படம் | zimbio

மலைகளும் தன்னிலை உயர்த்தி
யாரோ வருகையை
எதிர்பார்த்திட?
 
பனிமலையில் நனைந்த
தேயிலைச் செடிகளும்
யாரோ வருகையை எதிர்ப்பார்த்திட?
 
தேயிலை பறிக்கும்
தேவதைகள் அலங்காரத்துடன்
எதிர்ப்பார்த்திட?
 
புதிதாய் கிடைத்த தலைகூடையும்
கை வளையலின் ஓசையும் – இன்னும்
அங்கு அழகு சேர்த்திட
 
குழந்தை தனமான
புன்னகை
முகமெங்கும் பரவிட
 
மின்னல் வேகமாய்
கண்கள்
அசைந்திட
எதிர்ப்பார்த்த அதிசயம்
எதிரே வந்திட
 
இளவரசர் பெயர் கொண்டு
முன்னே வந்திட
 
செல்வந்தர் தம்
செழிப்பை
காட்டிட
 
உதவிய கரங்களோ
ஓரமாய்
நின்றிட
 
இப்படி இருந்தால்
எப்படி என்று
இதயம் நினைத்திட
 
எழில் மலையகம்
மௌனம் காக்கிறது இதுவும்
கானல் நீர் என்று
 
அனைவரும் சென்ற பின்
திரும்பி பார்த்திட
தனியாய் நிற்கிறது
மலையகம் – எதுவும் நிரந்தரம் இல்லையென்று…
 
பலாந்தோட்டை ஜெயந்தி