படம் | கட்டுரையாளர்
ரூபா 1,000 பெற்றுத் தருவதாக உறுதியளித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தலவாக்கலையில் வைத்து தேர்தல் வாக்குறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ரூபா 1,000க்கு ஆதரவு தெரிவித்து சத்தியாக்கிரகம் இருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் இறுதியாக ரூபா 730 சம்பள உயர்வுக்கு தலையாட்டிவிட்டு கூட்டு ஒப்பந்தம் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று அறியமுற்படுவதாகத் தெரியவில்லை. சம்பளத்தை அதிகரித்துவிட்டோம், இனி இரண்டு, மூன்று வருடங்கள் கடத்திவிடலாம், இதை வைத்து அரசியல் நடத்தலாம் என்ற எண்ணத்தில் மலையக அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
ஆனால், தோட்டத் தொழிலாளர்களோ செய்துகொள்ளப்பட்ட புதிய கூட்டு ஒப்பந்தத்தின் படிகூட தங்களுக்கு சம்பளம் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள். இம்முறை புதிதாக சேர்க்கப்பட்ட உற்பத்தித்திறன் கொடுப்பனவான ரூபா 140 ஐ திட்டமிட்டே இல்லாமல் செய்வதாகவும், இதனால், பழைய கூட்டு ஒப்பந்த சம்பளத்தை விட குறைவாகவே கிடைப்பதாகவும் விரக்தியுடன் கூறுகிறார்கள். கூட்டு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு 4 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவ்வொப்பந்தம் சரிவர நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்று கூட தொழிற்சங்கங்கள் பார்ப்பதில்லை என்றும், ஊருக்கு ஊர் தொழிற்சங்கத் தலைவர்கள் வைத்திருப்பதால் என்ன பயன் என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.
ரூபா 1,000 கிடைக்காவிட்டாலும் ரூபா 730 ஆவது வெட்டு குத்து இல்லாமல் அப்படியே கிடைத்தால் ஓரளவாவது கடனில்லாமல் வாழலாம் என்று ‘மாற்றம்’ தளத்துக்கு தொழிலாளர்கள் கூறுகிறார்கள்.
அவர்களது கருத்துக்களை உள்ளடங்கிய கட்டுரை Adobe Spark என்ற சமூக வலைதளத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் கட்டுரையை வாசிக்கலாம்.