பட மூலம், Techsnaq
(கடந்த ஏப்ரல் 10ஆம் திகதி மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் உட்பட பல அமைப்புக்கள் மூலமாக பேஸ்புக் நிறுவனத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டிருந்தோம். அந்தக் கடிதத்திற்கு பேஸ்புக் நிறுவனத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மறுமொழியையும் கிரவுண்ட்விவ்ஸ் அது தொடர்பில் முன்வைத்த கருத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினையும் இவ்வண்ணம் பிரசுரிக்கிறோம்.)
மார்க் சக்கர்பர்க் அவர்களுக்கு எமது திறந்த மடல் அனுப்பி வைக்கப்பட்டு ஒரு நாளைக்கு பிறகு இந்தியாவின் புதுடில்லியில் இருக்கின்ற பேஸ்புக் பிரதிநிதிகள் அவர் சார்பாக மறுமொழியினை அளித்துள்ளனர். அவர்கள் எமக்கு அனுப்பி வைத்த மின்னஞ்சல் கடிதமானது முழுமையாக இங்கு பிரசுரிக்கப்பட்டுள்ளது. எமது திறந்த மடலின் ஊடாக கவனம் செலுத்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் எண்ணத்துடன் பேஸ்புக் நிறுவனத்திற்கு பல வருடங்களாக கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும் நிறுவனத்தினால் எமக்கு அதிகாரபூர்வமாக பதில் வழங்கிய முதற் சந்தர்ப்பம் இதுவென்பதனை ஆரம்பத்திலேயே அறிவிப்பது பயன்மிக்கதாகும்.
“குரோத கருத்துக்களுக்கும், வன்முறையைத் தூண்டுகின்றமைக்கும்…. சமூக குடியுரிமைப் (Community Standards) பண்புகளை மீறுகின்ற வேறுவகையான உள்ளடக்கங்களுக்கும்… எந்த வகையிலும் இடம் வழங்கப்படமாட்டாது” என பேஸ்புக் நிறுவனம் ஏற்றுக் கொண்டமை தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். உள்ளடக்கங்களை மீளாய்வு செய்கின்ற சிங்கள மொழி பேசுகின்றவர்களது எண்ணிக்கையினை அதிகரிப்பது தொடர்பிலும் அரசிற்கு மேலதிகமாக சிவில் சமூகத்துடனும் தொடர்புபடுவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. நீண்ட காலம் தாழ்த்தியேனும் இடம்பெறுகின்ற இவ்வனைத்தும் அன்புடன் ஏற்றுக்கொள்கின்ற முன்னேற்றங்கள் மற்றும் உறுதிமொழிகள் என்றே கூறவேண்டும்.
எவ்வாறாயினும், நாங்கள் தற்போது அறிந்துவைத்துள்ள அல்லது பொது வெளியில் உள்ள விடயங்கள் மாத்திரமே பேஸ்புக் நிறுவனத்தின் மறுமொழியில் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. மறுமொழியில் – நாடு, மொழி மற்றும் நாம் விளக்கமாக தெளிவுபடுத்திய பிரச்சினைக்குரிய சவால்களை எதிர்கொள்வது குறித்த வேலைத்திட்டம் இன்மை மற்றும் நடவடிக்கைகள் எடுக்காமை தொடர்பாக ஏமாற்றமடைந்துள்ளோம். மேலும், சிவில் சமூக அமைப்புக்கள் கையொப்பமிட்ட எமது திறந்த மடலில் குறிப்பிடப்பட்ட பெண்களுக்கெதிரான பாலியல் வன்புணர்வினை சாதாரண ஒரு விடயமாக கருதுகின்ற மற்றும் பெண் பிள்ளைகளுக்கு, பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் தொடர்பில் மன்னிப்பு வழங்கக் கூடியதான உள்ளடக்கங்களும் உள்ளடங்களாக பால்நிலை சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பேஸ்புக் நிறுவனமானது பாரிய கவனக் குறைபாட்டுடன் செயற்படுவது தொடர்பில் மிகத் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளோம். உள்ளடக்கங்களை மீளாய்வு செய்பவர்களது எண்ணிக்கை, அவர்களது நிலைப்பாடு மற்றும் பால்நிலை கட்டமைப்பு ஆகியவற்றினை சரியாகவும் தெளிவாகவும் குறிப்பிடுமாறு நாம் வேண்டியிருந்தோம். விசேடமாக வன்முறை அதிகரிக்கின்ற காலப்பகுதிகளில் கையாள்பவர்களால் மேற்கொள்ளப்படுகின்ற முறைப்பாடுகளை காலத்திற்கேற்ற வகையிலும் பயன்மிக்கதுமான வகையிலும் தீர்ப்பது தொடர்பில் தெளிவான வழிகாட்டலொன்றையும் முன்வைக்குமாறு நாம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
ஆயினும், பேஸ்புக் நிறுவனமானது அதற்கான தெளிவுபடுத்தலையோ உறுதிமொழியையோ வழங்கவில்லை.
