படம் | Constitution.org 

இலங்கையின் புதிய அரசியலமைப்பானது சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசின் கடப்பாடுகள் தொடர்பில் போதியளவு அங்கீகரிப்பை உள்வாங்கியதாக அமைவதனை உறுதிப்படுத்த வேண்டுமென பெருமளவான கையொப்பங்களுடன் சிவில் சமூக அமைப்புகள், தனிநபர்கள் அரசியலமைப்புப் பேரவைக்கு மனுவொன்றை ஒன்றை கையளித்துள்ளனர்.

மனுவை முழுமையாக கீழே வாசிக்கலாம்,

இலங்கையின் புதிய அரசியலமைப்பானது சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் உரிமைகளை மேம்படுத்துவதற்கான அரசின் கடப்பாடுகள் தொடர்பில் போதியளவு அங்கீகரிப்பை உள்வாங்கியதாக அமைவதனை உறுதிப்படுத்த வேண்டுமென அரசியலமைப்பு பேரவையின் அனைத்து அங்கத்தவர்களையும் குறிப்பாக அதன் நெறிப்படுத்துகை குழுவையும் வேண்டுகின்றோம்.

முதலாவதாக, குறித்த வேண்டுகோளானது நாடளாவிய ரீதியில் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழுவுக்கு இவ் விடயம் தொடர்பில் செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையான சமர்ப்பித்தல்களின் வெளிப்பாடாக மட்டுமே இருக்கின்றதென்பதை நாம் குறிப்பிட்டுக் காட்டுகின்றோம். இந்த விடயம் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழுவின் சமூக பொருளாதார நீதி விரிவான பரிந்துரைகளில், குறிப்பாக, “அரச கொள்கையின் பணிப்பு கோட்பாடுகள்”, “அடிப்படை உரிமைகள் சட்டமூலம்”, “பொது நிதி” மற்றும் “காணி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல்” என்ற அறிக்கையின் அத்தியாயங்களின் கீழ் தெளிவாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, சுகாதாரம், கல்வி, சமூக நலனோம்புகை போன்ற துறைகளில் இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்திய பொதுமக்கள் ஏற்பாடுகள் தொடர்பான வரலாற்றை புதிய அரசியலமைப்பானது மிகத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் பிரதிபலித்தல் வேண்டும். இதன் மூலம் சுதந்திரம், கௌரவம், மனித நலன் மற்றும் பாதுகாப்பு என்பவற்றிற்கான உரிமைகளும், அதற்கான அடிப்படை உரித்துடைமைகளையும் மிகவும் வினைத்திறன் மிக்கதாக பேணப்படுவதை உறுதிப்படுத்த முடியும். இந்த விடயமானது சமூக, பொருளாதார, சுற்றாடல் சார்ந்த நிதிமுறைமை, அரசிறை மற்றும் வர்த்தக கொள்கை போன்ற யுத்தத்தினாலும் யுத்தத்திற்கு பின்னரான புனர்நிர்மானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான அணுகுமுறைகளினாலும் பாரதூரமாக்கப்பட்டுள்ள சமத்துவமின்மை, பிராந்திய சமநிலையின்மையை கூர்மைப்படுத்துகின்ற, சமூகக் கோட்பாட்டை பலவீனப்படுத்துகின்ற ஏதுக்கள் என்பதன் அடிப்படையில் இது மிகவும் முக்கியமானதாகும்.

மூன்றாவதாக, அரசியலமைப்பானது அ) உள்ளடக்கும் தன்மையுள்ள, ஒப்புரவான தன்மையான, பிராந்திய ரீதியான சமநிலையைப் பேணுகின்ற, பேண்தகு அபிவிருத்தி என்பவற்றினூடாக பகிர்ந்தளிப்பு நீதியினை உறுதிப்படுத்துகின்ற கடப்பாட்டினை அரசின் மீது விதிக்க வேண்டும் எனவும், ஆ) இந்த கடப்பாடுகள் தொடர்பில் பிரஜைகள் தமது உரிமைகளை கோருவதில் வினைப்படுத்துவதிலுமான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும் எனவும் நாம் வலியுறுத்துகின்றோம். மேற்கூறிய விடயமhனது இலங்கையானது ஜனநாயகமானது மட்டுமன்றி சோசலிச குடியரசு என்ற அதன் பெயருக்கு உயிரோட்டம் கொடுப்பதாக அமையும். மேலும் இலங்கை, தன்னுடைய கடப்பாடுகளை நிறைவேற்றுவது தொடர்பில் திட்டமிடப்பட்டதும் உறுதியானதுமான நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும் எனவும், 2030 ஆம் ஆண்டு நிகழ்ச்சி நிரலின் கீழான பேண்தகு அபிவிருத்திற்கான இலக்குகளை அடைவதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் பணிக்கின்ற சர்வதேச பொருளாதார, சமூக கலாசார உரிமைகள் தொடர்பாக சமவாயத்தின் உறுப்புரிமை நாடு என்பதனைவும் அடிப்படையாகக் கொண்டது.

