5 ஜனவரி 2015, கொழும்பு, இலங்கை: வாக்களிப்பு என்பது முக்கியமான ஒரு குடியுரிமை பொறுப்பு என்பதுடன், நாம் அனைவரும் எமது இறையாண்மையை பயன்படுத்தும், அனுபவிக்கும் ஒரு வழியுமாகும். ஜனாதிபதி பதவிக்கு அளவற்ற அதிகாரங்கள் இருப்பதால் ஜனாதிபதி தேர்தலொன்றின் போது மேற்படி பொறுப்பானது குறிப்பாக முக்கியமானதொன்றாகிறது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் வாக்களிப்பதற்கான உரிமையை பயன்படுத்த மக்களை ஊக்குவிப்பதற்காக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) #IVotedSL என்ற மும்மொழி பிரசாரமொன்றை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

வாக்களிப்பதற்கான உரிமையை ஜனவரி 8ஆம் திகதி பயன்படுத்துவோம் என்று பொது உறுதிமொழியொன்றை எடுத்துக்கொள்ளுமாறு வாக்காளர்களை வலியுறுத்துவதாக இந்த பிரசாரம் அமைந்துள்ளது. Facebook, Twitter, Google+ அல்லது வேறு ஏதேனும் சமூக ஊடக அரங்கில் தமது profile/account picture மற்றும் cover/banner page ஐ மாற்றுவதன் மூலம் ஒருவர் இந்த உறுதிமொழியை தெரிவிக்க முடியும். தேர்தல் தினத்தன்று இந்த உறுதிமொழியை எடுப்பவர்கள் அழியாத மையினால் அடையாளமிடப்பட்ட தமது இடக்கையின் சுட்டுவிரலின் படமொன்றை ஹேஸ்டேக் #IVotedSL ஐ பயன்படுத்தி சமூக ஊடகமொன்றினூடாக பகிர முடியும்.

நாங்களும் பேனர்களை உருவாக்கியுள்ளோம். ஊடகங்களின் ஆசிரியர்கள் மற்றும் ப்ளொக் பதிவாளர்கள் அவர்களது இணையத்தளங்களிலோ, அச்சிலோ அல்லது தொலைக்காட்சி வழியாகவோ பேனர்களை தெரிவு செய்ய முடியும்.

அனைத்து படங்களும் பதிப்புரிமையற்றது என்பதுடன், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய வடிவங்களில் உள்ளது.

http://bit.ly/ivotedsl இருந்து அவை அனைத்தையும் பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வாரம் முழுவதும் #IVotedSL பிரசாரமானது வாக்களிப்பின் முக்கியத்துவம் பற்றிய இன்போகிராபிக்ஸை பரப்பும் என்பதுடன், ஹேஸ்டேக் #IVotedSL ஐ பயன்படுத்தி வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை சித்தரிக்கும் படங்கள், நினைவுக் குறிப்புகள் (memes) மற்றும் ஏனைய ஊடக உள்ளடக்கங்களை பகிர்வதற்கும் பொது மக்களை ஊக்குவிக்கும்.

இது தொடர்பில் எமது முதலாவது இன்போகிராபிக்ஸ் பின்வருமாறு:

Voter ed 1_Final

தேர்தல் வன்முறைகளைக் காண்காணிப்பதற்கான நிலையமானது மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், சுதந்திர ஊடக இயக்கம் மற்றும் அரசியல் வன்முறைகளுக்கு எதிரான கூட்டு ஆகியவற்றினால் வன்முறைகள் சம்பந்தமான தேர்தல் நிகழ்வுகளை கண்காணிப்பதற்கென 1997ஆம் ஆண்டு உருவாக்கப் பட்ட சுயாதீனமானதும் கட்சி சார்பற்றதுமான அமைப்பாகும். தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையமானது தற்போது மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினதும் இன்போர்ம் மனித உரிமைகள் ஆவணப்படுத்தல் நிலையத்தினதும் (INFORM Human Rights Documentation Centre) உருவாக்கமாகும்.

தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையமானது எந்தவொரு வேட்பாளரையோ அல்லது அரசியல் கட்சியையோ ஆதரிக்கவோ அல்லது ஆமோதிக்கவோ இல்லை. #IVotedSL என்பது தங்களது வாக்குகளை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பில் மக்கள் மத்தியில் ஆர்வத்தை, விழிப்புணர்வை ஏற்படுத்துவதையே அர்த்தப்படுத்துகிறது. அது, குறித்த எந்தவொரு வேட்பாளரையும் ஊக்குவிப்பதையோ அல்லது விமர்சிப்பதையோ இலக்காகக் கொண்டதல்ல.