படங்கள் – தெசான் தென்னக்கோன்

கைகளை இடுப்பில் வைத்து அவர் கமராவிற்கு போஸ் கொடுக்கிறார், அவர் உறுதியானவராக காணப்படுகிறார். அவரது பார்வை தூரத்தில் பதிந்துள்ளது, அவரைப் பார்த்து அந்தக் குழுவில் உள்ளவர்கள் சத்தமிடுகிறார்கள், உற்சாகப்படுத்துகிறார்கள். அந்த சூழல் இனிமையானதாகவும் ஆதரவளிப்பதாகவும் இருக்கிறது. ஆனால், ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் அங்கு படமெடுக்கப்பட்ட பெண்களில் ஒருவர் தனது படங்களை இணையத்தில் வெளியிடும்போதெல்லாம் தனக்கு ஏற்படும் பதற்ற உணர்வு குறித்து விபரிக்கின்றார்.

“நான் செய்யும் அனைத்தையும் அனைவரும் பார்ப்பது போல உணர்கின்றேன், நான் அணியும் ஆடைகள் கூட கண்காணிக்கப்படுவதாக உணர்கின்றேன். இது ஒரு செய்தியை தெரிவிக்கின்றது என்கின்றார் தேஷானி தர்மதாச. இது எனது அச்சத்தை மேலும் அதிகரிக்கின்றது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்தக் குழுவைச் சேர்ந்த அனைவருக்கும் பொதுவான ஒரு விடயம் உள்ளது. அவர்கள் அனைவரும் இணையத்தில் (ஒன்லைனில்) இலக்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுடைய தோற்றம் குறித்த கடுமையான கருத்துக்கள் மூலமாக அவர்கள் இலக்குவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சமூக ஊடக வலைதளமான Microsoft Sway ஐக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள கட்டுரையை இங்கு கிளிக் செய்வதன் மூலமாகவும் கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாகவும் முழுமையாக வாசிக்கலாம்.

ஆசிரியர் குறிப்பு: கிரவுண்ட் விவ்ஸ் தளத்தில் “Building Resilience: Responding to Cyber-Violenceஎன்ற தலைப்பில் வௌியான கட்டுரையின் தமிழாக்கம்