“1958, 1977 மற்றும் 1983ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கலவரங்களின்போது பெரும்திரளான மலையக மக்கள் வடக்கு நோக்கி வந்தார்கள். அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை அல்லது வவுனியா, மன்னார், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற நகர்புறங்களிலும் எடுத்துக்கொள்ளப்படவில்லை. அப்போது யாழ்ப்பாணத்தில் ஏராளமான நிலம் இருந்தது. அந்த மக்களை யாழ்ப்பாணத்திற்கு அனுமதித்து பராமரிப்பதற்கான சூழல் இருக்கவில்லை என்று இப்போது கூறலாம். அப்படியல்ல, அந்த மாவட்டத்தில் அரச நிலம் ஏராளமாக இருந்தது, ஏனைய மாவட்டங்களிலும் இருந்தது. பதிலாக மலையக மக்கள் வன்னிப் பகுதியிலேயே தடுத்துநிறுத்தப்பட்டு அங்கிருந்த வளம் குறைந்த காட்டுப்பகுதியில் குடியேற்றப்பட்டார்கள்.”

ஜூலை கலவரம் இடம்பெற்று 35 வருடங்களாவதை முன்னிட்டு ‘மாற்றம்’ பல்வேறு துறைசார்ந்தவர்களை நேர்க்காணல் கண்டுவருகிறது. 1983ஆம் ஆண்டு கலவரத்தை அடுத்து உயிர்பாதுகாப்பு கருதி வடக்கு நோக்கி சென்ற மலையக மக்கள் கையாளப்பட்ட விதம் – புறக்கணிப்புகளுக்கு உள்ளான விதம் குறித்து பேசுகிறார் எழுத்தாளரும், கவிஞருமான சி. கருணாகரன்.

ஆசிரியர் குறிப்பு: கறுப்பு ஜூலை தொடர்பாக மாற்றம் வௌியிட்டுள்ள கட்டுரைகளைப் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.