படங்கள் மற்றம் கட்டுரை, AMALINI DE SAYRAH AND RAISA WICKREMATUNGE

இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியிலும் அதற்கு பின்னரும்  தமது செயற்பாடுகளுக்காக மனித உரிமை ஆர்வலர்கள் கடத்தப்பட்டுள்ளனர்,  தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், தாக்கப்பட்டுமுள்ளனர். தற்போதைய அரசாங்கத்தின் கீழும் கருத்து சுதந்திரத்தின் மீதான நெருக்கடி, ஆர்வலர்கள் மீதான கண்காணிப்பு, அச்சுறுத்தல், நேரடியான வன்முறைகள் என்பன கடந்த ஆண்டிலும் தொடர்ந்துள்ளது. அதற்கும் மேலதிகமாக பெண் ஆர்வலர்கள் மறைமுகமான அச்சுறுத்தல்களையும் தடைகளையும் எதிர்கொள்கின்றனர்.

வரலாற்று ரீதியாக போராட்டங்களில் பெண்கள் அதிகளவான பங்களிப்பினை வழங்கியிருக்கின்றனர். சுதந்திரத்துக்கு முன்னரான காலப்பகுதியில் இருந்து  ‘குலஞான சமிதி’ மற்றும் ‘மஹில சமிதி’ ஆகியவை பொது வாழ்க்கைக்குள் பிரவேசிக்கும் பெண்களுக்கும் பெண்களின் நலன்களுக்காக பணியாற்றுவதற்கும்  மிகவும் முக்கியமான நுழைவாயிலாக அமைகின்றது. ஆனாலும், இதுவரையில் பெண்கள் நம்பமுடியாத பல காரணங்களுக்காக சந்தேகத்துடன் நோக்கப்படும் நிலையும் காணப்படுகின்றது. உதாரணமாக, பிரச்சினைகள் தொடர்பாக பொதுவெளியில் பேசுதல், தொடர்ச்சியாக பயணம் செய்தல், களத்தில் ஆண்களுடன் இணைந்து பணியாற்றுதல் அல்லது பேஸ்புக் மற்றும் வட்ஸப் பயன்படுத்துதல் ஆகிய சந்தர்ப்பங்களைக் குறிப்பிடலாம். இந்தக் கட்டுரைக்காக கிறவுண்ட்வியூஸ் தளத்துக்கு நேர்காணல்களை வழங்கியவர்கள் கூறிய விடயங்களுக்கு அமைவாக இந்தத் தகவல்கள் கூறப்பட்டுள்ளன.

பெண்கள் சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பாக பேசும் சந்தர்ப்பங்களில் அவர்கள் மீது மிகவும் கொடூரமான கருத்துக்கள் விமர்சனங்களாக முன்வைக்கப்படுகிறது. மார்ச் 2017இல் பிபிசி சிங்கள சேவைக்கு செவ்வி ஒன்றினை வழங்கியிருந்த சட்டத்தரணி எர்மிஷா தேகல் அருவருப்பான கருத்துக்களை எதிர்கொண்டிருந்தார், முஸ்லிம் தனியாள் சட்டத்திருத்தம் தொடர்பாக அவர் பேசியபோது இது இடம்பெற்றது. 2017 ஆகஸ்ட்டில், முல்லைத்தீவில் காணாமல்போனோருக்காக தொடர்ச்சியாக வீதிகளில் போராடிவரும் குடும்ப அங்கத்தவர்கள் மத்தியில் மிகவும் முக்கியமானவராகக் கருதப்படும் மரியசுரேஷ் ஈஸ்வரி அரச புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தப்பட்டிருந்ததுடன் தாக்குதலுக்கும் உள்ளாகியிருந்தார்.

பாரபட்சமான சட்டங்களை நீக்குதல் மற்றும் துஷ்பிரயோகங்கள், தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாத்தல் முதல் உள்ளூர் அதிகாரிகள் மட்டத்தில் காணப்படும் ஊழல் மோசடிகளை ஒழித்தல் வரையான பல்வேறு விடயங்களுக்காக பணியாற்றும் மூன்று மாகாணங்களில் உள்ள பெண் ஆர்வலர்களிடம் கிரவுண்ட்விவ்ஸ் உரையாடியிருந்தது. தொழில்நுட்ப ரீதியிலான வன்முறைகளை எதிர்கொண்டவர்களுடன் இணைந்து பணியாற்றிய விடயம் மற்றும் வெறுப்புணர்வுக்காக தாம் இலக்கு வைக்கப்படுவதற்கு எவ்வாறு பதிலளித்தார்கள் என்பது தொடர்பாக அவர்கள் தமது அனுபவத்தினை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

முழுமையாக வாசிக்க இங்கு கிளிக் செய்யவும். அல்லது கீழே தரப்பட்டுள்ளதன் ஊடாக வாசிக்கவும்.

புலப்படாத தடைகள்