நான்காவதாக, கல்வி, சுகாதாரம், உணவு, நீர், போதிய வீடமைப்பு, சமூகப் பாதுகாப்பு, வாழ்வதற்கான வருமானம், கௌரவமான பாதுகாப்பான வேலை, பலவந்தமான வெளியேற்றத்திலிருந்து சுதந்திரம், பாதுகாப்பான சுத்தமான ஆரோக்கியமான சூழல் என்பவற்றோடு தொடர்பான சமூக பொருளாதார உரிமைகள், உரிமைகள் சட்டமூலம் அல்லது அடிப்படை உரிமைகள் அங்கீகரிக்கப்படுவதன் மூலம் நீதிசார் வினைப்படுத்துகையை இவ் அரசியலமைப்பு இயலச் செய்வதனை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அரசியலமைப்புப் பேரவையைக் கோருகின்றோம். சிவில் மற்றும் அரசியல் சுந்திரத்தை மட்டும் அங்கீகரிக்கின்றதான உரிமைகள் சட்டமூலம் அல்லது அடிப்படை உரிமைகள் அத்தியாயம் உரிமைகளின் ஒன்றிலிருந்தொன்று பிரிக்கப்படமுடியாத மற்றும் ஒன்றிலொன்று தங்கியிருக்கும் தன்மையையும் உரித்துடைமையினையும் தாழ்மைப்படுத்துவதுடன் குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல் நாட்டின் சனத்தொகையின் கணிசமான பகுதியின் நலனையும் பாதுகாப்பையும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும்.

பொருளாதார மற்றும் சமூக உரிமைகளின் நீதிசார் வினைப்படுத்துகையானது கொள்கை தொடர்பில் அதிகரித்த நீதித்துறை ஆதிக்கம், மூலவளங்களை ஒதுக்குவதிலும் செலவிடுவதிலும் நிறைவேற்றுத்துறையினதோ அல்லது சட்டவாக்கத்துறையினதோ அதிகாரங்கள் மீது நியாயமற்ற மட்டுப்பாடு என்பவற்றை ஏற்படுத்தும் என்பதற்கு எந்தவொரு சான்றும் இல்லை என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மாறாக, இது சமுக மற்றும் பொருளாதாரக் கொள்கையின் நோக்கங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பான அதிகரித்த பொறுப்புக்கூறலுக்கும், பரிசீலனை மற்றும் சமநிலை பேணலுக்கும் இட்டுச் செல்லும்.

ஐந்தாவதாக, இலங்கை மக்களுக்கு இடையேயானதும் பிராந்தியங்களுக்கு இடையேயானதுமான உரிமை மறுப்பு, சமத்துவமின்மை, அநீதியான பகிர்ந்தளிப்பு என்பவற்றை இல்லாதொழிக்கத் தவறுகின்ற அரசிலமைப்பானது நீதி அல்லது சமாதானத்தின் அடிப்படைகளைப் பாதுகாக்கத் தவறுவதுடன் எதிர்கால முரண்பாட்டுக்கு வித்திடும் என்பதனை வலியுறுத்துகின்றோம். அரசியல் சமத்துவமும் சமூகம் மற்றும் பொருளாதார சமத்துவமின்மையும் ஒருங்கே இருக்கின்ற முரண்பாட்டு அரசியலினை உத்தியோகபூர்வமாக ஆக்குகின்ற ஒரு அரசிலமைப்பு ஒழுங்குமுறைமை, கால ஓட்டத்தில் அரசியல் ஜனநாயக கட்டமைப்புக்கு அச்சுறுத்தலினை ஏற்படுத்தும். அனைவருக்குமான சிவில் அரசியல் பொருளாதாரம் மற்றும் சமூக நீதியினை உத்தரவாதப்படுத்துகின்ற அரசியலமைப்பு ஒன்றினை உறுதிப்படுத்துவதன் மூலம் இது ஏற்படாமல் தடுப்பதற்கான கடமையினை அரசியலமைப்புப் பேரவையும் அதன் நெறி ஆளுகைக் குழுவும் கொண்டுள்ளன.

