வருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்துவருகிறார்கள்.

பூர்வீகமாக மீன்பிடித் தொழில் செய்துவரும் தமிழ் மக்களின் மீன்வளத்தை அள்ளிக்கொண்டு செல்வதற்கு 500இற்கும் மேற்பட்ட படகுகளில் வரும் மீனவர்கள், கூட்டுறவு சங்கங்களின் சட்டங்களையும், கடற்தொழில் திணைக்களத்தின் சட்டவிதிகளையும் ஒரு பொருட்டாகக் கொள்வதில்லை. இந்தச் சட்டவிரோத செயற்பாட்டுக்கு அரசாங்கமும், அதன் நிறுவனங்களும் துணைபோவதாக முல்லைத்தீவு மீனவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

சிலாபம் பகுதியில் பருவகாலம் முடிவடைந்தவுடன், முல்லைத்தீவை நோக்கி இவர்கள் படையெடுக்கிறார்கள். ஆனால், முல்லைத்தீவு மீனவர்களோ தங்களது பருவகாலத்தையும் பகிரவேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

###

தென்னிலங்கை மீனவர்களின் வருகை மற்றும் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்தல், அரச நிறுவனங்கள் அதற்கு உடந்தையாக இருக்கின்றமை, 360 பாகையில் அவர்கள் குடியிருக்கும் வாடிப் பகுதி, மீனவ சங்க தலைவர்களின் காணொளி நேர்க்காணல், ஆதாரபூர்வமான படங்கள், ஆவணங்கள் போன்ற விடயங்கள் உள்ளடக்கிய களக் கட்டுரையை Adobe Spark ஊடாக இங்கு கிளிக் செய்வதன் மூலமும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.

​கொள்ளைப் போகும் மீன் வங்கி

செல்வராஜா ராஜசேகர்


சமூக ஊடகங்களில் மாற்றம்:

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : மாற்றம் பேஸ்புக் பக்கம்

ருவிட்டரில் மாற்றத்தைத் பின்தொடர : மாற்றம் ருவிட்டர் தளம்

இன்ஸ்டகிராமில் கருத்து/விருப்பம் தெரிவிக்க : மாற்றம் இன்ஸ்டகிரம்