இனவாதத்துக்கு எதிராக நேற்று மாலை கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் இடம்பெற்ற அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ‘சிங்க லே’ என்று கூறிக்கொண்ட குண்டர் குழுவொன்று புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தியது.

“எங்கள் எல்லோருக்கும் ஒரே இரத்தம்”, “வித்தியாசங்கள் இருப்பினும் நாம் எல்லோரும் சமம்” என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட அமைதி ஆர்ப்பாட்டத்தில் புகுந்த பிக்குமார் தலைமையிலான குண்டர் குழு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்த பதாதைகளை கிழிந்து வீசியது.

அத்துடன், சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தாத கொடியுடன் வந்திருந்த குண்டர் குழுவை தடுப்பதற்கு பொலிஸார் முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை.

2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அராஜகக் காலம் மீண்டும் வந்துவிட்டதோ என்று எண்ணுவதாக மனித உரிமை செயற்பாட்டாளரான சம்பத் சமரகோன் தெரிவிக்கிறார்.

கிழித்தெறியப்பட்ட பதாதைகள் 

(நன்றி: சம்பத் சமரகோன்)

IMAG5010

IMG-20160815-WA0019 IMG-20160815-WA0030 IMG-20160815-WA0032 IMG-20160815-WA0034 IMG-20160815-WA0035