அரசுக்கும் பிரஜைகளுக்கும் இடையில் ஒரு புதிய சமூக ஒப்பந்தத்தினை புதிய அரசியலமைப்பானது தோற்றுவிக்கும் என்ற எதிர்பார்ப்பானது அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழுவின் உட்சேர்ந்த மற்றும் மக்கள் பங்கேற்புடனான செயன்முறையின் போது அடிக்கடி வலியுறுத்தப்பட்ட விடயம் என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அரசியலமைப்புக்கு அமைவாக நீதிசார் வினைப்படுத்துகைக்கு உட்படுத்தப்படக்கூடிய சமூக பொருளாதார நீதி மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துதலே குறித்த எதிர்பார்ப்புக்கு அடிப்படையானது என்பது அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழுவின் அறிக்கையிலிருந்து தெளிவாகின்றது. அவ்வாறு செய்யத் தவறுவது குறித்த எதிர்பார்ப்பினை மட்டுமன்றி அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான பொதுமக்கள் பிரதிநிதித்துவக் குழுவின் செயன்முறையையும் அர்த்தமற்றதாக்கும்.

இறுதியாக, தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறையானது, அது நெறிப்படுத்துகை குழு, ஆறு உப குழுக்கள், நிபுணத்துவக் குழுக்கள் என்பவற்றின் செயற்பாடாக இருந்தாலும் சரி, அல்லது முழு நேர காலச் சட்டகம் மற்றும் செயன்முறையாக இருந்தாலும் சரி, மிகவும் வெளிப்படைத்தன்மையற்றதாகக் காணப்படுவதனை நாம் ஆழ்ந்த கரிசணத்துடன் குறித்துக்காட்ட விரும்புகின்றோம். தீர்மானத்தின் 4 மற்றும் 11 உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு வெளிப்படுத்துகை தன்மையை நிறுவனமயப்படுத்துவது தொடர்பிலோ அத்தகைய தகவலை ஒளிபரப்புவது, பகிர்ந்து கொள்வது தொடர்பிலோ எந்தவொரு அர்த்தபுஷ்டியான முயற்சியும் எடுக்கப்படாத தன்மை, நாடாளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றிய தீர்மானத்திற்கு முரணானதாகும்.

வெளிப்படைத் தன்மை குறைந்த நிலைமையானது, அரசியலின் சமூக பொருளாதார விளிம்புகளில் இருக்கின்றவர்களின் உரிமைகள் மற்றும் நலன்கள் தொடர்பில் பாதகமான, எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் ஏறக்குறைய நிச்சயமானது. ஆதலால், அரசியலமைப்புப் பேரவையையும் அதன் நெறி ஆளுகைக்குழுவையும் அரசியலமைப்பு சீர்திருத்த செயன்முறையில் முழுமையான அளவிலான வெளிப்படைத்தன்மை இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம். இது, பொதுமக்கள் கலந்துரையாடலின் அனைத்துவிதமான சமர்ப்பணங்களையும், அறிக்கைகளையும், உத்தியோகபூர்வ ஆவணங்களையும் பொதுமக்களுடன் பகிர்ந்துகொள்வதனையும், அரசிலமைப்பு வரைபு தொடர்பில் அர்த்தபுஷ்டியான நுணுக்காய்வினையும் கலந்துரையாடல்களையும் மேற்கொள்வதற்கான போதிய கால அவகாசத்தினை வழங்குவதையும் உள்ளடக்கும்.

நாடாளாவிய ரீதியில், பெண்கள், சிறுபான்மையினர், விவசாயிகள், மீனவர், தொழிலாளர், விசேட தேவையுடைய நபர்கள், சிறுபான்மையினராக உள்ள பாலியல் தொழில் செய்பவர்கள் மற்றும் இயற்கை சூழல் ஆகியவற்றின் உரிமைகளை பாதுகாக்க பணியாற்றும் அமைப்புக்கள், வலையமைப்புக்கள், இயக்கங்கள். உள்ளடங்கலாக 99 நிறுவனங்கள் (செப்டெம்பர் 9 2016 வரை) ஆமோதித்து கையெழுத்திட்டுள்ளன. இதனைத் தவிர கல்வியாளர்கள், புலமையாளர்கள், சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், சமூக செயல்வாதிகள், எழுத்தாளர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள் மற்றும் பல்வேறு பின்னணிகளைக் கொண்ட தொழில்வல்லுனர்கள் போன்ற அதிக எணணிக்கையான தனிநபர்களினாலும் ஆமோதித்து கையெழுத்திடப்பட்டுள்ளது.