பேஸ்புக் நிறுவனம், “சில முறைமைகளிலான உள்ளடக்கங்களை மிக வேகமாகவும் மிகச் சரியாகவும்” அடையாளம் காண்பதற்கு உதவியாக “செயற்கை ரீதியான புலமைக் கருவிகளை” பயன்படுத்தவதற்கு நடவடிக்கை எடுத்தவண்ணம் உள்ளதென்பதனை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். இது மியன்மாரின் நிலைமை தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு சமமானதாகும். நாம் பெரிதும் சந்தேகத்துடனேயே இருக்கின்றோம்.
எமது அனுபவங்களுடாக நாம் சுட்டிக்காட்டுவது, துஷ்பிரயோகம் அல்லது வன்முறையை தூண்டிவிடுகின்ற சொற்றொகுதியொன்றினை அழுத்தம் ஏற்படாத வகையிலான புகைப்படமொன்றின் மீது பதித்து இடப்படுகின்ற பதிவுகள் தொடர்பில் முறைப்பாடு செய்த விடத்து பேஸ்புக் நிறுவனமானது பொதுவாக அந்த உள்ளடக்கங்கள் சமூக குடியுரிமைப் பண்புகளை மீறவில்லை எனத் தெரிவித்து பதிலளிக்காமல் இருக்கின்றது. செயற்கை ரீதியான புலமை மற்றும் கருவிகளை பயன்படுத்தி கண்காணிப்பினை மேற்கொள்கின்ற நீண்டகால தேவைப்பாட்டினை கவனத்திற் கொள்ளாது இருக்காத போதிலும் நிறுவனமானது தற்போது நிறைவேற்ற வேண்டிய பணியாவது உள்ளடக்கங்களை மீளாய்வு செய்வதற்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழித் திறன்களைக் கொண்ட நபர்களை ஈடுபடுத்துவது தொடர்பில் இதனைவிட அதிகமான கவனம் செலுத்துவதேயாகும்.
மார்ச் மாதத்தில் குரோதத்தையும் வன்முறையையும் தூண்டிவிடும் உள்ளடக்கங்களை (இது எமது திறந்த மடலில் குறிப்பிடப்பட்ட விசேடமாக பயங்கரமானதும் பலரால் முறைப்பாடு செய்யப்பட்டதுமான ஒரு உதாரணமாகும்) பரப்புவதற்கும் அந்த உள்ளடக்கத்துடன் தொடர்புபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியமை தொடர்பில் தமக்கெதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பேஸ்புக் நிறுவனமானது தொடர்ந்து கவனத்திற் கொள்ளாமல் உள்ளது. மீண்டும் அவ்வாறான நிலைமை ஏற்படாத வண்ணம் தீர்வுகளைக் காண்பதற்குப் பதிலாக தாம் தவறிழைத்த விதம் அல்லது தவறிழைத்த சந்தர்ப்பத்தினை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ளாத அல்லது ஏற்றுக்கொள்ள மறுக்கின்ற நிறுவனமொன்றினை நம்புமாறு அவர்கள் எம்மிடம் வேண்டி நிற்கின்றனர். இதுவொரு இழிவான யோசனை என்பதனை பேஸ்புக் நிறுவனம் கூட ஏற்றுக் கொள்ளும் என நாம் கருதுகின்றோம்.
