில் இரசாயனங்கள் சேமிக்கும் கட்டடம் ஒன்று அமைந்துள்ளதால் அரசாங்கம் மலசலகூடம் அமைப்பதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன் காரணமாக அவர்கள் திறந்த வெளியில் உள்ள கால்வாயை பயன்படுத்தவேண்டியுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் தங்கள் மதிய உணவை திறக்கின்றனர். 2002 இல் கல்வியமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட மதிய உணவு திட்டத்தின் படி இந்தப் பிள்ளைகளுக்கு பாலும் உணவும் வழங்கப்படவேண்டும். ஆனால், இந்த ஆரம்பப் பாடசாலைக்கு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் அதற்கான நிதி கிடைக்கவில்லை. 2015 இல் வெளியான உலக வங்கியின் அறிக்கையொன்று தேசிய பாடசாலை உணவூட்டல் கொள்கையொன்றின் அவசியம் குறித்து குறிப்பிட்டிருந்தது. அதனை நடைமுறைப்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
ஆனால், ஆசிரியர்கள் இரண்டு மாணவர்களை சுட்டிக்காட்டுகின்றனர். ஒருவர் மதிய உணவிற்கு ரொட்டியும் வாழைப்பழமும் கொண்டுவந்திருக்கின்றார். மற்றைய மாணவன் நூடில்ஸ் கொண்டுவந்திருக்கின்றார். இவை இரண்டுமே பாடசாலையில் ஒட்டப்பட்டுள்ள பரிந்துரைக்கப்பட்ட உணவு திட்டத்திற்கு முரணானவை.
###
இலங்கையில் தேயிலை உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் நிறைவை இலங்கை அரசாங்கம் கொண்டாடிவருகின்ற நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் முகம்கொடுத்துவரும் இன்னல்கள் குறித்து எமது சகோதர தளமான ‘Groundviews‘ கட்டுரைகளை வௌியிட்டு வருகின்றது. அதன் தொடர்ச்சியாக “ரொட்டியும் சோறும்” என்ற தலைப்பில் மலையகத்தில் சிறுவர்களின் போஷாக்கில் காணப்படும் ஏற்றத்தாழ்வை ஆராய்ந்து ரய்ஸா விக்கிரமதுங்க கட்டுரை ஒன்றை வரைந்துள்ளார். அதனை இங்கு கிளிக் செய்வதன் ஊடாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.