நிறுவனங்கள்

  1. மட்டக்களப்பு மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
  2. சூழல் நீதி தொடர்பான நிலையம்
  3. சமூக மற்றும் மத்திய நிலையம்
  4. பெண்கள் ஆய்வு நிலையம்
  5. இலங்கை ஆசிரியர் சங்கம்
  6. இலங்கை தொழிற்சங்க சம்மேளனம்
  7. இலங்கை தொழிலாளர் சிவப்பு கொடி சங்கம்
  8. மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் (அம்பாறை)
  9. உள்நாட்டு தொழிலாளர் சங்கம்
  10. சூழல் பாதுகாப்பு நிதியம்
  11. ஈக்வல் க்ரவுண்ட்
  12. FIAN ஸ்ரீலங்கா
  13. எதிர்காலம் நம் கையில் அபிவிருத்தி நிலையம் – பதுளை
  14. ப்ரண்ட்ஸ் ஒப் அர்த் – ஸ்ரீலங்கா
  15. யாழ்ப்பாண மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
  16. களுத்துறை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
  17. கிளிநொச்சி மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
  18. சட்டம் மற்றும் நம்பிக்கை பொறுப்பு நிதியம்
  19. மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
  20. மன்னார் பெண்கள் அபிவிருத்தி சம்மேளனம்
  21. மிரிதிய இயக்கம் – பொலன்னறுவை
  22. மோட்டிவேசன் – ஸ்ரீலங்கா
  23. காணி மற்றும் விவசாய மீள்சீர்திருத்த இயக்கம்
  24. ஜனநாயக உரிமைகளினை பாதுகாக்கும் இயக்கம்
  25. நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
  26. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
  27. நீர்கொழும்பு களப்பு மீனவ மக்கள் இயக்கம் – நீர்கொழும்பு
  28. சமாதானம் மற்றும் பேண்தகு அபிவிருத்திக்கான மக்கள் கலந்துரையாடல்
  29. சமூக அபிலாசை காணி உரிமை வலைப்பின்னல்
  30. சமூக ஒத்துழைப்பு இயக்கம் – பொல்பித்திகம
  31. சமூக சக்தி அபிவிருத்தி நிறுவனம் – கருவலகஸ்வௌ
  32. பெண்கள் பொருளாதார சமூக மற்றும் கலாச்சார உரிமை நிகழ்ச்சித்திட்டம்
  33. புத்தள மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம்
  34. சிவப்பு கொடி பெண்கள் இயக்கம்
  35. கிராமிய தொழிலாளர் நிறுவனம் – உரும்பிராய்
  36. சமாதானம் – கண்டி
  37. சவித்ரி
  38. தென் மீனவ அமைப்பு – காலி
  39. தென் மீனவ அமைப்பு – மாத்தறை
  40. இலங்கை சுகாதார ஒன்றிணைப்பு
  41. ஸ்ரீ விமுக்தி மீனவ பெண்கள் அமைப்பு – நீர்கொழும்பு
  42. சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையம் – மட்டக்களப்பு
  43. திருகோணமலை மாவட்ட மீனவ ஒத்துழைப்பு அமைப்பு
  44. ஊவா சமூக அபிவிருத்தி நிலையம்
  45. பெண்கள் செயற்பாட்டு வலைப்பின்னல்
  46. இடர் முகாமைத்துவம் தொடர்பான பெண்கள் கூட்டமைப்பு – மட்டக்களப்பு
  47. பெண்கள் மற்றும் ஊடக ஒருங்கிணைப்பு
  48. வர்த்தக மற்றும் கைத்தொழில் தொழிலாளர் சங்கம்
  49. தொழிலாளர்களுக்கான ஒன்றிய சம்மேளனம்
  50. தொழிற்சங்க ஆய்வு மற்றும் கல்விக்கான தேசிய சங்கம்

(NATURE)