பேஸ்புக் நிறுவனம் இலங்கைக்கு உரியதான மற்றும் முக்கியமானதாகக் கருதப்படுகின்ற உறுதிமொழியொன்றினை மியன்மாரின் தரப்பினருக்கும் வழங்கியிருப்பதனை அவர்களுடனான தகவல் பரிமாற்றத்தின் போது அறிந்துகொண்ட காரணத்தினால் நாம் அது தொடர்பில் கவனம் செலுத்தினோம். பேஸ்புக் நிறுவனம் இலங்கையில் இருக்கின்ற எமக்கு அனுப்பி வைத்துள்ள அதிகாரபூர்வ பதிலில் அந்த மாற்றுவழிகளை முன்வைக்காத காரணத்தினால் நாம் பெரிதும் வியப்பிற்கு ஆளாகியதாக குறிப்பிடுகின்ற அதேவேளை நிறுவனமானது அந்தந்த சந்தர்ப்பங்களுக்கு பொருந்துவதான, விட்டு விட்டு அல்லது முழுமையாகவே இரகசியமான முறையில், அந்தந்த நாட்டுக்குரியதாக விசேட தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்குப் பதிலாக நாடு முழுவதும் குரோதத்தை தூண்டிவிடும் உள்ளடக்கங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டிய சவாலுக்கு முகம் கொடுப்பதற்காக கையாளக்கூடிய முழுமையான தீர்வுகள் யாவை என ஆராய வேண்டுமென நாம் திடமான வகையில் பரிந்துரை செய்கின்றோம்.
விசேடமாக பேஸ்புக் நிறுவனமானது மியன்மாரில் செய்வதாக உறுதியளித்துள்ள செயற்பாட்டை இலங்கையிலும் மேற்கொள்வதாக உறுதியளிப்பதனை காண்பதற்கு நாம் பெரு விருப்புடன் காத்திருக்கின்றோம்.
- குரோத கருத்துக்கள் மற்றும் மீண்டும் மீண்டும் தவறிழைப்போரை நடைமுறையிலிருந்து அகற்றுதல்
- தமது மீளாய்வு பொறிமுறைகளையும் பதிலிறுத்தல் தன்மையையும் முன்னேற்றுதல்
- வன்முறை அல்லது குரோத உள்ளடக்கங்கள் தொடர்பில் மிக இலகுவான வகையிலும் மிக சரளமான வகையிலும் முறைப்பாடு செய்யக்கூடிய வகையில் பேஸ்புக் மெசஞ்சர் போன்ற பேஸ்புக் மென்பொருட்களில் காணப்படுகின்ற முறைப்பாடு செய்யக்கூடிய பொறிமுறைகளை முன்னேற்றுதல்
- பேஸ்புக் சேவைகளை பயன்பாட்டில் கொள்கின்ற இலங்கையின் கையாள்பவர்களுக்கு இடையில் சமூக வழிகாட்டல்கள் தொடர்பிலான அறிவினை முன்னேற்றுவதற்காக அரச மற்றும் சிவில் சமூகத்துடன் இணைந்து செயற்படுதல்
- அனுபவமுள்ள நபர்கள் மற்றும் நிறுவனங்களைக் கொண்டு பரிசீலித்து உள்ளடக்கம் தொடர்பில் விரைவான கவனம் செலுத்தக் கூடிய வகையிலான நம்பிக்கை மிகுந்த முறைப்பாட்டு வலையமைப்பொன்றை உருவாக்குதல்
நாம் அழுத்தம் கொடுப்பதாகவோ, பொறுமை அற்றதாகவோ, ஒழுக்கம் அற்றதாகவோ எமது ஊக்கத்தினை இல்லாமல் செய்கின்ற மற்றும் நாம் முகம் கொடுத்துள்ள சவால்களுக்கு தீர்வுகளை முன்வைப்பதனை இலக்காகக் கொண்ட யோசனைகள், உதவிகள் மற்றும் உறுதிமொழிகளாக நிறுவனத்திற்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் தோன்றுகின்ற விடயத்தை அவசியமற்றதாக கருதுகின்றதாகவோ பேஸ்புக் நிறுவனத்தின் தரப்பினருக்கு உணரக்கூடியதாக இருக்கும்.
