படம் | Colombo Telegraph, (மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் மற்றும் கட்டுரையாளர் லயனல் போபகே வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து அழைத்துச் செல்லப்படும்போது எடுக்கப்பட்ட படம்)

1971 ஏப்ரல் எழுச்சியின் 46ஆவது ஞாபகாரத்த நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. 71 சகோதரத்துவ ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் செயலாளரான லயனல் போபகே “எழுபதாவது தசாப்தத்தில் அரச அடக்குமுறையின் தன்மை” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தியிருக்கிறார். அதன் எழுத்து வடிவம் கீழே தரப்பட்டுள்ளது.

###

1971 ஏப்ரல் எழுச்சி தொடர்பாக நடைபெறும் இந்த 46ஆவது ஞாபகார்த்த தினத்தில் எழுபதாவது தசாப்தத்தில் இடம்பெற்ற அரச அடக்குமுறையின் சுபாவம் தொடர்பாக சில கருத்துக்களை தெரிவிப்பதற்கு அழைப்பு விடுத்ததற்காக முதலாவதாக நான் 71 சகோதரத்துவ ஒன்றிய சகோதர சகோதரிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1971 ஏப்ரல் எழுச்சி தொடர்பாக பேசும் எல்லா சந்தர்ப்பங்களிலும் மனதில் எழும் தலைப்பொன்று இருக்கின்றது. அது, மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பம் முதலே வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது என்ற விடயமாகும். இது தொடர்பான விடையைத் தேடிக் கொள்வதற்கு, இதற்கு சமாந்திரமாக ஒரு கேள்வியை எழுப்ப விரும்புகிறேன். அந்தக் கேள்வி என்னவென்றால், அன்றிருந்த சர்வதேச மற்றும் தேசிய அரசியல் அதிகார முகாம்கள் அன்றிருந்த இளைஞர் சமூகத்துக்கு தங்களது புதுயுகத்துக்கான எதிர்பார்ப்புக்களை பூர்த்திசெய்து கொள்வதற்கு தேவைப்பட்ட அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வதற்காக அவர்களுக்கு அமைதிப் பாதையோ அல்லது சந்தர்ப்பம் பெற்றுக் கொடுக்கப்பட்டதா என்பதேயாகும். விடையைத் தேடிக் கொள்வதென்றால், அக்காலத்தில் காணப்பட்ட சர்வதேச மற்றும் தேசிய அரசியல் சூழலும், அக்காலத்தில் காணப்பட்ட அரச அடக்குமுறையின் சுபாவமும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டும். இன்று கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை எழுபதாவது தசாப்தத்தில் இடம்பெற்ற அரச அடக்குமுறையின் சுபாவம் குறித்து சில கருத்துக்களை மாத்திரம் முன்வைக்க பயன்படுத்தப் போகிறேன். இருந்தும் 1971 ஏப்ரல் எழுச்சி தொடர்பாகவுள்ள பொறுப்புக்களிலிருந்து மக்கள் விடுதலை முன்னணியை விடுவிக்கவோ அல்லது நான் விடுபடவோ இதன் மூலம் கருதவில்லை.

1960 தசாப்தங்களில் தேசிய சர்வதேச அரசியல் அரங்கில் முக்கிய பல மாற்றங்கள் இடம்பெற்றன. இந்த மாற்றங்கள் மக்கள் விடுதலை முன்னணி உருவாவதற்கும் அதன் அழிவுக்கும் வழிவகுத்தது.

அக்காலத்தில் முதலாளித்துவம் புதிய ஏகாதிபத்திய சொரூபத்தில் அதன் சிறப்பை பரைசாற்றி உலகம் முழுவதும் தனது ஆதிதபத்தியத்தை உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது. அமெரிக்கா மற்றும் சி.ஐ.ஏ. அமைப்பு தனது பலத்தை பகிரங்கமாக/ மறைமுகமாக பிரயோகித்து உலகம் முழுவதும், விசேடமாக தென் கிழக்காசிய நாடுகளில் இருந்த… முழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும் (மூன்று மொழிகளிலும்)


லயனல் போபகே