  1. மக்கள் விழிப்புணர்வு மத்திய நிலையம் – நீர்கொழும்பு
  2. ஒன்றினைந்த பொது தொழிலாளர் சங்கம்
  3. ஸ்ரமாபிமானி மையம் – நீர்கொழும்பு
  4. பெண்கள் அபிவிருத்தி நிலையம் – கண்டி
  5. டயக்கோனியா
  6. ஸ்ரமாபிமானி மையம் (கொழும்பு)
  7. ஊவா கிராமிய அபிவிருத்தி மையம் – மொனராகலை
  8. சிரிலிய பெண்கள் விவசாய நிறுவனம் – மகியங்கனை
  9. ஊவா பரணகம சுவசக்தி நிறுவனம் – பதுளை
  10. பல்லுயிர் ஆய்வு மற்றும் தகவல் பயிற்சி நிலையம் – பதுளை
  11. ஊவா வெல்லஸ்ஸ பெண்கள் நிறுவனம் – பதுளை
  12. மலையக சமூக அபிவிருத்தி மன்றம் – பதுளை
  13. சுவசக்தி அபிவிருத்தி மையம் – மஹியங்கணைய
  14. மலையக பெண்கள் மையம் – கண்டி
  15. இசுறு வாழ்க்கை உதய மையம் – நுவரெலியா
  16. மலையக சூழலியல் அபிவிருத்தி மையம்
  17. விஷ்வசக்தி சணச நிறுவனம் – நுவரெலியா
  18. மலையக சமூக அபிவிருத்தி நிறுவனம்
  19. க்ராஸ்ரூட்ஸ் பயிற்சி நிறுவனம் – கேகாலை
  20. திஸ்ஸ ஜய சிறுவர் நலன்புரி மையம் – கண்டி
  21. கிராமிய சுயசக்தி உதவிகரம் நிறுவனம் – காலி
  22. பஹதரட சமூக நிறுவன மன்றம் – மாத்தறை
  23. கிராமிய பெண்கள் முன்னணி – காலி
  24. திகிலி ஐக்கிய விவசாய நிறுவனம் – மாத்தறை
  25. எங்கள் சக்தி பெண்கள் நிறுவனம் – பொலன்னறுவை
  26. மனித அபிவிருத்தி மையம் – அநுராதபுரம்
  27. நிக்கசவ சமூக நிறுவனம் – அநுராதபுரம்
  28. முற்போக்கு விவசாய மன்றம் – பொலன்னறுவை
  29. உள்நாட்டு விதைகள் மற்றும் சூழலியல் விவசாய நிறுவனம் – அநுராதபுரம்
  30. ஐக்கிய விவசாய கூட்டமைப்பு
  31. ஜனவிஜய சூழலியல் விவசாய மையம் – இரத்தினபுரி
  32. ஒன்றிணைந்த சமூக அபிவிருத்தி பெண்கள் மகா சங்கம் – இரத்தினபுரி
  33. ஜனோத்சவ அபிவிருத்தி மையம் – இரத்தினபுரி
  34. சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்தி தகவல் நிலையம் – இரத்தினபுரி
  35. தேவசரண அபிவிருத்தி நிலையம் – குருணாகல்
  36. விவசாய தகவல்கள் நிலையம் – குருணாகல்
  37. மனித உரிமைகள் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிலையம் – குருணாகல்
  38. பெண்கள் வள மத்திய நிலையம் – குருணாகல்
  39. சமூக விழிப்புணர்விற்கான மக்கள் இயக்கம் – வவுனியா
  40. பெண்கள் கிராமிய அபிவிருத்தி சங்கம் – அம்பாறை
  41. அம்பாறை மாவட்ட ஆரோக்கிய விவசாய சங்கம்
  42. சுவாமி நடராஜா நந்தா ஜீ புனர்வாழ்வு நிலையம் – மட்டக்களப்பு
  43. கலைவானி விவசாய நிறுவனம் – மட்டக்களப்பு
  44. செனரத்கம சூழலியல் விவசாய நிறுவனம்
  45. தெஹேன பங்குப்பற்றல் மையம் – கண்டி
  46. சிறு விவசாய ஆரோக்கிய தயாரிப்பு மற்றும் ஒன்று சேர்க்கும் சங்கம் – கண்டி
  47. பஹல ஊவா சமூக அபிவிருத்தி நிறுவனம் – மொனராகலை
  48. பஸ்ஸர பிரஜைகள் மன்றம் – பதுளை
  49. ஒக்ஸ்பாம்