இதற்காக நாம் வழங்கக்கூடிய பதிலோ மிகவும் சரளமானது. எமது திறந்த மடலில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் பல வருடங்களாக இந்தப் பிரச்சினை தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள போதிலும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. நாம் தொடர்ந்தும் தெளிவில்லாத உறுதிமொழிகள் தொடர்பில் நம்பிக்கை வைக்க முடியாது. சாதாரண பொதுமக்கள் தொடர்புகள் அல்லது ஊடக அறிக்கைகள் தொடர்பிலும் எமக்கு நம்பிக்கை வைக்க முடியாது. நாம் அவற்றால் ஏமாற்றமடையமாட்டோம். நாம் வேண்டுவது தெரிவிக்கப்படுகின்ற அபிப்பிராயங்கள் மற்றும் அது தொடர்பில் வேண்டுகின்ற தொழிநுட்ப மற்றும் மனித வள முதலீடுகள் தொடர்பிலான தெளிவு, கவனம் மற்றும் வெளிப்படை தரவுகள், முறைப்பாடு செய்வதற்கு தேசிய மொழிகளிலான தெளிவான வழிகாட்டல்களை முன்வைத்தல், குறிப்பிட்ட கால வரையறைக்குள் மறுமொழி அளித்தல் மற்றும் கவனத்தைச் செலுத்தி காணப்படுகின்ற சவால்களுக்கு முகம் கொடுப்பதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகளின் வெற்றியினை சுயாதீனமாக உறுதிப்படுத்திக் கொள்வதற்காகப் பயன்படுத்தக் கூடிய பிரதான செயற்பாட்டு முன்னேற்ற குறிகாட்டிகள் ஆகும்.
இதனை விடக் குறைந்த மட்டத்திலான எந்தவொரு நடவடிக்கையாலும் இடம்பெறுவது யாதெனில் ஆளுகைக்கு அல்லது பொதுமக்கள் தொடர்புகளுக்கு தீங்காக அமைகின்ற நடவடிக்கை மாத்திரமேயாகும்.
எமது எதிர்பார்ப்பு அற்றுப்போகின்ற அவதானம் காணப்பட்ட போதிலும் எமது பிரதான கலந்துரையாடலில் ஜனநாயக கட்டமைப்பு மற்றும் தேர்தல் செயற்பாட்டினை முறைப்படுத்துகின்ற போது மிக முக்கியமான கடமையை நிறைவேற்றுகின்றதாக ஏற்றுக் கொள்கின்ற மற்றும் உண்மையிலேயே அந்தக் கடமைகள் நேர் சிந்தனை கொண்டவையாக வலுப்படுத்தப்படுவதற்கு முயற்சிக்கின்ற போலியற்றதுமான ஓர் கலந்துரையாடலுக்கு பேஸ்புக் நிறுவனத்துடன் இணக்கம் காணமுடியுமென நாம் மேலும் எதிர்பார்ப்புக்களை வைத்துள்ளோம்.
பேஸ்புக் நிறுவனத்தினால் கிடைக்கப் பெற்ற பதில்
2018 ஏப்ரல் 11
அன்பின் ஹத்தொடுவ அவர்களுக்கு,
தங்களது மடலுக்கு நன்றிகள். தற்போது மார்க் வாஷிங்டன் நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்ற போதிலும் தாங்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பிலான விளக்கம் அவரது கரங்களுக்கு கிடைத்துள்ள காரணத்தினால் கூடுதலான அளவு விரைவாக மறுமொழியினை தெரிவிக்குமாறு என்னிடம் வேண்டிக் கொண்டார்.
பேஸ்புக் நிறுவனத்தின் இலங்கையை உள்ளடக்கும் வகையிலான பொதுமக்கள் கொள்கைகள் பற்றிய பணிப்பாளராக கடமையாற்றும் நான் விசேடமாக சிங்கள உள்ளடக்கங்கள் தொடர்பிலான எமது சமூக குடியுரிமைகளை நடைமுறைப்படுத்துவதனை முன்னேற்றுவதற்காக தங்களிடம் காணப்படுகின்ற அபிலாஷைகள் தொடர்பில் நான் முற்று முழுதான இணக்கப்பாட்டினை தெரிவிக்கிறேன். குரோத கருத்துக்கள், வன்முறையைத் தூண்டிவிடுவதற்கு மற்றும் எமது சமூக குடியுரிமைகளை மீறுகின்றதுமான வேறு வகையிலான உள்ளடக்கங்களுக்கு பேஸ்புக் தளத்தில் எந்தவொரு சந்தர்ப்பமும் அளிக்கப்படமாட்டாது.
