இடம்பெயர்வு, மனித உரிமைகள், வறுமை, விவசாயம்

மிதிவெடி: அச்சத்திலிருந்து மீளாத ரகுவேந்தன்

“நேற்று வேலை கொஞ்சம் கஷ்டம், வேலி கட்டுவதுதான். அங்கும் இங்குமாக நடந்துகொண்டே இருக்கவேண்டுமல்லவா. அதனால், அதோ அங்கு தெரிகிறதே, என்னுடைய கால்தான் அது, வெடித்துவிட்டது. இந்தக் கால்… பரவாயில்லை… என்ன கொஞ்சம் வலிக்கிறது, அவ்வளவுதான்…” – உறுதியான, காலுக்கு இதமான, பொருத்தமான கால் ஒன்று…