தனி நபர்கள்

  1. அகிலன் கதிர்காமர்
  2. அஜானி கசிநாதர்
  3. ஆனந்த கலப்பத்தி
  4. அனுராதா ராஜரத்னம்
  5. அதுல சமரகோன்
  6. அதுல குமார
  7. பாலச்சந்திரன் கௌதமன்
  8. பாலசிங்கம் ஸ்கந்தகுமார்
  9. பிசோப் டுலிப் டீ சிகேரா
  10. புத்திமா பத்மசிறி
  11. டியான் உயங்கொட
  12. சந்திரா ஜயரத்ன
  13. தனுஷிகா ராஜரத்னம்
  14. திலீப வித்தாரன
  15. தினேசா சமரரத்ன
  16. இலங்கேஸ்வர் அருணாசலம்
  17. எர்மிசா டீகல்
  18. காமினி குலதுங்க
  19. ஹலிக் அஸீஸ்
  20. ஹான்ஸ் பிலிமோர்யா
  21. கலாநிதி ஹரினி அமரசூரிய
  22. ஹர்ஷன ரம்புக்வெல்ல
  23. ஹர்மன் குமார
  24. ஹில்மி அகமட்
  25. பேராசியரியர் ஜயதேவ உயங்கொட
  26. ஜெயசாந்தினி வின்ப்ரட்
  27. கல்யானி சுந்தரலிங்கம்
  28. கர்த்தியாயினி சத்தியசீலன்
  29. கயாத்ரி தங்கராஜா
  30. நிஷாந்த பெட்ரிக்ஸ்
  31. குமுதுனி சமுவெல்ஸ்
  32. கலாநிதி குமுது குசும் குமார
  33. லக்‌ஷ்மன் குணசேக்கர
  34. லியனகே அமரகீர்த்தி
  35. மாதவ மீகஸ்கும்புர
  36. மஹாலக்‌ஷ்மி கிருஷாந்தன்
  37. மஹிந்த ஹத்தக
  38. மிரிசா டீ சில்வா
  39. மிராக் ரஹீம்
  40. மொஹமட் முசம்மில் காதர்
  41. கலாநிதி முத்துகிருஷ்ணா சர்வநாதன்
  42. நலினி ரத்னராஜா
  43. கலாநிதி நிமல்கா ப்ரணாந்து
  44. கலாநிதி ரஞ்சித் நிர்மல் ரஞ்சித் தேவசிறி
  45. பத்மினி வீரசூரிய
  46. பவித்ரா கைலாசபதி
  47. கலாநிதி பிரதீப் பீரிஸ்
  48. பிரதாப் ஜயசிங்க
  49. ப்ரீமால் ப்ரணாந்து
  50. ராஜலெச்சுமி கந்தையா
  51. கலாநிதி ராஜன் ஹூல்
  52. பேராசிரியர் றொஹான் ப்ரணாந்து
  53. ருகீ ப்ரணாந்து
  54. எஸ். அரிவள்சாஹன்
  55. எஸ்.சீ.சீ. இலங்கோவன்
  56. சஞ்சீவ மத்ரிபால
  57. சரலா எம்மானுவெல்
  58. கலாநிதி சேபாலி கோட்டேகொட
  59. சதீஸ்வரி யோகதாஸ்
  60. ஷெனாலி டீ சில்வா
  61. ஸ்ரீன் அப்துல் சறூர்
  62. சில்மா அகமட்
  63. கலாநிதி சித்ரலேகா மவுனகுரு
  64. ஸ்டெலா பிலிப்ஸ்
  65. பேராசிரியர் சுமதி சிவமோகன்
  66. டீ. எம். பிரேமவர்தண
  67. டெஹானி ஆரியரத்ன
  68. தியானி ருவன்பத்திரண
  69. உபாலி குமாரப்பெரும
  70. கலாநிதி வகீசா குணசேக்கர
  71. வேலாயுதன் ஜெயசித்ரா
  72. வேர்னுசி புவேந்திரன்
  73. வயோலா பெரேரா
  74. வசந்தகலா பிரதீபன்
  75. சஹபியா அதமாலி
  76. சயினாப் இப்ராஹிம்
  77. தியாக சந்தன குமார
  78. சூலனி கொடிக்கார
  79. தினுஷிகா திசாநாயக்க
  80. தியாகி ருவன்பத்திரண
  81. கலாநிதி தினேஷ் கருணாநாயக்க
  82. ஹரீன் ஹெட்டியாரச்சி
  83. ஜயந்த தனபால