கடந்த மார்ச் மாதம் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின் அடிப்படையில் இலங்கையில் எமது தளமானது தவறான முறையில் பயன்படுத்தப்படுவதனைத் தடுப்பதற்காக உண்மையான செயற்பாட்டு நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு நாம் கடமைப்பட்டுள்ளமை தொடர்பாக நீங்கள் அறிவீர்கள். இருபத்து நான்கு மணித்தியாளங்களும் கண்காணிக்கக் கூடிய வகையில் நாங்கள் எமது சமூக செயற்பாட்டு குழுவினுள் இருக்கின்ற சிங்களம் பேசுகின்ற உள்ளடக்கங்களை மீளாய்வு செய்கின்றவர்களது எண்ணிக்கையினை அதிகரித்துக் கொண்டிருக்கின்ற அதேவேளை குரோத கருத்துக்களைத் தடுப்பதற்காக மற்றும் உள்நாட்டு நிலைமை தொடர்பில் எமது தெளிவினை அதிகரித்துக் கொள்வதற்காக இலங்கை அரசுடனும் தங்களைப் போன்ற சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளடங்களாக பல்வேறான பங்காளர் குழுக்களுடனும் தொடர்ச்சியாக தொடர்புகளைப் பேணி வருகின்றோம்.
நாம் இந்த சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் எமது உற்பத்தி மற்றும் தொழிநுட்பங்களைக் கையாள்வதற்குக் கடப்பட்டுள்ளோம். மார்ச் மாத இறுதியில் நாம் எமது சமூக குடியுரிமைப் பண்புகளை நினைவூட்டியதோடு அவை மீறப்படுகின்ற உள்ளடக்கங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட வேண்டிய விதத்தினையும் தெளிவுபடுத்தி இலங்கையின் பேஸ்புக் தளத்தில் இருக்கின்ற அனைத்து நபர்களதும் News Feed தளத்தினுள் முன்னுரிமையை வழங்கி செய்திகளை வெளிக்காட்டியிருந்தோம். நாம் சில வகையான உள்ளடக்கங்களை மிக விரைவானதாகவும் சரியானதாகவும் அடையாளம் கானும் பொருட்டு எமக்கு உதவியாக செயற்கை ரீதியான புலமைக் கருவிகளை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த வண்ணம் உள்ளோம்.
விரிவாகக் கூறுவதாயின், நாம் எமது தளத்தின் உண்மைத்தன்மை, மக்களது தரவுகளின் அந்தரங்கத்தன்மை மற்றும் பேஸ்புக் தளத்தினுள் இருக்கின்ற அனைவருக்கும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் தமது கருத்துக்களைத் தெரிவிப்பதற்குள்ள உரிமையை பாதுகாப்பதற்காகவும் எமக்கிருக்கின்ற பொறுப்பினை உச்ச அளவில் ஏற்றுக் கொள்கின்றோம். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக அண்மையில் நாம் வெளிப்படைத்தன்மை தொடர்பில் பல ஆரம்ப நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு Cambridge Analytica உடன் தமது தரவுகளை பறிமாறிக் கொண்டிருந்ததாக எண்ணக்கூடிய அனைவருக்கும் அறிவித்தல் அனுப்பியதனை ஒரு செயற்பாடாக குறிப்பிட முடியும். நாம் எமது உற்பத்திகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக எமது தரப்பினரை அன்றாடம் புதுப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற அதேவேளை இலங்கை மற்றும் ஏனைய நாடுகளில் Explore Feed தளத்தினைக் கையாண்டு பார்ப்பதனை நிறைவு செய்வதற்கு நாம் எடுத்த முடிவினை தெளிவுபடுத்தி அண்மையில் அனுப்பி வைக்கப்பட்ட News Feed FYI செய்தியும் அவ்வாறானதொன்றாகும்.
தங்களது மடலில் மிக விளக்கமாக குறிப்பிட்டுள்ள பாரதூரமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக நடவடிக்கை மேற்கொள்கையில் எதிர்காலத்தில் தங்களுடன் தொடர்ச்சியாகவும் ஒத்துழைப்புடனும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
தயவான வாழ்த்துக்களுடன்,
ஷிவ்நாத் துக்ரல்
பொதுமக்கள் கொள்கைகள் பணிப்பாளர்
இந்தியா மற்றும் தெற்காசியா