இன்று உலகெங்கும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

சுதந்திரம், சமத்துவம், பிரதிநிதித்துவம் போன்ற அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கிடைக்கப்பெற்ற வெற்றியின் விளைவாக இந்தத் தினம் வருடந்தோறும் மார்ச் 8ஆம் திகதி கொண்டாடப்பட்டு வருகிறது.

இம்முறை “மாற்றத்திற்காக துணிந்து நில்” (#BeBoldForChange) என்ற தொனிப்பொருளில் பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தங்கள் வாழ்விலும் நிச்சயமாக மாற்றம் ஒன்று நிகழும் என்ற நம்பிக்கையுடன், காணாமலாக்கப்பட்ட பிள்ளைகள், கணவர் வீடு வந்துசேர்வார்கள், விடுதலை செய்யப்படுவார்கள், இல்லையென்றால் அவர்கள் இருக்கும் இடத்தையாவது அறிந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையுடன் 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி பெண்கள் மாற்றத்திற்காக துணிந்து நின்றார்கள்.

ஆனால், அந்த மாற்றத்தின் வரவை எதிர்பார்த்து இரண்டு வருடங்கள் கடந்தும் இன்றுவரை அவர்கள் வீதியில் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற பகுதிகளில் உள்ள வீதிகள் அவர்களின் நிரந்த வசிப்பிடமாக மாறிவிட்டன.

நடைபிணங்களாக வாழும் அவர்களின் கதைகள் இவை.

###

Adobe Spark தளத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கட்டுரையை இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் பார்க்கலாம்.

#WomensDay : இவர்களுக்குமா?